மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள்!
திராவிடர் திருநாள் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் தமிழர்களுக்கு வகுத்தளித்த வரையறை!
திராவிடர்
திருநாளில் 2015ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது திரைப்பட இயக்குநர்
சுசீந்திரன், திரைப்பட இசையமைப்பாளர் டி. இமான், ஊடகவியலாளர் ப. ரகுமான்
ஆகியோர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்.
உடன்: இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், கழகத்
துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.
முத்துராமன், ஊடகவியலாளர் கோ.வி. லெனின் ஆகியோர் உள்ளனர். (18.1.2015,
பெரியார் திடல்)
சென்னை, ஜன. 19: தந்தை பெரியார் முத்
தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் நிறைவு நாள்
நிகழ்ச்சியில், மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள்,
பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர் கள் என்று தமிழர் தலை வர் கி.
வீரமணி அவர்கள் தமிழர்களுக்கான அடை யாளமாகக் குறிப்பிட் டார்.
திராவிடர் திருநாள் கொண்டாட்டங்கள்
என்பது, பெரியார் நெடுஞ் சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலையில் தொடங்கி,
ஊர்வலமாக வந்து பெரியார் திடலுக்குள் உள்ள சொரணையையும், இன உணர்வையும்
கொடுத்த தந்தை பெரியார் சிலை முன்பு நின்று ஆடிப்பாடி களித்துவிட்டு, பிறகு
உரியடித்திடலுக்கு வந்து நிலைபெற்று விளையாடு வார்கள். ஒருநாளை மிஞ்சியது
அடுத்த நாள் என்பதுபோல, மூன்றாம் நாள் (18.01.2015) நிகழ்ச் சிகள்
மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
தந்தை பொரியார் முத்தமிழ் மன்றம், பெரி
யார் நூலக வாசகர் வட்டம், பெரியார் பகுத் தறிவு கலை இலக்கிய அணி, பெரியார்
சுயமரி யாதை ஊடகத்துறை மற்றும் திராவிடர் வர லாற்று ஆய்வு மய்யம் ஆகியவை
இணைந்து நடத்தும் திராவிடர் திருநாளின் மூன்றாம் நாள்(18-.01.2015) நிகழ்ச்
சிகள் சரியாக மாலை 4.45க்குத் தொடங்கியது. நிகழ்ச்சியை அகில இந் திய
பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க கூட்டமைப் பின் பொதுச்செயலாளர் கோ.
கருணாநிதி, திரா விடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர். கலிபூங்குன்றன்
ஆகியோர் இணைந்து பறையடித்துத் தொடங்கி வைத்தனர்.
எப்படி ஒரு பொத்தானை அழுத்தியதும்
வெளிச்சம் வருகிறதோ அது போல, தொடங்கி வைத்ததும், எப்போது எப்போது என்று
உள்ளுக்குள் உலவிக் கொண்டிருந்த உற்சாகம், உடனே பற்றிக் கொண்டது. நாம்
மறந்து போன மயிலாட்டம், மாடாட்டம், கொக்காலிக் கட்டையாட்டம், கிழவன்
கிழவியாட்டம், கரகாட் டம், பறையாட்டம் என்று பெரியார் நெடுஞ்சா லையே ஆட்டம்
பாட் டம் கொண்டாட்டத்தால் களைகட்டி விட்டது. தொடக்க நிகழ்ச்சியில்
தெற்குநத்தம் சித்தார்த் தன், வீ. பன்னீர்செல்வம், வில்வநாதன், தமிழன்
பிரசன்னா, தாம்பரம் முத்தையா, திருவொற்றி யூர் கணேசன், தளபதி பாண்டியன்,
நயினார், பிரபாகரன், திலீபன், மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உற்சாக ஊர்வலம்!
சமர் கலைக்குழு வேலு வழங்கிய பறையிசையின்
தாளகதியில், தயங்கியவர் கள்கூட மயங்கிப் போய் தானாகவே களத்தில் இறங்கி
துள்ளிக்குதித்து ஆட்டம் போட்டனர். உற்சாக நதியே உருவெ டுத்தது போல ஆடிப்
பாடியபடியே ஊர்வல மாக வந்தனர். தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண் டாக
கொண்டாடுகின்ற சுயமரியாதையை நமக்கு ஊட்டிய தந்தை பெரி யாருக்கு நன்றி
காட்டும் விதமாக, அவரது சிலை யின் முன்பாக நின்று சின்னஞ் சிறுவர்களிலி
ருந்து பெரியவர்கள் வரை ஆடி மகிழ்ந்தனர். ஒவ் வொருவரின் முகங்களும் ஆயிரம்
வாட்ஸ் பல்பு போல ஒளிர்ந்தது.
எல் லோரும் சமத்துவமாக மொத்தமாக ஆடுகின்ற
இடமாக தந்தை பெரியா ரின் சிலை இருந்ததென் றால், உரியடித்திடல் வயது
வாரியாக, இணை யர்களுக்காகவும் என்று இட ஒதுக்கீடு செய்து, வியர்வை மழையில்
நனைந்தபடியே ஆடினர். அப்பப்பா... எங்கேயிருந் தது இந்த உற்சாகம்,
எங்கேயிருந்தது இந்த ஆனந்தம் என்று நினைப் பதற்கும், கேள்வி கேட்டு
பதிலைப்பெறுவதற்கும் நேரம் எங்கேயிருந்தது?
திராவிடர்
திருநாளில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் படத்தினை பிரபல திரைப்பட
இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் திறந்து வைத்தார். (18.1.2015, பெரியார்
திடல்)
சரியாக 6 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள்
தொடங்கின. மக்கள் வேண்டுமளவுக்கு உற்சா கத்தை வெளிக்காட்டிய பிறகு, அறிவை
மாந்துவ தற்கும் நாங்கள் சளைத் தவர்களல்ல என்பதைப் போல விறுவிறுப்பாக
எம்.ஆர். ராதா மன்றத் தினுள் வந்து தங்களுக் கான இருக்கையில் அமர்ந்து
கொண்டனர். வழக்கம் போல அரங்கமும் மேல் தளமும் நிறைந்தன. சமர் கலைக்குழுவின்
பறை யாட்டத்தைத் தொடர்ந்து, செ. கனகா அவர்கள் அனைவரையும் வரவேற் றுப்
பேசினார். மோகனப் பிரியா சிறப்பானதொரு அறிமுகவுரையை வழங் கினார். டெய்சி
மணி யம்மை தலைமையேற்றுப் பேசினார். அவர் தனது உரையில், தமிழ் தேசிய வாதிகள்
குழம்பிப் போயி ருப்பதாகக் குற்றம் சாட் டினார். நான் சாகின் றேனே என்று
கவலைப் படவில்லை. உங்களை யெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகின் றேனே
என்று வருந்திய தந்தை பெரியாரையா கொச்சைப்படுத்துவது என்று சாடினார். எத்
தனை இடையூறு வந்த லும் அடிக்க அடிக்க எழும் பந்து போல திரா விடர் கழகம்
துடிப்போடு எழுந்து நடைபோடும் என்று பதிலடி கொடுத் தார்.
எஸ்.எஸ்.ஆரின் வரலாறு - திராவிட இயக்கத்தின் வரலாறு!
இலட்சிய நடிகர் மறைந்த எஸ்.எஸ்.
ராஜேந்திரனின் உருவப் படத்தை திரைப்பட இயக்குநரும், சுயமரியா தைக்
குடும்பத்தவருமான எஸ்.பி. முத்துராமன் அவர்கள் திறந்து வைத்து,
அவரைப்பற்றிய அரிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மொத்தத்தில் எஸ்.
எஸ்.ஆரின் வரலாறு
திராவிட இயக்கத்தின் வரலாறு என்று பதிவு
செய்தார். பேரறிஞர் அண்ணா மறைந்த பிறகு, நிலைகுலைந்து போய் அவர்
மருத்துவமனையில் இருந்தபோது, தந்தை பெரியார் அவரைக் கடிந்து தன்னிலையடையச்
செய்த வரலாற்று குறிப்புகளை அசைபோட்டார். இவரைப் போல பல திராவிட இயக்கக்
கலைஞர்களின் பங்களிப் பையும் தவறாமல் குறிப்பிட்டார். அவரைப்போல
லட்சியத்தில் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம் என்று கூறி தனது உரையை
நிறைவு செய்தார்.
திராவிடர் திருநாள் பகுத்தறிவுக் கொம்பாக மாறியிருக்கிறது!
இயக்குநர் முத்துராமன் அவர்களைத்
தொடர்ந்து, ஊடகவியலாளர் கோவி. லெனின் திராவிடர் திருநாள் என்ற தலைப்பில்
கருத்துரை வழங்கினார். அவரின் உரை, நடைமுறையில் அர்த்தமில்லாத
கொண்டாட்டங்களில் சிக்கியுள்ள இன்றைய தலை முறையினரை, மீட்க இதுபோன்ற
ஆக்கபூர்வமான கொண்டாட்டங்களை நாம் கொடுக்க வேண்டியுள் ளது என்று
தொடங்கினார். சமத்துவம் இல்லாத வாழ்க்கை முறையில் ஏற்படும் மன அழுத்தங்களை
போக்க, கொம்பைத் தேடும் கொடி போல மனம் அலைபாயும் போது, இந்த திராவிடர்
திருநாள் பகுத்த றிவுக் கொம்பாக மாறியிருக்கிறது என்ற பொருளில் பேசினார்.
திராவிடர் திருநாளில் திதி கிடையாது, நாள் கிடையாது, எந்தப்புராணப்
பின்னணியும் கிடையாது. ஆகவே, இதுதான் தமிழ்ப்புத்தாண்டு. இதைத்தான் நாம்
கொண்டாடிக் கொண்டிருக் கிறோம். மற்ற மற்ற மாநிலங்களில் இதுவே சங்கராந்தி
ஆகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் பொங்கல் பொங்கலாக இருக்கிறது என்று நாட்டு
நடப்புகளைக் கொண்டு இந்த திராவிடர் திருநாளின் சிறப்புகளை பட்டியலிட்டார்.
வரலாற்று சாட்டையைச் சொடுக்கி தமிழ்தேசியவாதிகளை சுளுக்கெடுக்கவும்
தவறவில்லை அவர்.
தந்தை பெரியார் செய்த புரட்சியைப் போல வேறொன்று உண்டா?
வெள்ளை ஆடைக்குப் பதிலாக கறுப்பு ஆடை
யணிந்து வந்து அனைவரையும் வியப்பிலாழ்த்திய பேராயர் எஸ்றா. சற்குணம்
அவர்கள், இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கும் இறைவி அவர்களை சுட்டிக்காட்டி,
கறுப்பு உடையும் அதில் சிவப்பு நிற பொத்தானும் வைத்த ஆடை அணிந்து
வந்திருக்கி றேன் என்று சொன்னார். நானும் பெரியாரிஸ்ட்தான் என்று
கலகலப்போடு உரையைத் தொடங்கினார். தொடந்து அவர், தனக்கும் திராவிட
இயக்கத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்று உரிமை கொண்டாடினார்.
மேலும் அவர், கால்டுவெல் எழுதிய திராவிட ஒப்பிலக்கண நூலை தனது பேச்சுக்கு
ஆதாரம் காட்டி திராவிட இயக்கத்துக்கும் பாதிரியார்களுக்கும் இடையே உள்ள
உறவை நியாயப்படுத்தினார். பிரெஞ் புரட்சி, மாவோ புரட்சி, ரஷ்ய புரட்சி
என்று ஏதேதோ புரட்சிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்,
கத்தியின்றி ரத்தமின்றி தன்னுடைய கருத்துகளை மாத்திரம் பிரச்சாரம் செய்து,
இந்த சமூகத்தில் தந்தை பெரியார் செய்த புரட்சியைப் போல வேறொன்று உண்டா?
என்று அரங்கத்தினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியிலேயே
பதிலும் தொக்கி நின்றதால், அரங்கத்தினரிடமிருந்து அவர் கேள்விக்கு பலத்த
கைதட்டல்தான் பதிலாகக் கிடைத்தது.
பெரியார் திடலுக்கு வந்தால் ஆதாரத்தோடு பேசவேண்டும்
தொடர்ந்து அவர், இன்றைய பி.ஜே.பி. அரசின்
அவலங்களைச் சுட்டிக்காட்ட சில கருத்துகளை எடுத்து வைத்தார். முதலில் தாய்
மதத்திற்கு திரும்ப வேண்டும் என்பதைப் பற்றி சொல்லும் போது, 20 ஆம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தன்னுடைய தாத் தன் இந்து மதக்கொடுமையிலிருந்து
விலகி கிறித்துவ மதத்திற்குச் சென்ற போது, இந்து மதம் என்ற ஒன்றே இல்லையே;
நான் எந்த மதத்திற்குத் திரும்புவது? என்ற அர்த்தமுள்ள கேள்வியை எழுப்
பினார். பெரியார் திடலுக்கு வந்தால் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்று மெல்லிய
சிரிப்பலையை எழுப்பியவாறே, 1911 இல் ணிகி கெய்ட் என்பவர் எழுதிய நூலை
ஆதாரமாகக் காட்டினார். பிறகு, மனுதர்ம புத்தகத்தை படித்துக்காட்டி, அது
மனுதர்மமல்ல மனுஅதர்மம் என்று நிறுவினார். பிறகு, நிகழ்ச்சியின் சிறப்பு,
பெரியார் விருதின் மதிப்பு ஆகியவற்றின் தாக்கத்தால், எனக்கும் ஒருநாள் இந்த
கவுரவத்தைக் கொடுங்கள் என்று பலத்த சிரிப்பினூடே சொல்லி உரையை நிறைவு
செய்தார்.
சுயமரியாதை
குடும்ப விழாவில் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி
பெற்றவர்களுக்கு திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், கழகத் துணைத்
தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். (18.1.2015,
பெரியார் திடல்)
பெரியார் விருது வழங்கும் விழா
பேராயரின் உரையைத் தொடர்ந்து பெரியார்
விருது வழங்கும் விழா தொடங்கியது. ஊடகவியலா ளர் ப. ரகுமான், இசையமைப்பாளர்
டி. இமான், திரைப்பட இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர்களுக்கு தமிழர் தலைவர்
முறைப்படி பெரியார் விருதை அரங் கத்தினரின் பலத்த கரவொலிக்கிடையில்
வழங்கிச் சிறப்பித்தார். முன்னதாக விருது பெறும் பேராளர்கள் பற்றிய
காணொலிக்காட்சி திரையில் காட்டப்பட்டது. ஏற்புரை வழங்க வந்த ப. ரகுமான்,
நன்றி சொல்ல வார்த் தைகளைத் தேடினார். இறுதியில் பெரியார் திடலில்,
பெரியார் தொண்டர்களின் மத்தியில் எனக்குப் பெரியார் விருது பெற்றதை மிகப்
பெரிய கவுரவமாக நினைக்கிறேன் என்று முடித்தார். பெரியார் ஒரு புத் துலக
தொலை நோக்காளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் சொன்னதை அப்படியே சொல்லி, அதுதான்
பெரியாரைப்பற்றிய எனது பார்வை என்றார்.
சந்தை அடிப்படைவாதம், மத அடிப்படைவாதம்
1930களில் தமிழ்நாட்டில் தந்தை பெரியாரால் விரட்டி அடிக்கப்பட்ட மதன்மோகன்
மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதையும், கோட் சேவால்
சுட்டுக்கொல்லப்பட்டு காந்தி இறந்த போது தமிழ்நாடு அமைதியாக இருந்தததையும்
சுட்டிக் காட்டி, இன்றுள்ள நிலவரத்தையும் எடுத்துரைத்தார். மேலும் அவர்,
சந்தை அடிப்படைவாதம், மத அடிப் படைவாதம் இரண்டையும் எதிர்கொள்ள எப்
போதையும்விட இப்போதுதான் பெரியார் தேவைப்படு கிறார் என்று கூறி தனது உரையை
நிறைவு செய்தார்.
கருத்துச் சுதந்திரத்திற்கான தலைமையிடம்
பெரியார் திடல்!
அவரைத் தொடந்து வந்த திரைப்பட இசையமைப் பாளர் டி. இமான்
அவர்கள் பேசும் போது, எல்லா புகழும் இயேசு கிறித்துவுக்கே என்று
தொங்கினார். அப்போது, பேராயர்கூட மேடையிலிருந்த தமிழர் தலைவரைத் திரும்பிப்
பார்த்தார். அவரோ புன்னகைத்தார். தொடர்ந்து பேசிய இசையமைப் பாளர், தான்
வழக்கமாக இப்படித்தான் பேசத்தொடங் குவேன். இங்கே இப்படி பேசலாமா கூடாதா
என்று தயங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், இதுதான் எனது அடையாளம் அதனால் அதையே
பேசிவிட்டேன் என்று தயக்கத்தோடு கூறினார். இதற்காக அவர் தயங்கியிருக்க
வேண்டியதில்லை. இந்த இடமே கருத் துச் சுதந்திரத்திற்கான தலைமையிடம்தான்.
ஆகை யால், அவருடைய கருத்துச் சுதந்திரத்தை அங்கீகரித்த அரங்கம் அதை
ஆமோதித்து கைதட்டி வரவேற்றது. இதைத்தான் தமிழர் தலைவரும் புன்னகை மூலம்
அங்கீகரித்திருந்தார். அவரைத் தொடர்ந்து ஏற்புரையாற்ற வந்த இயக்குநர்
சுசீந்திரன், இந்த விருது கிடைத்தற்கு தன்னைவிட தனது தந்தை மிகுந்த
மகிழ்ச்சியடைந்ததை மிகுந்த நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். தான்
பணத்திற்காகவும், தன்னுடைய சுயத்திற்காகவும் வேலை செய்கிறேன். அப்படியே
தொடர்வேன் என்று கூறி அமர்ந்து கொண்டார்.
நாளுக்கு நாள் சிறப்பு கூடிக்கொண்டே போகிறது!
கருத்துரை, பெரியார் விருது, வாழ்த்துரை
முடிந்து தமிழர் தலைவர் நிறைவுரையாற்ற வருகை தந்தார். நாளுக்கு நாள்
சிறப்பு கூடிக்கொண்டே போகிறது என்ற ஒற்றை வாக்கியத்தில், இந்த மூன்று நாள்
நிகழ்ச்சியின் மாட்சியை ரத்தினச் சுருக்கமாகக்கூறி தனது உரையைத்
தொடங்கினார். எங்கள் இனத்தில் எல்லா திறமைகளும் பெற்றவர்கள்
இருக்கிறார்கள். இதுவரை அடக்கியடக்கி வைத்திருந்தார்கள். இன்று
வெளிவந்திருக்கிறார்கள். மூன்று நாட்களாய் மூன்று மூன்று முத்துக்களாய் 9
பேருக்கு பெரியார் விருதளித்து மகிழ்ந்திருக்கிறோம். முதலில் பெரியார்
திடலுக்கு துணிச்சலாக வந்ததற்கே இவர்களைப் பாராட்ட வேண்டும் என்றதும் பலத்த
கைதட்டல் எழுந்தது. மேலும் அவர், திரைப்படத்துறையை நாங்கள் நாடுவதில்லை
என்று சொல்லிவிட்டு, அது யாருக்கோ பயன்படுகிறது, எப்படியோ பயன்படுகிறது,
எதற்கோ பயன்படுகிறது என்று அதற்கான காரணத் தையும் தொடர்ந்து சொன்னார்.
இதையெல்லாம் மாற் றக்கூடிய வகையிலே, இதோ நாங்கள் இருக்கிறோம். வாய்ப்பு
இருந்தால் எங்களை சரியான முறையில் வெளிகட்டத் தயங்கமாட்டோம் என்று இவர்கள்
வந்திருக்கிறார்கள் என்று மூவரையும் சுட்டிக்காட்டி, அச்சமின்றி உங்கள்
பயணத்தைத் தொட ருங்கள் பெரியார் தொண்டர்கள் உங்கள் பின்னால் இருக்
கிறார்கள் என்று ஒரு பிரகடனம் போல சொன்னதும் கைதட்டலால் அரங்கம்
அதிர்ந்தது.
துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!
மேலும் விருது பெற்ற மூவரின்
தன்னம்பிக்கையை பெருக்கும் வகையில், துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பது
பழமொழி. துணிந்தவனுக்கு தோல்வியில்லை என்பது புதுமொழி என்று பழமையை
புதுப்பித்தார். மாட்டுப் பொங்கலைப்பற்றிச் சொல்லும்போது, ஏன் எருமை மாட்டை
சொல்ல மறுக்கிறோம் என்று தர்க்க ரீதியிலான ஒரு கேள்வியை எழுப்பி, அதற்கு
மனுதர் மத்திலிருந்தே ஆதாரத்தை எடுத்துக்காட்டினார். கருப்பு-,
-கருப்பர்கள், தஸ்யூக்கள், அடிமைகள் என்று ஆக்கப்பட்டதை
சுட்டிக்காட்டினார். தொடர்ந்து அவர் திரைப்படத் தணிக்கைத் துறை பி.ஜே.பி.
அரசில் படும்பாட்டை கண்டித்துப்பேசினார். மீண்டும் இவர்கள் மனுதர்மத்தை
சட்டமாக கொண்டு வரு வார்கள். அதை வெளிப்படையாகவும் பேசத் தொடங்கி விட்டனர்.
திலகர் ளிக்ஷீ றீணீஷ் வீ விணீஸீனீவீக்ஷீலீவீ என்று கூறியிருப்பதை
புத்தகத்தின் பக்கம் எண், வால்யூம் எண் என்று ஆதாரத்தோடு எடுத்துரைத்தார்.
இதற் காகவே தான், மனுதர்ம ஆராய்ச்சி நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்று பலத்த கையொலி களுக்கிடையேகூறி, இந்துத்துவ வாதிகளின் அடாவடி களுக்கு
அறிவு ஒன்றுதான் பதிலடி என்று சொல்லா மல் சொன்னார்.
மனுதர்மம் என்ன சொல்கிறது? அதேபோல,
வைதீகமாக இருப்பினும், லௌகீகமாக இருப்பினும் அக்கினியானது எப்படி மேலான
தெய்வமாக இருக்கிறதோ அப்படியே ஞானியாக இருந் தாலும், மூடனாக இருந்தாலும்
பிராமணனே மேலான வன் என்று மனுதர்மதின் 317 ஆவது சுலோகத்தில் உள்ளளதை
எடுத்துக்காட்டி, தெய்வாதீனம் ஜெகத் சர்வம், மந்திராதீனம் துதெய்வதம்,
தன்மந்திரம் பிராமணாதீனம் என்ற சமற்கிருத சுலோகத்தை படித்துக்காட்டினார்
மனு தர்மத்தில் பிராமணனின் உயர்வு எப்படி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை
நிறுவினார். 319 ஆவது சுலோகத்தின்படி பிராமணன் கெட்ட காரியங்களில்
பிரவேசித்தாலும் அவனே மேலான தெய்வமல்லவா என்பதையும் எடுத்துக் காட்டியதோடு,
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற திராவிட இனத்தின் பண்பாட்டையும்
நினைவுபடுத் திடத் தவறவில்லை அவர். மேலும் அவர் மக்களை எச்சரிக்கும்
விதத்தில், மீண்டும் பழைய கதை திரும்பும். அதை எதிர்கொள்கின்ற வலிமை
பெரியாரியத்திற்கு உண்டு. அதுபோலவே, நம் இனத்திற்கு பயன்படுகிற வகையில்
இந்த மூன்று முத்துக்களின் திறமைகள் இன்னும் வளர வேண்டும் என்று
வாழ்த்திவிட்டு, மொழியால், வழியால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள்,
பிறப்பால் மனிதர்கள், அறிவால் பகுத்தறிவாளர்கள் என்று ஒரு வரையறையுடன்
தனது உரையை நிறைவு செய்து கொண்டார். பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ்
அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில், துணைத் தலைவரின் ஆலோசனைகளோடு பெரியார்
திடல் மேலாளர் ப.சீதாராமன், அச்சக மேலாளர் க.சரவணன், நாராய ணன், பிரின்சு
என்னாரெசு பெரியார், இறைவி, ஓவியச் செல்வன், மாணிக்கம், தமிழ்க்குடிமகன்,
ஆனந்த், கலைமணி, சுரேஷ், வை.கலையரசன், இசையின்பன், மரகதமணி, பழனிகுமார்,
நா.பார்த்தீபன், சிறீராம், ரேவந்த், உடுமலை வடிவேல், மற்றும் பெரியார்
திடலில் பணிபுரியும் தோழர்களும் பின்னணியில் இருந்திருக்கிறார்கள்.
மூன்று நாள் அரங்க நிகழ்ச்சிகளை பெரியார்
வலைக்காட்சி இணையம் மூலமாக நேரலை செய்தது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் தவமணி, வழக்குரைஞர்கள்
குமாரதேவன், சென்னியப்பன், திருமகள், க. பார்வதி, கு. தங்கமணி, உமா
செல்வராஜ், இராணி ரகுபதி, க. வனிதா, பண் பொளி கண்ணப்பன், சு. அன்புச்
செல்வன், கு. செல் வேந்திரன், வெ. கார்வேந்தன், சு. நாகராஜ், பாசு. ஓவியச்
செல்வன், ஆ.இர. விசசாமி, நா. பார்த்திபன், மு. மாணிக் கம், மீஞ்சூர்
ராஜ்குமார், ப. எழிலரசி வீரமர்த்தினி, தென்றல், தமிழ்சாக்ரடிஸ், வெ.
ஞானசேகரன், வீ. பன்னீர் செல்வம், சத்ய நாராயணசிங், தமிழ்ச்செல்வன், கோபால்,
வே. மதிமாறன், பெரியார் மாணாக்கன், செல்வி, மணிமேகலை, விடுதலை புகைப்பட
கலைஞர் பா.சிவகுமார், பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் ஏராளமான இயக்கத்
தோழர்கள், பொது மக்களும் அரங்கம் நிரம்பி வழியும் அளவுக்கு கலந்து கொண்டு
கண்டு, உண்டு உய்த்து மகிழ்ந்த தோடு, அரசாங்கம் சித்திரையையே புத்தாண்டாக
வைத்துக்கொள் ளட்டும். மானமுள்ள தமிழர்கள் தை முதல்நாளையே
தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடி விட்டுப் போகி றோம். அதற்காக இன் னும் ஒரு
ஆண்டு காத்திருக்க வேண் டியிருக்கிறதே என்ற ஏக்கத் தோடு மூன்று நாள்
நிகழ்ச்சிகளையும் அசைபோட்டவாறே கலைந்தனர்.
முல்லை திணையை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற
இவ்விழாவில் காடுகளை நினைவூட்டும் வகையில் ஓசான் நிறுவனம் அமைத்திருந்த
மேடை வடிவமைப்பு அமைந்திருந்தது.
- சாமியார்களுக்குத் துணை போகும் மத்திய பிஜேபி அரசு குற்றவாளி சாமியார் பற்றிய திரைப்படத்தை வெளியிட அத்துமீறி அனுமதி
- தமிழர் என்றால் வெறும் மொழிப்பற்று உள்ளவர்கள். திராவிடன் என்றால், மொழியுணர்வோடு சொரணையும் இனப் பற்றும் உள்ளவர்கள்!
- கங்கையில் எங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்காட்சி
- கருநாடகத்தில் அனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு
- பெரியார் திடலில் திராவிடர் திருநாள் : மூன்று நாள் விழாவையும் காண வாரீர்!
- பொருளாதார அபாய கட்டத்தில் இந்தியா? இளைஞர்களே, மாணவர்களே கிளர்ந்தெழுவீர்!
- கொடுங்கோலன் ஆட்சி வீழ்த்தப்பட்டது
- 600 ஆண்டுகால நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடத்தைத் திருடிய அர்ச்சகப் பார்ப்பான் கைது!
- ஈழத் தமிழர்களே, ராஜபக்சேவைத் தோற்கடிப்பீர்!
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க.!
No comments:
Post a Comment