Thursday, August 29, 2013

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

தமிழர் தலைவர் கேள்வி


பாவ யோனியிற் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறுகிற கீதையை அருளியதாகக் கூறப்படும் கிருஷ்ணனுக்கு, விழா (ஜெயந்தி) கொண்டாட லாமா? - சிந்திப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாளை *(28.8.2013) கிருஷ்ணன் பிறந்த நாளாம்! கோகுலாஷ்டமி என்ற பெயரால் ஒரு நாள் அரசு விடுமுறை - அதுவும் மதச் சார்பின்மை முத்திரையை அரசியல் சட்டத்தின் முகப்பிலேயே ஏற்றிப் பிரகடனப்படுத்தியுள்ள அரசுகள் - விடுமுறை - பல கோடி ரூபாய்கள் நட்டம்! ஹிந்து மதத்தவரில் கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாடும் மதத்தில் ஒரு பிரிவினர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் பேன் குத்திக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டிருக்கும் பக்தி போதை ஏற்பாடு இது; மதச் சார்பின்மையை கேலிக் கூத்தாக்கும் செயல் இது!
பிள்ளை விளையாட்டே!
1. பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள். (ஹிந்து மதத்தில்) பிறப்பதும், இறப்பதும் எல்லாம் வள்ளலார் கூறியபடியே பிள்ளை விளையாட்டு அல்லாமல் வேறு என்ன?
2. கடவுள் கற்பனைதான் என்றாலும் மனிதர்களுக்கு ஒழுக்கத்தைப் பரப்ப இப்படி ஒன்று தேவையில்லையா? என்று கேட்கும் அதிமேதாவிகள் உள்ளனர். அவர்களைக் கேட்க விரும்புகிறோம்.
அ) கண்ணன் ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுத்த கடவுளா? சின்ன வயதில் வெண்ணெய் திருடி, பெரிய வயதில் குளத்தில் குளித்த பெண்களின் புடவைகளைத் திருடி, மரத்தின் மீதேறி அமர்ந்து, நிர்வாண நிலைப் பெண்களை அப்படியே நீரினை விட்டு வெளியேறிடச் சொல்லி, அதை ரசித்து, சுவைத்து, பெண் கேலியை முதன் முதலில் துவக்கி  வைத்தவன் - சராசரி மனிதன் கூட செய்ய வெட்கப்படும் செயலைச் செய்து, கிருஷ்ண லீலை என்று கொண்டாடுவது ஒழுக்கத்தை வளர்ப்பதா? ஒழுக்கத்தைச் சிதைப்பதா? பக்தர்கள் சிந்திக்கட்டும்!
சண்டை மூட்டிய கடவுள்!
ஆ) பகவத் கீதை உபதேசம் என்ற பெயரால் சகோதரர்களிடையேகூட சண்டை போர் துவக்கி ஒருவரை ஒருவர் அழிக்கும் வண்ணம் தூபம் போட்ட செயல் அருவருக்க, கண்டிக்கத்தக்க செயல்கள்.
(இ) வன்முறை மட்டுமல்ல, மனித குலத்தைப் பிளவுபடுத்தும் ஜாதி - வர்ண தர்மத்தை சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம் - நான்கு ஜாதிகளை நானே உண்டாக் கினேன்; நானே நினைத்தாலும்கூட ஜாதிக்கென்ற தர்மங்களை - குலதர்மத்தை - மாற்றிடவே முடியாது என்று கூறி, ஜாதி - வர்ணாஸ்ரமக் கொடுமையை நிலை நாட்டிய சமத்துவ விரோதியான ஒருவரைவிட சமூகத்திற்குக் கேடு செய்தவர்கள் யார் இருக்க முடியும்?
கோபப்படாதீர் - சிந்திப்பீர்!
இப்படிப்பட்ட மனித குலத்திற்குரிய சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிராகவும், பெண்களை பாவயோனிகள் என்று வர்ணித்தவருமான ஒருவரை கடவுளாக வணங்கிடுவது அறியாமை, மூடநம்பிக்கை காட்டுமிராண்டித்தனம் அல்லாது வேறு என்ன?
கோபப்படாமல் சிந்தியுங்கள் - பக்தி வந்தால் புத்தி போகும் என்ற பெரியார் மொழி எவ்வளவு சரியானது என்று உணருகிறீர்களா?
கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை
27.8.2013


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...