Wednesday, July 3, 2013

மதச்சார்பின்மையின் இலட்சணம் இதுதானா?

இந்திய ரிசர்வ் வங்கி வைஷ்ணவதேவி உருவம் பொறித்த ரூபாய் நாணயத்தை வெளி யிட்டுள்ளது.
படத்திற்குமேல் சிறீமாதா வைஷ்ணவதேவி கோவில் வாரியம் என்று தேவனாகிரி மொழியில் எழுதுக்கள் இடம்பெற்றுள்ளன. படத்தின் கீழ்ப் பகுதியில் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. படத்துக்கும் கீழே 2012 என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
யார் இந்த வைஷ்ணவதேவி? எதற்காக ரூபாய் நாணயத்தில் பொறிக்கப்பட்டு இருக் கிறது?
யார் இந்த வைஷ்ணவதேவி? அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது!
1. வைஷ்ணவதேவி ஒரு மாயா தேவி. இவள் கருட வாகனத்தில் எழுந்தருளியவளாய் சங்கு, சக்கரம், கதை, வரதம் உடையவளாய் இருப்பாள்.
2. மத்தியான காலத்தில் தியானிக்கப்படும் சந்தியா தேவதை, யௌவனமுள்ளவளாய், வெண்ணிறத்தவளாய், வெண்பட்டுடுத்து வநமாலை, பூணூல், சங்கு சக்கரம் இடக் கரங்களிலும், கதை, அபயம் வலக்கரங்களிலும் உள்ளவளாய் கருட வாகனத்தில் பதுமாசனத்தில் இருப்பவளாய் மகாலக்ஷ்மி உருவமாய் தியானிக் கப்படுபவள் வைஷ்ணவதேவி என்று கூறுகிறது அபிதான சிந்தாமணி.
ஆக, இந்து மதத்தின் ஒரு பிரிவுக்குரிய வர்களால் வணங்கப்படும் கடவுளச்சிதான் இந்த வைஷ்ணவதேவி.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவாகவே கூறுகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட ஒரு மதத்தின் உட் பிரிவைச் சார்ந்த ஒரு கற்பனைப் பொம்மையை ரூபாய் நாணயத்தில் பொறிப்பது நாணயமா?
அரசமைப்புச் சட்டம் எதைத்தான் சொல்லட்டுமே! அதைப் பற்றிக் கவலையில்லை என்று கருதும் பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் இருக்கும் மட்டும் அவர்கள் வைத்ததுதானே சட்டம்.
இவர்கள் வைத்த சட்டத்தின்முன் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் எந்த மூலை?
1925 இல் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசியதை இப் பொழுது மறுமுறை நினைவு கூர்ந்து பாருங்கள்.
While Speaking at a public meeting at Salem E.V.Ramasamy Naiker said the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called Brahminocracy (A Hundred of the Hindu
page 337)
சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் இருக்கும் போதே, பார்ப்பனர்கள் பிரச்சினைக்கு ஒரு முடிவை ஏற்படுத்திவிடவேண்டும்; இல்லாவிடில் இந்தியாவில் உள்ள மக்கள் பார்ப்பன ஆதிக்கத்தின் கொடுங்  கோன்மையின் கீழ் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும் என்று கூறினார் என்று இந்து ஏடு வெளி யிட்ட நூறாவது ஆண்டு மலரில் இடம்பெற்றுள்ளது.
பார்ப்பன வல்லாண்மைக்கு பிராமிணோகிரசி என்ற சொல்லை புதிதாகக் கையாண்டுள்ளார் என்றும் இந்து ஏடு குறிப்பிட்டுள்ளது.
தந்தை பெரியார் கணித்துச் சொன்னது எத்தகைய உண்மை என்பதற்கு பார்ப்பனீயக் கலாச்சாரத்தின் வடிவமான வைஷ்ணவியின் உருவம் பொறித்த ரூபாய் நாணயம் வெளியிட்டு இருப்பது ஒன்று போதாதா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...