Friday, June 27, 2014

குடியரசு தலைவரின் இந்துமதப் பிரச்சாரம்

 
 
இந்தியப் பாரம்பரிய ஆராய்ச்சி அமைப்பை தோற்றுவித்த அவ்வமைப்பின் தலைவரான சுவாமி சிவானந்த சரஸ்வதி என்சைக்ளோ பீடியா ஆஃப் இந்துயிசம் என்ற இந்து மதக் கலைக் களஞ்சிய நூலை வெளியிட்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சில கருத்துக்களை கூறியுள்ளார்.

வேலை, திறமை, செல்வம் மற்றும் முன்னேற்றம் ஆகிய நான்கையும் கொண்ட முழுமையான நிலை, தர்மம், அன்பு, மோட்சம் ஆகிய நான்கும்தான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோள்கள் என்பதை இந்து மதத் தத்துவங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மனித செயல்பாட்டின் நடுநிலையான போக்குதான் மனித குலத்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை இந்து மதம் விளக்குகிறது.

இந்து மதம் என்பது பின்பற்றப்படும் ஒரு வழிமுறை மட்டுமல்ல; மெய்யறிவின் கூட்டமைப்பு. அதை விவரிக்க முடியாது; அனுபவிக்க மட்டும்தான் முடியும் என முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அனை வருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், புத்தொளி கிடைக்க வேண்டும்; யாரும் துன்பப்படவோ, வேதனையடை யவோ கூடாது என்பதுதான் இந்து மதத்தின் உயரிய தத்துவம். இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் - என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி புதுடில்லியில் பேசியுள்ளார் (தினமலர் 24.6.2014).

ஓர் இந்து மதக்காரர் என்கிற முறையிலும் அதில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் என்ற முறையிலும் பேசியுள்ளார் பிரணாப் முகர்ஜி என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அதைத் தாண்டி பெரும் பொருள் இருப்பதாகக் கருதுவதற்கு இடம் இல்லை. அவர் நிதி அமைச்சராக நிதி நிலை அறிக் கையை நாடாளுமன்றத்தில் அளிக்கும் போதேகூட பல இந்து மதக் கடவுள்களை அழைத்தது உண்டு. இதில் மதச் சார்பற்ற தன்மையை அவர் கடைப் பிடித்ததில்லை. முதலில் ஒரு கருத்து முக்கியமானது. இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; அதற்கென்று ஒரு நிறுவனர்; அதற்கென்று தனித்த ஒரு வேத நூல். அதன் தோற்றம் பற்றிய வரலாற்றுக் குறிப்பு ஏதும் இருக்கவில்லை.

யார் வேண்டுமானாலும் எதையும் சொல்லலாம்; அவை ஏற்றுக் கொள்ளப்படும். அவற்றில் முரண் பாடுகளுக்கோ பஞ்சமில்லை. முரண்பாடுகளை பலகீனமாக எடுத்துக் கொள்வ தற்குப் பதிலாக முரண்பாடுகளையும்கூட சிறப்பு அம்சமாகக் கொள்ளும் மனப்பான்மை இந்து மதவாதிகளுக்கு உண்டு. காரணம் அவர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை - இதனை ஒரு வகையில் சாமர்த்தியமாகவே கருதுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தன்னுரையில் எந்த ஓர் இடத்திலும் இந்து மதத்தின் கொள்கையில் சமத்துவத் துக்கு இடம் உண்டு என்று குறிப்பிடாதவரை மகிழ்ச்சி தான்.

குறிப்பாக இந்து மதத்தில் நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு என்று பொருளாகாது; அப்படி என்றால் வேத மறுப்புதான் இங்கு நாத்திகம்.

இத்தகைய நாத்திகர்களுக்கும் இந்து மதத்தில் இடம் உண்டு என்று வைத்திருப்பதானது எந்த வகையில் சரி?

வேதங்களை மறுத்து விட்டால் இந்து மதம் எங்கே இருக்க முடியும்? இதுபற்றி எல்லாம் மெத்த படித்தவர் களும், உயர் பதவிகளை அலங்கரிப்பவர்களும் ஏன் சிந்திக்கவில்லை?

பிறப்பின் அடிப்படையில் வருண தர்மத்தை ஏற்படுத்தி விட்டு - ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு வகை தர்மம் என்று அறுதியிட்டு விட்டு, அந்தத் தர்மத்திலும் ஏற்றத் தாழ்வு உண்டு என்று கோடு கிழித்துக் காட்டி விட்டு, அதற்குப் பிறகு அம்மதத்தில் நடு நிலைப் போக்கு என்று எப்படி சொல்கிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி?

அரசனுடைய கடமையே வருண தர்மத்தைக் காப் பாற்றுவதுதான் - வருண தர்மத்தை மீறினால் அரசன் தண்டத்தை (வன்முறையை) பயன்படுத்த வேண்டும் என்கிற ஒரு மதம் எப்படி அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக அமைய முடியும்?

தலை எழுத்தின்படி நடந்து கொள்! அதில் திருப்தி அடை! அப்படி நடந்து கொண்டால் அடுத்த ஜென்மத்தில் மோட்சம் நம்பு - என்பது ஒரு மதமா? சுரண்டலுக்கான ஒரு வகை தந்திர அமைப்பு முறையா? என்பதைச் சிந்திக்க வேண்டாமா?

தீண்டாமை என்பதேகூட க்ஷேமகரமானது என்று சொல்லக் கூடியவர் தான் இந்து மதத்தின் தலைவராக இருக்கக் கூடிய லோகக் குரு என்று போற்றக் கூடிய சங்கராச்சாரியார். அந்த சங்கராச்சாரியார்களைத் தண்டனிட்டுப் போற்றக் கூடியவர்கள்தாம் இந்நாட்டுப் பெரிய பதவிக்காரர்கள்! (காசியில் கங்கை நீரால் சங்கராச்சாரியாரின் காலைக் கழுவிக் குடிக்கவில்லையா அன்றைய குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்?)

குடியரசுத் தலைவராக இருக்கக் கூடியவர் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பற்றிய நூலை வெளியிடுவது கூட வேண்டாத ஒன்றுதான் - வேலியே பயிரை மேயலாமா?

 http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/82963-2014-06-27-10-28-21.html#ixzz35pomAGtb

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...