என் நண்பனுக்குத் திரு மணம் ஆகி பல ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதுவரை சோகத்துடன் இருந்த நண் பனும், அவனுடைய மனைவி யும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தையின் முதல் பிறந்த நாளை வெகு விம ரிசையாக கொண்டாடினார்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வெகுநாட்கள் நீடிக்கவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த சில நாள்களிலேயே நண்பனின் மனைவிக்கு பக்க வாத நோய் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நண்பர் எவ்வளவோ பணம் செலவு செய்தும் நோய் குணமாக வில்லை.
அவருடைய மனைவியை பார்த்து நலம் விசாரிக்க வந்த உறவினர்கள் நோயை குழந் தையுடன் சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிறந்த குழந் தைதான் தாயை நோயில் படுக்க வைத்துவிட்டது என்று ஒவ்வொருவரும் ஒவ் வொரு விதமாகப் பேசினார்கள். அதைக் கேட்ட நண்பர் வருத் தப்பட்டார். இப்படி எல்லோ ரும் நினைத்துவிட்டால், குழந்தை ஆசையே வராது என்று விரக்தியுடன் கூறினார். நோயாளியைப் பார்க்கச் செல் பவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறாவிட்டாலும், அவர்கள் மனம் புண்படும்படி பேசாமல் இருப்பது நல்லது.
- க.ஆறுமுகம், கழுகுமலை
தினத்தந்தி குடும்பமலர், 25.1.2015
21 ஆம் நூற்றாண்டில் நாடு நடைபோடும் காலகட்டத்தில் சந்திராயன் வெற்றி முழக்கம் கேட்கும் ஒரு தருணத்தில், செவ்வாய்க் கிரக ஆய்வில் அடுத்த கட்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதில் இப்படியும் செய்திகள் உலா வரு வதை நினைத்தால் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும். மதம் மக்களின் மூளையில் புகுந்து நச்சுக் கிருமிகளை உரு வாக்கி விட்டதே - என் செய்ய!
குழந்தை பிறந்ததற்கும், தாய்க்கு வந்த நோய்க்கும் முடிச்சு போடுவதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? மொட் டைத் தலைக்கும், முழங்கா லுக்கும் முடிச்சுப் போடுவதாகக் கேலியாகச் சொல்வார்களே - அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வருகிறது.
இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதத்தில்தான் இந்தக் குட்டிச் சுவர் க(ழு)தைகள் எல்லாம்!
ஏற்கெனவே நோய்வாய்ப் பட்டுள்ள ஒருவரிடம் இப்படி சொல்லுகிறோமே, அவர்கள் மனநலமும் பாதிக்காதா என்ற எண்ணம் இல்லாததோடு, இப்படிச் சொல்லுபவர்களின் எண்ணத்தில் மனிதநேயத்தின் மயிரிழைக் கசிவுகூட இல்லை என்பதை நினைக்கவேண்டும்.
அந்தக் குழந்தை வளர்ந்த நேரத்தில், நீ பிறந்துதான் உன் தாயைக் காவு கொடுத்தாய்! என்கிற அளவுக்கு இன்று போடப்படுகின்ற மூட விதை, வளர்ந்து மரமும் ஆகும் என்பதில் அய்யமில்லை.
இது ஒன்றா? இந்தத் திசையில் இன்னும் எத்தனை எத்தனையோ உண்டு. பெண் ணுக்குச் செவ்வாய்த் தோஷம் எனச் சொல்லி, தக்க வயது வந்தும், திருமணம் ஆகாம லேயே தடைபடும் தகவல்கள் நிறைய உண்டு. செவ்வாய்த் தோஷமுள்ள மாப்பிள்ளை யைத் தேடுவார்கள். இது மாமனுக்கு ஆகாது என்றும் கதை கட்டுவார்கள்.
ஜாதகப் பொருத்தம் பார்க்காதீர்கள்; குருதிப் பொருத்தம் பாருங்கள் - மணமக்களுக்கு உடற்சோதனை செய்யுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கூறிவரும் தேவை யான, அவசியமான கருத்தை இப்பொழுதாவது சீர்தூக்கிப் பாருங்கள்!
- மயிலாடன்
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment