- கி.தளபதிராஜ்
தினத்தந்தி நாளிதழ் மதுரை வைத் தியநாத
அய்யரைப்பற்றிய கட்டுரை யொன்றை 8.7.14 அன்று வெளியிட்டி ருக்கிறது. மதுரை
மீனாட்சிஅம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை யும் நாடார்களையும்
அழைத்துக்கொண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பே முதன்முறை யாக 8.7.1939இலேயே
ஆலயப்பிரவேசம் செய்தவர் வைத்தியநாத அய்யர் என்று அக்கட்டுரை அவருக்குப்
புகழாரம் சூட்டு கிறது.
யார் இந்த வைத்தியநாத அய்யர்?
1923ல்
மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. அந்த
மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார் தந்தை பெரியார். அந்த நிகழ்ச்சிக்குத்
தலைமை வகித்தவர் உள்ளூர் ஆசாமி வைத்தியநாத அய்யர். "மாலை 6 மணிக்கு
காங்கிரஸ் கமிட் டியின் ஆதரவில் வக்கீல் சீமான் வைத் தியநாதஅய்யர்
அக்கிராசனத்தின் கீழ் மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு மாநாடு
கூடிற்று.அக்கூட்டத்தில் சீமான் ஈ.வி.ராமசாமி நாயக்கர் அவர்கள் ஆலயச்
சுதந்திரம் எனும் விஷயத்தைப்பற்றி பேசிய முக்கிய சாராம்சம்" எனக் குறிப்
பிட்டு "நாடார்குல மித்திரன்" பத்திரிக்கை 11.8.1923இல் தந்தை பெரியார்
அவர்க ளுடைய உரையை வெளியிட்டிருந்தது.
"நாடார் சகோதரர்களை உண்மையான காரணமின்றி
ஆலயத்திற்குள் பிரவேசிக்கத்தடுப்பதானது முட்டாள்தனமான காரியம். மதுரைக்
கோவிலானது கிழக்கேயிருந்து மேற்கே செல்லவும், மேற்கேயிருந்து கிழக்கே
வரவும் ஒரு பாதையாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. அம்மாதிரி செல்வதில் இதர
மதத்தினர் செல்லவும் நாம் சம்மதப்படுகிறோம் இதர மதத்தினருடன் இவ்வளவுதூரம்
சமத்துவம் கொண்டாடும் நாம் நமது நாடார் சகோதரருடன் சமத்துவம் கொண்டாட
வெறுப்படைவது எவ் வளவு தூரம் பைத்தியக்காரத்தனமும், அயோக்கியத்தனமும்
முட்டாள்தனமும் பொருந்திய தென்பதை யோசித்துப் பாருங்கள். நாடார்
சகோதரர்களின் பாதம் பட்ட தும் சுவாமி மறைந்துவிடுமென்றால் சக்தியற்ற
அக்கல்லை கட்டித் தொழு வதால் என்ன பிரயோஜனம் அடை வீர்கள்? அவர்கள்
கொடுக்கும் காணிக் கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம்.
அவர்கள் பணம் அக்
கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு
சுயராஜ்ஜியதாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையடைய பிரியம் உண்டு
என்றால், எல்லோரும் சமத்துவமடைய சம்பந்தம் உண்டு என்றால், இன்றே நாடார்
சகோதரர் களை ஆலயத்திற்கு அழைத்துச்செல்லத் தயாராயிருக்கவேண்டும். எந்தத்
தடைவரினும் நாம் எதிராடத் தயா ராயிருக்கவேண்டும். இல்லாது போனால் நாடார்
சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வ தில்லை என்று
கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்" என்று ஆலயப்பிரவேசத்தின் அவசியத்தை
வலியுறுத்தி தந்தை பெரியார் அவர்கள் நீண்ட உரையாற்றி யிருந்தார்.
கூட்டத்திற்குத் தலைமை யேற்ற வைத்தியநாத அய்யரோ தனது தலைமையுரையில் நாடார்
என்கிற வார்த்தையைக்கூட, மறந்தும் உச்சரிக் காதது நாடார் சமூகத்தினரிடையே
பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
"முடி வுரையில் அக்கிராசனர் சாதுரியமாய்
வக்கீல் சம்பிரதாயப்படி நாடார் என்னும் சொல்லையே சொல்லாது இந்திய
சகோதரர்கள் என்று பொதுவில் பேசி கூட்டத்தைக் கலைத்தார்" என்று நாடார்குல
மித்திரன் எழுதியது. 1922 லேயே தாழ்த்தப்பட்டவருக்கான கோவில் நுழைவு
உரிமைப் போராட் டத்தை கடுமையாக எதிர்த்தவர்தான் மேற்படி வைத்தியநாத அய்யர்
என்பது "திரு.வி.க வின் வாழ்க்கை குறிப்புகள்" நூலிலேயே
இடம்பெற்றிருக்கிறது.
திடீர் ஆலயப்பிரவேசம் ஏன்?
எம்.சி.ராஜா
கொண்டுவந்த ஆலயப் பிரவேச மசோதாவை அமல்படுத்த தயங்கிய ராஜகோபாலாச்சாரியாரை
கடுமையாக எதிர்த்து குடியரசு, விடுதலை இதழ்களில் தொடர்ந்து எழுதினார்
பெரியார்.
1939இல் எந்தவித முன்னறிவிப்பு மின்றி
யாருக்கும் தெரியாமல் கடைசி நேர இரவு பூஜைக்குப்பிறகு சில
தாழ்த்தப்பட்டவர்களோடு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைந் ததன்
மூலம் அகில இந்தியப் பத்திரிக் கைகளில் தன்னை விளம்பரப்படுத்தி கொண்டு
ராஜாஜி, காந்தி போன்றவர் களின் பாராட்டை பெற்றவர் வைத்திய நாத
அய்யர்.அய்யர்வாளின் திடீர் ஆலயப்பிரவேசத்திற்கு அவசியம் என்ன?
தமிழகமெங்கும் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் தலை தூக்கமுடியாமல்
கிடந்தது காங்கிரஸ் கட்சி. அதோடு கோவில் நுழைவு மசோதாவை அமல்படுத்தாத
ராஜாஜி அமைச்சரவை பார்ப்பனரல்லாதாரின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருந்தது.
அப்படி ஒரு மோசமான சூழலில் நடை பெற இருந்த மதுரை, இராமநாதபுரம் ஜில்லா
போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் மண்ணைக்கவ்வாமல் இருக்க ஏற் படுத்தப்பட்ட
ரகசியத்திட்டம்தான் வைத்தியநாத அய்யரின் திடீர் ஆலயப்பிரவேசம் என்று
"பெரியார் சுயமரியாதை சமதர்மம்" நூல் வரலாற்று ஆதாரங்களோடு
விளக்குகிறது. மதுரை வைத்தியநாத அய்யர்தான் மீனாட்சி அம்மன்
கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து கொண்டு முதன்முறையாக ஆலயப் பிர
வேசம் செய்ததாக அக்கட்டுரை குறிப் பிட்டிருப்பதிலாவது உண்மையிருக்கிறதா?
1921 லேயே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்
பார்ப்பனரல்லாதாரை அழைத்துகொண்டு ஜே.என். இராம நாதன், டி.வி.சுப்ரமணியம்,
ஜே.எஸ். கண்ணப்பன் ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். பெரும் கல்லடிக்கு
ஆளாகியதோடு அவர்கள் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டிருக்
கின்றன.
திருச்சி தாயுமானவர் மலைக்கு
ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்ட வர்களை அழைத்துகொண்டு நுழைந்த போது
ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையில் உருட்டிவிடப்பட்ட செய்தியை கேசரி இதழ்
பதிவுசெய்திருக்கிறது. திருவண்ணாமலை கோவிலுக்குள் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை
கோவிலுக்குள்ளேயே வைத்துப் பூட்டிய தகவல் குடியரசில் வெளிவந்திருக்கிறது.
1927ல் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் 1000க்கும் மேற்பட்ட
பார்ப்பனரல்லாதாருடன் கி.ஆ.பெ.விசுவ நாதன் கோவில் நுழைவுப்போராட்டம்
நடத்தியதை அறிவோம்.
மேலும் 1928இல் திருவானைக்கோவிலிலும்,
திருச்சி மலைக்கோவிலிலும் கோவில் நுழைவுப் போராட்டங்கள்
நடைபெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் திரு எஸ்.வி.ஆர் அவர்கள் தனது நூலில்
வரிசைப்படுத்தி யுள்ளார். கோவில் நுழைவுப்போராட்டத்தின் நீண்ட நெடிய
வரலாறு இப்படியிருக்க "குள்ளநரி" என்று பெரியாரால் அழைக்கப்பட்ட வைத்தியநாத
அய்யரை தூக்கிப் பிடிக்கும் ஒரு கட்டுரையை தினத்தந்தி வெளியிட்டு மகுடம்
சூட்டியிருப்பது வேதனையளிக்கிறது.
No comments:
Post a Comment