தெற்கு
ரயில்வேயில், காலியாக உள்ள, 5,450 'குரூப் டி' பணியாளர் பதவிகளுக்கு தேர்வு
செய்ய, 2013 செப்., 21ஆம் தேதி, ரயில்வே தேர்வு வாரியம் விளம்பரம்
வெளியிட்டது. இத்தேர்வு, 2014 நவ., 2ஆம் தேதி முதல், அய்ந்து கட்டங்களாக
நடந்தது.
இதற்கிடையே,
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், 'வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்
போது, இணைக்கும் சான்றிதழ் நகல்களுக்கு, அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெறும்
(அட்டஸ்டேஷன்) விதி நீக்கப் படுகிறது. இனிமேல், சான்றிதழ் நகல் களுக்கு,
அரசு அதிகாரிகளின் ஒப்பம் பெற வேண்டிய அவசியமில்லை' என,
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த
பதவிகளுக்கு, விண்ணப் பிப்போர், அத்தாட்சி பெற்ற சான்றிதழ் இணைத்திட
வேண்டும் என தென்னக ரயில்வே, ஆங்கில நாளிதழில் விளம் பரம் செய்தது. ஆனால்,
தமிழ் நாளி தழில் வெளியிட்ட விளம்பரத்தில், இந்த அத்தாட்சி முறை தேவை
யில்லை என செய்தி வெளியிட்டது. இதனை நம்பி, எந்த அத்தாட்சி பெற்ற
சான்றிதழும் இணைக்காத ஏறத்தாழ இரண்டரை லட்சம் தமிழக மாணவர் களின்
விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டுள்ளது.
ஆனால்,
ஆன் லைன் மூலமாக விண்ணப்பித்தவர் களுக்கு, இந்த அத்தாட்சி பெற்ற சான்றிதழ்
இணைக் காத நிலையில், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார்
போன்ற வட மாநிலங்களி லிருந்து ஆயிரக்கணக் கானோர் தமிழ் நாட்டில் உள்ள இந்த
பணிகளுக்கு விண்ணப்பித்து, அவர்களும் தென்னக ரயில்வே நிர்வாகத்தால்
அனுமதிக்கப் பட்டுள்ளனர். மொத்தம் பதினோரு லட்சம்பேர்
விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான தமிழக
இளைஞர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குரூப்
டி பதவிகளில் டிராக்மேன், போர்ட்மேன், சபாய்வாலா, கலாசி போன்ற பணிகள் பல
ஆண்டுகளாக அந்தந்த மாநிலத்திலிருந்துதான் தேர்வு செய்யப்படுவர். இந்த
பணிக்கு அடிப்படை சம்பளம் ரூ.1800. இது வேலை வாய்ப்பு பிரச்சினை என்
பதையும் தாண்டி, ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர், தமிழகத்தில் கடை நிலை
பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவதால், சமூக, மொழி பிரச் சினையையும்
உருவாக்குவது நிச்சயம்.
இதுகுறித்து,
ரயில்வே வாரியத்தை, விண்ணப்பதாரர்கள் பலர் அணுகிய போது, 'குரூப் டி'
தேர்வு அறிவிக்கும் போது, மத்திய அரசு, இந்த அறி விப்பை வெளியிடவில்லை.
எனவே, அரசு அதிகாரிகள் ஒப்பம் பெறாமல், விண்ணப்பிக்கப்பட்ட சான்றிதழ்கள்
நகலை ஏற்க முடியாது. எனவே, அவ் வாறு அனுப்பப் பட்ட விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டன' என, கூறி யுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பித் தோருக்கு ஒரு முறை, நேரடியாக விண்ணப்பித்தோருக்கு இன்னொரு முறையா?
இந்த அநீதியால் லட்சக்கணக் கான தமிழக இளைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த
பணிகளுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை தொடக்க நிலையிலேயே
நிராகரித்து விட்டு வட மாநிலத்தவர்களை கொண்டு பணியிடங்களை நிரப்பத்
திட்டமிட்டி ருக்கும் தென்னக ரயில்வே நிர்வாகத்தின் செயல்
கண்டிக்கத்தக்கதாகும்.
திட்ட மிட்ட சதியே
இது
ஏதோ, நிர்வாகக் குளறுபடிகளால் நடந்த ஒன்றல்ல என்பதை அதன் தொடர் நிகழ்வுகள்
எடுத்துக் காட்டுகின்றன. நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய அய்ந்து நாட்கள்
தேர்வுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை யான
கேள்வித்தாள்களைக் கொண்டு இத்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 10 லட்சம்
பேருக்கு ஒரே நேரத்தில் தேர்வு நடத்த முடியாத நிலையா இங்கு இருக் கிறது.
ஒரே வகையான கேள்வித் தாள்கள் இன்றி இருப்பதே, ஒன்று எளிது, ஒன்று கடினம்
என்ற பேத நிலையைத் தோற்று விக்காதா? இது ஒருபுறம்.
ஆனால்,
தமிழர்களுக்கு நடந்திருக் கும் அநீதி நமது கற்பனைக்கும் எட்டாத தாகும்.
தமிழில் எழுதியோர் ஒருவரும் நுழைந்துவிடவே கூடாது என்று திட்ட மிட்டு
இச்சதி நடத்தப்பட்டிருந்தா லொழிய இது சாத்தியமில்லை. மேற்கண்ட தேர்வுகள்
இங்கிலீஷ், ஹிந்தி, உருது, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய
ஏழு மொழி களில் கேள்வித்தாள்கள் வழங்கப்பெற்று நடைபெற்றுள்ளன.
அய்ந்து
நாட் களுக்கும் அய்ந்து வகையான கேள்வித் தாள்கள். ஆனால், இந்த அய்ந்து
கேள் வித் தாள்களிலும் தமிழ் மொழிபெயர்ப்பு எண்ணற்ற தவறுகளுடனும், பொருட்
பிழைகளுடனும், மோசமான மொழி பெயர்ப்புடனும், விடையளிக்கவே முடி யாதவண்ணம்
குழப்பம் தருவதாகவும், கேள்வியே தவறானதாகவும், விடைகள் புரியாததாகவும்
அமைக்கப்பட்டிருக் கின்றன.
கேள்வித்தாள் குழப்பங்கள்
ஒவ்வொரு
கேள்வித் தாளிலும் குறைந்த பட்சம் 10 முதல் 30 கேள்விகள் பிழையாக உள்ளன.
ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் தரமுடியவில்லை யென்றாலே ஆயிரக்கணக்கானோர்
பாதிக்கப்படுவார்கள். ஒரே கேள்வித் தாளில் 100 கேள்விகளில் 30 கேள்விகள்
பிழை யுடனிருக்கின்றன என்றால் தமிழில் எழுதிய யாராவது இப்பணிகளில் நுழைவதை
நினைத்துப் பார்க்க முடியுமா?
இந்திய
அரசியல் சட்டத்தில் என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டிருப்பதை கால அட்டவணை
என்று மொழி பெயர்த்து இதுவரை கேள்விப்பட்டிருக்கி றோமா? என்பதை சரத்து
என்போம்; ஆனால் இந்திய அரசியல் சட்டத்தின் கட்டுரை என்று யாராவது மொழி
பெயர்ப் பார்களா? லோக்சபையின் (சபாநாயகர்/ அவைத் தலைவர்) என்பதை பேச்சாளர்
என்றூ மொழி பெயர்த்தால் புரிந்து கொள்ள முடியுமா? இந்திய அரசியல்
சட்டத்துக்கே இந்த கதியா?
அறிவியல்
வார்த்தைகளின் நிலையை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. குறை எண் என்பதை
எதிர்ம எண் என்றும், பூரிதக் கரைசலை புனிதக் கரைசல் என்றும்,
மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் என்பதை அணுக்கதிர் எண் களின் இயக்க ஆற்றல்
என்றும், தோரி யத்தை மதாரியம் என்றும், பெருங்குடலை பெருங்கடல் என்றும்,
தேயிலை உற்பத்தியைத் தேனீர் உற்பத்தி என்றும், மிகை நிரப்பிக் கோணங்கள்
என்பதை துணைக் கோணங்கள் என்றும், நிறப் பிரிகையை ஒளிப்பரப்பீடு என்றும்,
எல்லையை வரம்பீடு என்றும், ஜாதகக் கதைகளை ஜாடகா என்றும், மாநிலத்தை தேசம்
என்றும், காற்றில் பரவும் விதைகள் என்பதை காற்றுக் கலைவால் உருவாகும்
விதைகள் என்றும், இறங்குவரிசையை ஏறுவரிசை என்றும், சீனப் பயணி யுவான்
சுவாங்கை ஹிஜன் ட்சங் என்றும், குடலுறிஞ்சிகளை விரலிகள் என்றும், விசையை
(Force) ஆற்றல் (Energy) என்றும்,Milk of Magnisia (மக்னீசியம்
ஹைராக்சைடு) - வை பாலில் மக்னீசியம் எதற்கு பயன்படுகிறது என்றும், சதுர
அளவு என்பதை வெறும் அளவு என்றும், தத்துவத்தை சூத்திரம் என்றும், நீரின்
திசை, எதிர் திசை என்பனவற்ற மேல் நிலை, கீழ்நிலை என்றும் குறிப்பிட்டால்
யாருக் காவது புரியுமா? எழுத முடியுமா?
மேலும்,
பல ஆங்கிலச் சொற்கள் அப் படியே தமிழ் எழுத்துகளில் தரப்பட்டுள் ளன.
ரேஞ்ச், ரூப் ஆஃப் தி வேர்ல்டு, ஃபங்கி என்பதையெல்லாம் எப்படிப் புரிந்து
கொள்வது? கணிதத்தில் கேட்கப் பட்டுள்ள கேள்விகள் எதையும் தமிழில் மட்டும்
படித்தால் யாராலும் புரிந்து கொள்ள முடியாத வண்ணம் கேட்கப் பட்டுள்ளது.
நாம் மேலே எடுத்துக் காட்டி யிருப்பவை ஒரு சிறு முனையே (Tips of the
lceberg) ஆகும்.
ஒவ்வொரு
கேள்வித் தாளிலும் இத்தனைப் பிழைகளா? அய்ந்து வகைக் கேள்வித் தாள்களை யும்
எடுத்துப் படித்துப் பார்த்தால் பெருங் குழப்பத்தைத் தவிர எதுவும்
மிஞ்சாது. (அவை அனைத்தும் தனியே வெளியிடப்படும்.)
தமிழர்கள் என்றால் இளக்காரமா?
மொழிபெயர்ப்பில்
சந்தேகம் இருந் தால், விடைகள் ஒன்றுக்கு மேற்பட் டவை சரியாக இருந்தால்,
ஆங்கி லத்தை எடுத்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்பது வழக்கத்தில் சொல்
லப்படும் நடைமுறையாகும். ஆனால், ஒன்றா, இரண்டா? கொடுக்கப்பட்டிருக் கும்
90 நிமிடங்களுக்குள் விடையளிக்க வேண்டிய 100 கேள்விகளில் 30 கேள் வியை
எப்படி சரிபார்ப்பது? அதற் கெப்படி நேரம், வாய்ப்பு? ஒவ்வொரு கேள்வியிலும்
குழப்பம் இருந்தால் எப்படி ஒருவர் பார்ப்பார்? ஆங்கிலத் தைப் படித்துப்
புரிந்து கொள்ள முடியும் என்றால், அவர் ஏன் தமிழில் தேர் வெழுத வரப்
போகிறார்?
இந்தப்
பிழைகளுக்கெல்லாம் காரணம் என்ன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
அனைத்துக் கேள்விகளும் இணையத்தில் இயங்கும் மொழி பெயர்ப்பு செயலிகளில்
கொடுத்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவை எவையும் ஒப்புக் கொள்ளப்பட்ட,
நிரூபிக்கப்பட்ட மொழிபெயர்ப்புச் செய லிகள் அல்ல. லட்சக்கணக்கானோர் எழுதும்
தேர்வு களுக்கு இப்படியோர் முறையில் மொழி பெயர்த்ததுடன், அதனைச்
சரிபார்க்காமலே வெளியிட்டு தேர்வு நடத்தக் கூடிய பொறுப்பற்ற தன்மையை
எப்படிப் பொறுக்க முடியும்?
கிஞ்சிற்றேனும்
அக்கறை இருந்தால், இப்படி நடக்குமா? இதை அக்கறை யின்மை என்றும் எளிதாக
நம்மால் ஓரங்கட்டிவிடமுடியாது. தென்னக ரயில்வேயில் தமிழ்நாட்டுப் பணியிடங்
களுக்கு தமிழர்களை பணியில் சேர விடக்கூடாது என்ற மாபெரும் சதியைத் தவிர
வேறு என்ன காரணம் இருந்து விடமுடியும்? கன்னடர்களும், தெலுங் கர்களும்
அதிகம் கவனம் செலுத்தாத இந்த தேர்வுகளில் வடநாட்டுக்காரர் களும்,
மலையாளிகளும் அதிக அளவில் பணியில் நுழைவது எப்படி?
இந்தியிலும்,
மலையாளத்திலும் இருக் கும் கேள்விகள் இப்படி குழப்பம் தராதவையாகத் தானே
இருக்கின்றன. இதனை எப்படி ஏற்க முடியும்? லட்சக் கணக்கான தமிழக இளைஞர்களின்
வாழ்க்கையை ஒழித்துக் கட்டப்படு வதை எப்படி ஏற்க முடியும்?
No comments:
Post a Comment