Thursday, July 4, 2013

ஆசிரியர் தகுத்தேர்வு-பணிநியமனத்தில் மாபெரும் சமூக அநீதி!

யாருக்கோ வந்த பிரச்சினை அல்ல;
ஆசிரியர் தகுத்தேர்வு-பணிநியமனத்தில் மாபெரும் சமூக அநீதி!
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின் மாணவர்களே, இளைஞர்களே
திரண்டு வாருங்கள்!
ல்லாயிரம் பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் இல்லை. ஆயிரக்கணக்கான பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே இருக்கின்றன. இதனால் நாட்டில் கல்வித் தரம் குறைந்துவிட்டது என்று ஒரு புறம் ஊடகங்கள் கூறுகின்றன; புள்ளி விவரங்கள் கூறுகின்றன; அரசும் ஒப்புக் கொள்கிறது.
நாடு முழுக்க 7 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் கல்வி கற்றவர்கள் பணிக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அரசு வைத்த ஆசிரியர் கல்வித் தேர்வுகளில் முறையாகப் படித்து, வெற்றுபெற்று சான்று பெற்றவர்கள். இவர்களுக்கு வேலை இல்லை. எப்படி இருக்கிறது இந்த முரண்பாடு?
ஆசிரியர் படிப்புக்கும் மேலாக ஒரு தகுதித் தேர்வு நடத்தப்படவேண்டும் என்றது மத்திய அரசு. ஆசிரியர் படிப்பு முடித்த பின்னர் தனியாக இப்படியொரு தேர்வு எதற்கு என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் எதிர்ப்புக் கிளம்பினாலும் இப்போது நாம் பேசப் போகும் செய்தி, அப்படி நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகள் -அவற்றின் முடிவுகள் - பணி நியமனங்கள் ஆகியவை சட்டப்படி நடந்திருக்கின்றனவா என்பது பற்றித்தான்.
1) ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கேற்ப எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து வகையான இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண்களில் தளர்வுகளை வழங்க தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் (NCTE) வகுத்துள்ள சட்ட திட்டம் அறிவுறுத்துகிறது.ஆந்திரா, கேரளா, அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா உள்ளிட்ட இதுவரை தகுதித் தேர்வு நடத்திய அத்தனை மாநிலங்களும் சமூகநீதி அடிப்படையில் தகுதி மதிப்பெண்களை வரையறுத்தபோதும், தமிழ்நாட்டில் மட்டும் அந்த சமூகநீதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளுடன் படித்த பார்ப்பனர் உள்பட உயர்ஜாதியினருக்கு வைக்கப்பட்டிருக்கும் அதே அளவு தான் பார்வையற்றோர் வரைக்கும் என்பது எப்படி சரியானதாகும்?
தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 19000 பேரில் கடுகளவு கூட மாற்றுத் திறனாளிகள் இல்லை. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இல்லவே இல்லை. அதுமட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்திலிருந்து படித்து மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் இதே போல சமூகக் காரணங்களால் ஒடுக்கப்பட்டவர்களே! அவர்களுக்குரிய உரிமையை வழங்க வேண்டுமென்று மத்திய அரசின் சட்டமே சொல்லும் போது தமிழக அரசு மட்டும் வழங்க மறுப்பது ஏன்?
2) முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை (PGTRB) நிரப்புவதற்கான போட்டித் தேர்வு முடிவுகளில் இடஒதுக்கீட்டில் குளறுபடியை ஏற்படுத்தி, முறைகேடு செய்து ஒடுக்கப்பட்டவர்களின் இடங்களை மறித்து உயர்ஜாதியினருக்கு ஒதுக்கியது. இதை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்து ரத்து செய்த பிறகும் (dt 21170 of 2012 dt: 1.10.2012) உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்த தாழ்த்தப்பட்டவர்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படாமல், அவர்களின் தனிப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது நீதிமன்றத்தையும், அரசியல் சட்டத்தையும் அவமதிக்கும் செயலாகும்.
3) 01.10.2012 அன்று வெளிவந்த இந்த தீர்ப்பின்படி, கடந்த 24-08-2012 அன்று வெளியிடப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பட்டியலும் நீதிமன்ற ஆணையால் செல்லாததாக ஆக்கப்பட்டுவிட்டது. ஆனால், அதன் அடிப்படையில் தான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் சமூகநீதிக்கும், நீதிமன்ற ஆணைக்கும் புறம்பானதாகும்.
4) தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மையோர் பள்ளிகள் ஆகியவை தாங்களே தகுதி வரம்பை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் தந்த உரிமையையும் தமிழக அரசு பறித்துக்கொண்டதால் 7 லட்சம் ஆசிரியர் கல்வி முடித்தவர்களுக்கு (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கிராமப்புரத்தைச் சேர்ந்தோர்) வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
5) தகுதித் தேர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய முடியாது. ஆனால், அதன் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்டப்படி அறிவிக்கப்பட வேண்டிய வகுப்புவாரியான காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட அறிவிக்கையை வெளியிடாமலேயே மூன்றே நாட்களில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 19000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முற்றிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது.
பணி நியமன இடஒதுக்கீட்டில், BC, MBC, SC, ST தவிர்த்து BC Muslim, SC அருந்ததியர் மற்றும் அனைத்துப் பிரிவினரிலும் மகளிருக்கு இடஒதுக்கீடு உண்டு. கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள், தமிழ் வழியில் பயின்றோர் ஆகியோருக்கும் இடஒதுக்கீடு உண்டு. இவை எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இப்படி ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாடு வரும் ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில்நடைபெறவுள்ளது. சமூக நீதியில் அக்கறைகொண்ட கல்வியாளர்கள், சமூக நீதி உணர்வாளர்கள், சட்ட அறிஞர்கள், பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள். இது ஏதோ ஆசிரியர் படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல.
சமூகநீதிக்கு தோண்டப்படும் இந்த சவக்குழி, நாளை உங்களையும் சாய்க்கலாம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், குறிப்பிட்ட தகுதித் தேர்வுக்கான மத்திய அரசின் சட்டமும் வழங்கியுள்ள உரிமை மிகத் தைரியமாக பறிக்கப்படுமேயானால், இடஒதுக்கீட்டுடன் அறிவிக்கை இன்றியே பணியிடங்கள் நிரப்பப்படுமானால், இதுவே முன்னுதாரணமாகக் கொண்டு இதே நிலை நாளை எந்தத் துறையிலும் நிகழலாம்.
பள்ளிக் கல்வியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில், ஆசிரியர் படிப்பு படித்து தயாராக இருப்பவர்களை ஒதுக்குவது, எந்த வகையிலும் பள்ளிக் கல்வியை வளர்க்காது.
தனியார் பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாது. நாளை உங்கள் பிள்ளைக்கும் ஆசிரியர் கிடைக்காமல் போகலாம்.
ஆசிரியர் படிப்புக்கான தேர்வில் மேலும் வெற்றிபெற்றவர்களை மீண்டும் மீண்டும் தகுதித் தேர்வு எழுதச் செய்வது மோசடியானது. தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்க முடியாது என்பது தான் உண்மை. போட்டித் தேர்வு வேறு; தகுதித் தேர்வு வேறு.
சமூக நீதியின் அடிப்படையைத் தகர்க்கும் இந்த நடைமுறை...
யாருக்கோ வந்த பிரச்சினை அல்ல; அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான பிரச்சினை. கல்வித் துறையில் ஒடுக்கப்பட்டவர்கள் நுழைவதற்கான மாபெரும் தடைக் கல்! அதனைத் தகர்த்தெறிய வாருங்கள்!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆசிரியர் தகுதித் தேர்வு - பணி நியமனம் குறித்த சமூகநீதி பாதுகாப்பு மாநாடு
ஜூலை 5,2013 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி பெரியார் திடல், சென்னை - 7
அனைவரும் வருக!
தொடர்புக்கு : 9444210999
9841578862, 9750134599
- திராவிடர் கழக மாணவரணி




இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

1 comment:

Anonymous said...

savungada kyalaa matavnlam nalla ayaa apanuku porakallaaa....?

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...