Tuesday, December 25, 2012

உலகப் படைப்புப் பற்றிய பழைமையான மூட நம்பிக்கை!

கிரேக்கப் புராணத்தின்படி குரோ ணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத்தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தையின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால்தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.
பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக்கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீரிலிருந்து படைக்கவும் செய்தோம்

பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது.  அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்துவிட்டதே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...