Wednesday, February 20, 2013

இப்படியும் சிலர் - எப்படியும் ஏற்றுத்தானே வாழுகிறோம்?


நாம் பழகும் நண்பர்களில் சிலரின் சுபாவமும் பிறரிடம் பழகும் பாங்கும் பற்பல நேரங்களில் மிகவும் விரும்பத் தகாதவைகளாகவும், ஏன், வெறுக்கத் தக்கதாகக்கூட இருக்கும்!
எனன்தான் நம்மோடு சேர்ந்து படித்த இளமைக் கால நண்பராக இருந்தாலும் பொதுவிடங்களில் அதற்கான உரிமையை எடுத்துக் கொள்வது அருவருக்கத்தக்கது. சிற்சில நேரங்களில் அது விபரீத விளைவுகளையும் உண்டாக்கி விடும் சூழலும் ஏற்படுவதுண்டு.
நமது இயக்கத்திலேயே முன்பு திராவிட மாணவர் கழகத்தினை உருவாக்கியவர் அவர். கடும் உழைப்பாளி, பி.ஏ. பட்டதாரி, வெள்ளை உள்ளம் கொண்ட வெகுளி.
ஈரோட்டுக் குருகுல வாசத்தில் அவரும் இருந்தவர்; அவர் மாணவர்களிடம் மிகவும் நெருங்கி வாஞ்சையோடு பழகியவர் என்றால் எல்லோரையும் வாடா, போடா என்று உரிமையுடன் உறவு கொண் டாடுவார்.
நாவலர், கலைஞர், பேராசிரியர், கவிஞர் கருணானந்தம், ஈ.வெ.கி. சம்பத், என்னைப் போன்ற சிலர் ஆகியோரை ஒருமையால் அழைப்பார்; அவன் எப்படி இருக்கான்? என்பார். கள்ளம் கபடமில்லாத கழகக் கடமை வீரர்தான். ஆனால்... மேலே குறிப்பிட்ட வர்கள் பெரும் பொறுப்பிலே இருக்கிற நிலையில் இவர் சந்திக்க வந்தபோது, இயக்கத் தொண்டர்கள் பலர் குழுமி யுள்ள இடத்தில் இவரும் வந்து, என்ன... அவன் இன்னும் வர்ல்லையா என்று ஒருமையில் சொன்னவுடன், அழுக்குச் சட்டை, சீவாத தலை இவற்றுடன் உள்ள உருவத்தில் - அங்கிருந்த சில புதுசுகள் கோபப்பட்டு அவரை அடிக்கவே பாய்ந்து விட்ட நிலையில், பழைய தோழர் ஓரிருவர் வந்து பயணியர் விடுதியின் முன் உள்ள கும்பலிலிருந்து இவரைப் பாதுகாக்கும் போது, சம்பந்தப்பட்டவர் வந்து காரில் இறங்கும்போது இவரை வாஞ்சையுடன் அழைத்தவுடன்தான், தாக்க முயன்ற தோழர்கள்வரை இவரைப் பற்றிய விவரங்களைப் புரிந்து கொண்டனர்!
என்றாலும் இங்கிதம் ஒன்று உண்டே! உள்ளம் தூய்மையானது. உடை அழுக்கானது. அவர் பேச்சின் நடை மெருகேற்றப்படாதது. பண்பின் இலக் கணத்தைப் புறந்தள்ளி, புல்லரிக்கும் நட்பின் வெளிப்பாடு - இருந்தாலும் பொதுவிடங்களில் நடந்து கொள்ள வேண்டிய நயத்தக்க நாகரிகம் - பண்பாடு என்று உண்டல்லவா!
நல்லவர்களில் இப்படியும் சில நேரங்களில் சில மனிதர்கள்!
இன்னொரு ரகம். வெளுத்த சட்டை, மடிப்புக் கலையாத உடை, வஞ்சகத்தை மறைத்து தொழுதகை  உள்ளவர்களாலும் தோகை விரித்தாடுபவர்களாகத் தங் களைக் காட்டிக் கொள்ளும் - உள்ளத்தில் நஞ்சு, உதட்டில் சிரிப்பு!
அவர்களை ஆங்கிலத்தில் Sadist என்பர். பிறரைத் துன்புறுத்தி தாம் இன்பங்காணும் ஒரு வகையினர்.
பலர் எதிரில் தம் நண்பர்களை மட்டந் தட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி காணும் விசித்திர விரியன்கள்!
ஏம்பா, முன்பெல்லாம் இப்படி இப்படிச் செய்து, எல்லோரையும் ஒருவகையாக ஏமாற்றுவாயே, அது இன்னமும் இருக் கிறதா? உன்னிடத்தில் என்பார் - ஏதோ உரிமையுடன் உறவு கொண்டாடுவதைப் போன்று. பிறரிடம் உள்ள குறைகளை தமது கண்களும் ஏதோ எக்ஸ்ரே கண்கள் போலவே அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்கும் மூளை இவருக்கு ஏக போகம் போலும் பேசி, அடுத்தவர்களை கொட்டிப் பார்த்து இன்பம் தேடும் குளவிகள் இவர்கள்!
உலக வாழ்வில் இப்படிப்பட்ட மனிதம் இல்லாத மனித உரு கொண்ட ஜந்துக்களிடம் கூட நாம் பழகிடத்தான் வேண்டியுள்ளது!
அதற்காக ராபின்சன் குருசோ வின் தீவு வாழ்க்கை வாழ முடியுமா என்ன?
என்றாலும் இவர்களின் துன்புறுத் தலிலிருந்து தப்பிக்க ஒரே வழி, முதல் தாக்குதல் அவர்மீதுதான் (வார்த்தை களால் சுடுதல்) என்பதைக் கையாளு பவர்களிடம் இவர்கள் ஒதுங்கிப் போய் ஓடியே விடுவார்கள்.
ஆனால் எல்லோருக்கும் அத்த கயை விசித்திர முறைகளை வீரியத் துடனும், விவஸ்தையுடனும் செய்து முந்திக் கொண்டு முறியடிக்க முடி யாதல்லவா? எனவேதான் அடக்க முடியாதவர்களிடம் அடங்கிப் போய்த் தீர வேண்டியவர்களாகி விடு கிறோம்.
அதில் நான் எப்போதும் தோற்ற கட்சிக்காரன்தான்; காரணம் அய்யா போதித்த மனிதாபிமானம், சுயமரி யாதையையும் தாண்டிய நிலையில் - நீங்கள் எவ்வகையோ என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...