Tuesday, August 27, 2013

விமலாதித்த மாமல்லன் என்ற முகமூடியில் நரசிம்ம அய்யங்கார்கள் எச்சரிக்கை!

அம்பலப்படுத்துகிறார் தமிழர் தலைவர்
விமலாதித்த மாமல்லன் என்ற முகமூடியில் நரசிம்ம அய்யங்கார்கள் இணைய தளத்தில் உலா வருகிறார்கள் எச்சரிக்கை என்று தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
இரண்டு நாள்களுக்கு முன்பு, இணையத்தில் வந்த செய்தியை நண்பர்கள் எடுத்துக்காட்டினார்கள்.
இணையத்தில் உங்களைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது என்று சொன்னார்கள். இப் பொழுது பத்திரிகைகள், ஏடுகள், தொலைக் காட்சிகள், இணையத்தில் வருகின்ற செய்தி களைப் படித்து பதில் சொல்லவேண்டிய வாய்ப் பிருக்கிறது.
இப்பொழுது 18 வயது வந்தவர்களுக்கு வாக்குரிமை இருக்கிறது. 18 வயது நிரம்பியவர்கள் பெரும்பாலும் பொறியாளர்களாக இருக் கிறார்கள். இங்கே நம்முடைய அமைச்சர் அவர்களும், சிந்தனையாளர்களும் உரையாற் றும்பொழுது சொன்னார்கள், பெரியார் அவர்களுடைய உழைப்பு எந்த அளவிற்கு நம்மை எல்லாம் பண்படுத்தி இருக்கிறது; எத்தனை வழக்குரைஞர்கள், எத்தனை டாக்டர்கள், எத்தனை பொறியாளர்கள் என்று பெருமைபட கூறினார்கள்.
அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!
இன்றைக்கு 18 வயதானவர்கள் எல்லாம் எதற்கெடுத்தாலும் இணையத்தைத்தான் நம்பு கிறார்கள். கைபேசியிலேயே இணையத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
நம்முடைய இளைஞர்கள் இதனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏனென்றால், நம்முடைய இன எதிரிகள் இருக்கிறார்களே, குறிப்பாக பார்ப்பனர்கள், அரசியல் எதிரிகள் இவர்கள் இணைய தளத்தைத்தான் அதிகமாக நம்புகிறார்கள். அதனால் இணைய தளத்தைப் பயன்படுத்துவதற்கு நாம் கண்டிப்பாக பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்.
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்தானே தவிர, எமகண்டம் எல்லாம் எங்களுக்குத் தெரியாது.
பெரியார் நாட்குறிப்பில்  நல்ல நேரம் என்று போட்டு, 24 மணிநேரமும் என்று போட்டி ருப்போம்.
ஒருவர் அவசரப்பட்டு  என்னிடம் கேட்டார்; சார் நீங்ககூட கெட்டுப் போய்விட்டீர்களே, நல்ல நேரம் என்றெல்லாம் போட்டிருக்கிறீர்களே என்று.
அடுத்த வார்த்தையைப் பாருங்கள் என்று சொன்னேன்; 24 மணிநேரமும் என்று போட் டிருக்குமே. அப்புறம்தான் அவர் ஒப்புக் கொண்டார்.
இணைய தளத்தில் எந்த விஷமத்தை வேண்டுமானாலும் பரப்புவார்கள்;
கலைஞரைப்பற்றி, டெசோ அமைப்பைப் பற்றி, எங்களுடைய முயற்சிகளைப்பற்றி எதை வேண்டுமானாலும் அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள். நம்மாட்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள்.
இங்கிருந்து வெளிநாட்டிற்கு கணினித் துறை யில் வேலைக்குப் போனவர்கள் ஓய்வு நேரத்தில் உட்கார்ந்துகொண்டு, இணைய தளத்தில் திரா விட இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவது; திராவிட இயக்கத் தலைவர்களைக் கொச்சைப் படுத்துவது, தமிழின உணர்வாளர்களைக் கொச் சைப்படுத்துவது, அந்த உணர்வே தேசத் துரோகம் என்று சொல்வது,  ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையா? அதைப்பற்றிப் பேசக்கூடாது; பகுத்தறிவா? அதைப்பற்றிப் பேசக்கூடாது. பகுத் தறிவை மறுப்பதற்கு இப்பொழுது அவனுக்குத் துணிவில்லை.  அதனால் என்ன செய்கிறான் - பகுத்தறிவைப்பற்றி  பேசுவார்களே தவிர, அவர் கள் இரட்டை வேடம் போடுவார்கள்; அதை யெல்லாம் நீங்கள் நம்பாதீர்கள் என்று சொல் வார்கள்.
திட்டமிட்டு தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்
ஏன் இங்கே மணமகனாக உள்ள சாக்ரட்டீஸ் அவர்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் அமர்சிங் - கலைச்செல்வி ஆகியோர் மணமகள் தேடி அலைந்தார்கள்; இந்த மாதிரி கொள்கைக் குடும் பம் அமைந்ததும்தானே அதனை ஏற்றார்கள். அவர் நினைத்திருந்தால், பெரிய பணக்காரர்கள் குடும்ப சம்பந்தம் எல்லாம் தேடி வந்ததே, அதனை ஏற்றுக்கொள்வதற்கு இவர்கள் தயா ராக இல்லையே!
இதை நேரடியாகக் கேட்டால், நாம் மறுப்பு சொல்வோம். அதனால்தான் இதனை இணையத் தில் கொண்டு சென்றுவிட்டான்.
திராவிடத் தலைவர்களைப்பற்றி திட்டமிட்டு தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை இணையத்தில் வந்துள்ள செய்தியை படிக்கின் றேன் கேளுங்கள். இந்த இணைய தளம் யாரு டையது என்றால், விமலாதித்த மாமல்லன். இந்தப் பெயரைக் கேட்டவுடன், இவரைவிட தமிழறிஞர் வேறு யாரும் இருக்க முடியாது என்று நினைப்பீர்கள். இந்தப் பெயரிலேயே புத்தகம்; இந்தப் புனை பெயரிலேயே முழுவதும் இருக்கும். இவர்கள் எல்லாம் கையாள்கின்ற புதிய டெக்னிக். நேற்றுகூட மத்திய அமைச்சர் சிதம்பரம் சொன்னார், அவர்கள் வித்தையை கையாள்கிறார்கள் என்று; இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் உரையாற்றும்பொழுது சொன் னார்கள்.
அதுமாதிரி அவர்கள் கையாள்கின்ற வித்தை களில் ஒன்றுதான் இது.
நம்பினால் நம்புங்கள்!
விமலாதித்த மாமல்லன், தலைப்பிலேயே விஷமத்தனம்; இந்த அறிவார்ந்த அவைக்கு அதிகமாக விளக்கவேண்டிய அவசியம் இல்லை.
நம்பினால் நம்புங்கள்! இதுதான் தலைப்பு!
அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர் களில் பலர், அவர் மறைவுக்குப் பின் திமுகவை விட்டு மட்டுமல்லாது அரசியலில் இருந்தே விலகினர். அதற்குக் காரணம், எதற்கும் கருணா நிதிதான் காரணம் என்றாகிவிட்ட தற்காலம் போலல்லாது, இளம் கருணாநிதியின் முதிர்ச்சி யற்ற அதிரடிப் போக்கும் பழைய ஆட்கள் ஒதுங்கி நின்றதற்கு ஒரு காரணமாய் இருந்திருக் கலாம். அறத்திற்கு அப்பாற்பட்டு நடைமுறைப் பார்வையில் பழைய மதிப்பீடுகள், மதிப் பிடப்படத் தொடங்கிய காலம்.
திமுகவிலிருந்து அப்படி ஒதுங்கிக் கொண் டவர்களில் ஒருவர் என் சக ஊழியரின் உறவினர் என்பது பேச்சுவாக்கில் தெரியவந்தது. கருணா நிதி அவர்களே நேரில் சென்று கட்சியில் இயங்க அழைத்தும் நான் அண்ணாவுக்காகக் கட்சிக்கு வந்தவன், அவர் இல்லாத கட்சியில் என்னால் எப்படி இயங்கமுடியும் என்று தவிர்த்திருக்கிறார் நாசூக்காக. ஆனாலும் அடிப்படையில் தி.மு.க. காரராகவே வாழ்ந்திருக்கிறார்.
அண்ணாவுடன் அல்லது அண்ணாவிடம் அவர் என்னவிதமான தொடர்பில், நெருக்கத்தில் இருந்தார், அவரது பெயர் என்ன என்பது போன்ற எளிய விவரங்களைக் கூடப் பகிர முடி யாதபடி, நண்பரின் நிபந்தனை கட்டிப்போடு கிறது. இது அவரது தனிப்பட்ட குடும்பம் சார்ந்த நிகழ்வு என்பதும். அவர் இப்போது இல்லை எனினும் பொது வாழ்வே வேண்டாம் என ஒதுங்கி இருந்தவர் பெயர் பொதுவில் இழுபட வேண்டாமே என்கிற நண்பரின் வேண்டுகோள் காரணமாகவும் அவரது அடையாளத்தை முழு மையாகத் தவிர்க்கவேண்டி இருக்கிறது.
என்ன இருந்தாலும் பிரமுகர் அல்லவா என்று சேரன், தாமினி, கனகா  தந்தைபோல் சந்தியில் தான் குடும்பம் நடத்தவேண்டும் என எல் லோரிடமும் எதிர்பார்ப்பதும் முறையில்லை தானே. எனினும் அவருக்கு ஏதேனும் பெயர் கொடுக்காமல் எப்படி அவரைக் குறிப்பிடுவது? பெயர்களை தமிழுக்கு சீர்திருத்தி வைத்துக் கொள்ளும் மோஸ்தர் கொடிகட்டிப் பறந்த காலத்திலும் தந்தை வைத்த பெயரை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.
பெயரிலா இருக் கிறது கொள்கை என்று இயற்பெயருடன் வாழ்ந்த ராமசாமிக்கு, பெரியார் என்கிற பட்டப்பெயர் தானாகவந்து ஒட்டிக்கொள்ளவில்லையா! அது போல, வாசக வசதிக்காக அவரைப் பெரியவர் என்று மட்டுமே குறிப்பிடுவதுகூட, பலவிதத் திலும் பொருத்தம்தான்.
பெரியவர், தம் வீட்டுப் பிள்ளையின் திரு மணத்துக்குப் பெண் தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில், தி.க. வீரமணி அவர்களின் பேத்தி திருமணத்துக்கு இருப்பதாகத் தெரிய வரவே அவருடன் தொடர்புகொண்டிருக்கிறார். இரு வரும் பலவருடங்களாய் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்பதால் மகிழ்வுடன் அள வளாவத் தொடங்கிவிட்டனர். பெண் பார்க்க வரும் நாளையும் முடிவு செய்துகொண்டனர். அன்று மாலை ஒரு நான்கரை மணி வாக்கில் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் பெரியவர். நாலரை வேண்டாம் அன்றைய தினம் நாலரை ஆறு ராகுகாலம் எனவே அதற்கு அப்புறமாக வாருங்கள் என்றிருக்கிறார் திரு. தி.க. வீரமணி.
போனை வைத்த பெரியவர், வேறு எவரேனும் இதைச் சொல்லி இருந்தால் - நான் ஏற்கவில்லை எனினும், அவர்களது நம்பிக்கைக்கு மதிப் பளித்து, அந்த நேரத்தைத் தவிர்த்து இருப்பேன். எதிர்காலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந் தால், ராகுகாலத்தைத் தவிர்த்திருந்தால் அசம் பாவிதமும் ஒருவேளை தவிர்க்கப்பட்டு இருக் குமோ என்று எவர் மனமேனும் உறுத்தக்கூடும். எனவே அதைக் கருத்தில் கொண்டேனும் அவர் கள் விருப்பத்தை ஏற்று நடக்கலாம். அது ஒன்றும் பெரிய குற்றமுமில்லை. மூட நம்பிக்கைகளை விடச்சொல்வதே மனிதமேன்மைக்குதானே. மூச்சுக்கு மூச்சு மூடநம்பிக்கை எனப் பேசிக் கொண்டு இவன் போய் ராகுகாலம் எனச் சொன்னால் எப்படி? இவனோடு நமக்கென்ன சம்பந்தம் என்று, பெண் பார்க்கப்போக இருந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்டார்.
இது எப்போது நடந்தது ரொம்ப முன்பாகவா என்று நண்பரிடம் கேட்டேன். சேச்சே அவரது மகன் என்னைவிட ஓரிரு வருடங்கள் பெரியவன். இது இப்போதுதான், இரண்டாயிரத்தில் நடந்தது என்றார் நண்பர்.
நானும் நண்பருமாக, பெரியவரின் பெயரையும் திராவிட இயக்கத்தின் மற்றும் அண்ணாவின் முக் கியமான சில அடையாளங்களையும் போட்டு கூகுளில் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை.
என்று இணைய தளத்தில் போட்டிருக்கிறார்.
கொழுத்த ராகுகாலத்தில்தான் என்னுடைய திருமணம் நடைபெற்றது
முதலில் எனக்கு 2000-த்தில் திருமணம் ஆகக் கூடிய பெயர்த்திகள் யாரும் கிடையாது.
என்னுடைய துணைவியாரும் இங்கே இருக் கிறார்கள்; திருமணத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் எங்கள் திரு மணத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்குத்தான் - கொழுத்த ராகு காலத்தில்தான் நாங்கள் மாலையை மாற்றிக்கொண்டோம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நான் இதற்காக சான்றிதழ் ஒன்றும் வாங்கவேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும்பொழுதும் தேர்வுக்கு நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக ராகு காலத்தில்தான் செல்வோம்; ஏனென்றால், ராகுகாலத்தில்தான் கூட்டம் இருக்காது. மற்ற நேரங்களில் கூட்டம் இருக்கும்.
அந்த இணைய தளத்தில் பின்னே சொன்ன வீரமணி விவகாரத்திற்கும், கலைஞருக்கும் என்ன சம்பந்தம்?
விமலாதித்த மாமல்லன் என்கிற நரசிம்ம அய்யங்கார்
நண்பர்களே, விமலாதித்த மாமல்லன் தமிழன் அல்ல; இவருடைய சொந்த பெயர் என்ன வென்றால், நரசிம்ம அய்யங்கார். இவர் மத்திய அரசில் மிக முக்கியமான பதவியில் இருந்து கொண்டு, இந்தச் செயலை செய்கிறார் இணைய தளத்தில்.
ஆகவே, இவர்கள் மாதிரி இருக்கக்கூடிய பொறியாளர்களுக்கு, உங்களுடைய சொந்த வேலை மட்டுமல்ல; இந்த மாதிரி இருக்கக்கூடிய வந்த வேலை இருக்கிறது பாருங்கள், இன்றைய இளைஞர்கள் இணைய தளம் போன்றவைகளில் தங்களுடைய கவனத்தினை செலுத்தவேண்டும். எப்படி  மூட நம்பிக்கைகளை விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள் பாருங்கள். நேரடியாக நம்மை எதிர்க்க முடியாமல், அதனால் அவதூற்றினைப் பரப்புகிறார்கள். இதுபோல் எத்தனையோ செய்திகள் உண்டு!
எனக்கு தம்பியே கிடையாது!
எம்.ஜி.ஆர். அவர்கள் அரசாண்ட நேரத்தில், ஒரு பத்திரிகையாளர் எழுதினார்: வீரமணி அவர்கள் கூவம் காண்ட்ராக்ட் அவருடைய தம்பி பெயரில் எடுத்துக் கொடுத்தார் என்று.
எம்.ஜி.ஆர். அவர்கள் என்னை கேட்டார், என்னங்க, பத்திரிகையில் செய்தி வெளிவந் திருக்கிறதே என்று.
நீங்கதான் முதலமைச்சராயிற்றே, சம்பந்தப் பட்ட கோப்புகளையெல்லாம் நீங்கள் வர வழைத்துப் பாருங்கள்; அதுதான் மிக முக்கியம். இன்னொன்று, எனக்கு தம்பியே கிடையாது என்று சொன்னேன்.
பெயிலுக்கும்- - -ஜெயிலுக்கும் அலைகின்ற சங்கராச்சாரியார்!
இப்போது சமீபத்தில் வந்த செய்தி, வீரமணி யின் மனைவியாரும், கலைஞருடைய குடும்பத் தினரும் அடிக்கடி சங்கராச்சாரியாரை சந்தித் தார்கள் என்று செய்தி வெளிவந்தது.
நான் இதனை மறுத்து வழக்குத் தொடுத்தேன். வழக்கு நிலுவையில் இருக்கிறது.  நோட்டீசு அனுப்பினேன்; அதற்கும் எந்தவித பதிலும் இல்லை.
இந்த பெயிலுக்கும், ஜெயிலுக்குமாக அலைகிறார் பாருங்கள், அந்த சங்கராச்சாரியார்.
சங்கராச்சாரியாருடைய நிலையே இப்படி இருக்கிறது என்றால், சாதாரண நரசிம்ம அய்யங்கார் ஏன் செய்யமாட்டார்?
கல்வி அறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
எனவேதான் நண்பர்களே, நீங்கள் பண் பாட்டுப் படையெடுப்பை மட்டும் அல்ல, தவறான பிரச்சாரத்தை எதிர்க்கக் கூடிய அளவில், இன்றைக்குப் பொறியாளர்களாக இருக்கக்கூடிய நம்மவர்கள், தங்களுடைய வாய்ப் பைப் பயன்படுத்தி, அறிவைப் பயன்படுத்தி மிகச் சிறப்பான வகையிலே அவர்கள் வாழ்வதற்கு, இந்தக் கல்வி அறிவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,
இவர்கள் நல்ல குடும்பம்; இரண்டு குடும்பமும் இணைந்திருக்கிறது. இவர்கள் வாழ்வாங்கு வாழக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள்; பகுத்தறி வைத் துணைக் கொண்டவர்கள். நல்ல தமிழின உணர்வு கொண்டவர்கள். எனவே, ஒருவருக் கொருவர் புரிந்து விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். கைநிறைய சம்பாதிப்பீர்கள்; மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்வீர்கள்.
எல்லா மணவிழாக்களிலும் நான் சொல்வது போல, ஒரே ஒரு வேண்டுகோள்; அதுகூட அறிவுரை அல்ல; ஏனென்றால், இளைஞர்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வதில்லை. வேண்டு கோளாகத்தான் எல்லா மணவிழாக்களிலும் எடுத்துச் சொல்கிறேன்.
மணமக்களுக்கு ஓர் வேண்டுகோள்!
அந்த வேண்டுகோள் என்னவென்றால், யார் யாரெல்லாம் உங்களுக்கு வாழ்க்கையில் உதவி னார்களோ அவர்களை மறந்துவிடாதீர்கள். அந்த வரிசையில் முதற்கண் நீங்கள் நன்றி காட்ட வேண்டியது; மறக்காமல் பாசம் காட்டவேண் டியது உங்களுடைய பெற்றோர்களிடம்தான். அவர்களுடைய தியாகத்தினால்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள்; வாழ்ந்திருக்கிறீர்கள்; வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்; உயருகிறீர்கள். எனவே, பல குடும்பங்களிலேயே படிப்பு உயருகிறது; அதேநேரத்தில் பாசம் குறைகிறது என்கின்ற நிலை இருக்கக்கூடாது.
எனவே, உங்கள் குடும்பங்களிலேயே உங்கள் தாய், தந்தையருக்கு, உங்களை ஆளாக்கியவர் களுக்கு நீங்கள் என்றென்றைக்கும் நன்றி காட்டு பவர்களாக இருங்கள்.
அதற்கடுத்தபடியாக, உங்களுக்கு யார் உதவி செய்திருந்தாலும், அது தினையளவு இருந்தா லும், அதைப் பனையளவு நினைத்து நீங்கள் அதற்கு நன்றி காட்டுங்கள்; திருப்பி உதவி செய் யுங்கள்; அதன்மூலம் மகிழ்ச்சியை ஈட்டுங்கள்; இன்பத்தைப் பெறுங்கள், அதுதான் மிக முக் கியம்.
இல்லறம்- தொண்டறம்!
எனவே, ஒருவருக்கொருவர் புரிந்து, தொண்டறம் என்பது இல்லறம் - துறவறம் என்றுதான் பழைய காலத்தில் சொன்னார்கள்; பெரியார் காலத்தில்தான் அது மாற்றப்பட்டது. இல்லறம் - தொண்டறம் என்று. தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்ற சின்னதோர் கடுகு உள்ளம் இல்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம்மு டைய மக்கள் என்ற பெருமைமிகு வாழ்வு வாழுங் கள்; நல்ல அளவிற்கு சமுதாயத்திற்குப் பயன் படுங்கள்; தொண்டு செய்யுங்கள். ஒருவருக்கொரு வர் விட்டுக் கொடுத்து நீங்கள் வாழுங்கள்!
அண்ணா சொன்னதைத்தான் நாங்களும் சொல்கிறோம்!
அண்ணா அவர்கள் சொன்னதைத்தான் எல்லா மணவிழாக்களிலும் எங்களைப் போன்ற வர்கள் சுட்டிக்காட்டி வருகிறோம்; விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுப்ப தில்லை எனவே, சிறப்பாக வாழுங்கள்; மற்றவர் களுக்கு எடுத்துக்காட்டாக வாழுங்கள். நல்ல தொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்லி, ஒரு மனதாயினர் தோழி, திருமண மக்கள் வாழி! என்று வாழக்கூடிய அந்த வகையிலே, நீங்கள் சிறப்பான வாழ்வு வாழுங்கள்.
உங்கள் பெற்றோர்கள் எல்லாம் எப்படி உயர்ந்து நல்ல தொண்டை, கல்வித் தொண்டை, அறிவுத் தொண்டை இங்கே செய்கிறார்களோ, அதுபோல, கழகத் தொண்டையும் நீங்கள் சிறப் பாக, பகுத்தறிவைத் துணைகொண்டு செய்யுங் கள் என்று சொல்லி,
இருபெரும் தலைவர்களுக்கும் வீர வணக்கம்
இந்த மண முறைக்கு, நாங்கள் யார் தலைமை தாங்கினாலும், யார் முன்னிலை வகித்தாலும், தத்துவ ரீதியாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள், சுயமரியாதை திருமணம் எங்கே நடைபெற்றாலும் தலைவர், முன்னிலை வகிப்பவர், இத்திருமண முறைக்கு சட்ட வடிவம் கொடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள். எனவே, இருபெரும் தலைவர் களுக்கும் வீர வணக்கம் செலுத்தி, இங்கே இந்த மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
தஞ்சை சாக்ரட்டீஸ் - கலைமகள் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் (தஞ்சை, 18.8.2013)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...