Friday, November 2, 2012

கடவுளை நம்புவோர் எத்தனைப் பேர்?


அண்மையில் தி இந்து (16.9.2005) இதழில் மக்கள் எந்த அளவுக்குக் கடவுள், மத நம்பிக்கைக் கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு வெளியானது. 

அதில், நீங்கள் எந்த அளவு மதப் பற்றாளராக இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ஓரளவு பற்று கொண்டுள்ளேன் என  49 சதவிகிதம் பேரும், எனக்கு மதப் பற்றறு இல்லை என 14 சதவிகிதம் பேரும், அதிக பற்று கொண்டுள்ளேன் என 45 சதவிகிதம் பேரும் பதிலளித்துள்ளனர். 

வழிபாட்டிடத்திற்கு அவ்வப்போது செல்வீர்களா? என்ற கேள்விக்கு, வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செல்வேன் என 31 சதவிகிதம் பேரும், வாரம் ஒருமுறை செல்வேன் என 38 சதவிகிதம் பேரும், மாதத்திற்கு ஒரு முறை செல்வேன் என 18 சதவிகிதம் பேரும் மாதம் ஒருமுறையாவது செல்வேன் என 9 சதவிகிதம் பேரும் இருவாரத்திற்கு ஒரு முறை செல்வேன் என 4 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர்.


இன்றைய நாட்களில் இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு, சிலருக்கு உள்ளது என 45 சதவிகிதம் பேரும், அதிகமானவர்களுக்கு உள்ளது என 34 சதவிகிதம் பேரும் மிகச் சிலருக்கே உள்ளது என 21 சதவிகதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரையும் சேர்த்து 220 பேர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் இது. (ஆதாரம்: தி இந்து 16.9.2005)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...