Tuesday, November 27, 2012

தருமபுரியில் தாழ்த்தப்பட்டோர் காலனிகள் தீ வைப்பு!


ஜாதி அடிப்படையில் அணி திரட்டுவதை முறியடிப்போம் - ஒத்த கருத்துள்ளோர் ஒன்று திரளுவோம்!

பொதுத் திட்டத்தின்கீழ் ஓர் அணியாக செயல்படுவோம்!

திராவிடர் கழகம் கூட்டிய ஒத்த கருத்துள்ளோர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
சு. அறிவுக்கரசு, கலி. பூங்குன்றன், பொள்ளாச்சி உமாபதி, டாக்டர் இரவீந்திரநாத், பேரா. சுப.வீரபாண்டியன், தாமரைச்செல்வன் எம்.பி., தமிழர் தலைவர் கி. வீரமணி, பீமாராவ் எம்.எல்.ஏ.,  பாலாஜி, முனைவர் பெ. ஜெகதீசன், தருமபுரி ஊமை செயராமன் ஆகியோர் உள்ளனர்.
சென்னை, நவ.26- ஜாதி - தீண்டாமையை ஒழிக்கும் பணியில் ஒத்த கருத்துள்ளவர்கள் ஒன்றிணைந்து பொதுத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் ஜாதி வெறியர் களால் தாழ்த்தப்பட்டவர்களின் குடி யிருப்புகள் கொள்ளையடித்தும், தீ வைத்து எரித்தும் நாசம் செய்யப்பட்டன. 250-க்கும் மேற்பட்ட வீடுகள் (7.11.2012) சாம்பலாயின. பல கோடி ரூபாய் சொத்துக்கள் இழக்கப்பட்டன.
இந்தச் சூழ்நிலையில் ஜாதி - தீண் டாமை ஒழிப்பு என்பதை முன்னெடுத்துச் செல்லவேண்டியது காலத்தின் கட்டாய மாகிவிட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் கழகப் பொறுப்பாளர்களுடன் நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து வந்தார் (14.11.2012).
டிசம்பர் 9 ஆம் தேதி தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்றும் அன்றே அறிவித்தார். அதற்கான பணிகளைத் தோழர்கள் வேகமாக செய்துகொண்டும் இருக்கின்றனர்.
நேற்று மாலை சென்னை பெரியார் திடலில் தருமபுரி தீ வைப்பு - பின்ன ணியும்- தீர்வுகளும் எனும் தலைப்பில் சிறப்புப் பொதுக்கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர்.
ஒத்த கருத்துள்ளோர் கூட்டம்
அதற்கு முன்னதாக நேற்று மாலை 7 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இப்பிரச்சினையில் ஒத்த கருத்துள்ள கட்சிகளின், அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது.
தி.மு.க. சார்பில் தருமபுரி மக் களவை உறுப்பினர் தாமரைச் செல் வன், பொள்ளாச்சி உமாபதி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) சட்டப் பேரவை உறுப்பினர் பீமராவ், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீர பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர்

பாலாஜி, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் இரவீந்திர நாத், மேனாள் துணைவேந்தரும், திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான பேராசிரியர் பெ. ஜெகதீசன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெரிவிக்கப்பட்ட தகவல்கள் - கருத்துகள்!
1. திட்டமிட்ட வகையில் இந்த வன்முறை அரங்கேற்றப் பட்டுள்ளது.
2. பணம், நகை, பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இழப்பு மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்க்குமேல்.
3. பயின்று கொண்டு இருக்கக்கூடிய மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள் சாம்பலாகியுள்ளன.
இன்னும் எத்தனை தலைமுறை தேவைப்படும்?
4. ஒரு தலைமுறை உழைத்து வீடு கட்டி, ஓரளவு பொருளாதார வளர்ச்சியும் பெற்று வளர்ந்துள்ள எங்களின் முழு வாழ்வும் நாசமாக்கப்பட்டு விட்டது. எதிர்காலம் இருட்டாகவே உள்ளது. மீண்டும் நாங்கள் தலையெடுக்க இன்னும் எத்தனைத் தலைமுறை உழைக்கவேண்டுமோ என்று கண்ணீர் உகுத்தனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
5. 24 மணிநேரமும் கியூ பிராஞ்சு காவல் துறையால் கண்காணிக்கப்படும் அந்தப் பகுதியில் இப்படி திட்டமிடப்பட்ட வன்முறை நடத்தப்பட்டது எப்படி?
ஆறு மணிநேரத்துக்குமேல் நடைபெற்றுள்ள இந்த வன்முறையைக் காவல்துறை தடுக்கத் தவறியது ஏன்?
தமிழக அரசு இந்தப் பிரச்சினையை அரசியல் கண்கொண்டு பார்க்கக்கூடாது. சட்டப்படியான நடவடிக் கைகளை போதிய அளவில் எடுக்கத் தவறியுள்ளது.
ஜாதி வெறியைத் தூண்டும் பேச்சுகள்
6. ஜாதி வெறியைத் தூண்டும் பேச்சுகளை சில ஜாதிய அமைப்புகளின் முன்னணித் தலைவர்கள் பேசி வருவதும் இந்த வன்முறைக்கு முக்கிய காரணமாகும். இவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
7. அரசியல் பின்னணியும், நோக்கமும் இதில் முக்கிய இடம்பெற்றுள்ளன.
தாழ்த்தப்பட்டோர் ஓர் அணி - தாழ்த்தப்பட்டோர் அல்லாத ஓர் அணியை உருவாக்கும் போக்கு (Polarisation) காணப்படுகிறது. இது ஓர் ஆபத்தான போக்காகும். இலட்சியங்கள், கொள்கைகள், கோட் பாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பிறப்பின் அடிப் படையில் பேதம், பிளவு பேசும் ஜாதியை முன்னிறுத்துவது கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் மட்டுமல்ல, மனிதப் பண்புக்கு முற்றிலும் விரோதமும் ஆகும்; இதனை முறியடித்தாகவேண்டும்.
8. தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியும் ஜாதி வெறியாளர்களின் மத்தியில் பொறாமை உணர்வினை வளர்த்துள்ளது.
9. இவ்வளவு பெரிய கொடுமை நடந்ததற்குப் பிறகும் அது குறித்து ஒரு கண்டனத்தைக் கூடத் தெரிவிக்கா மலும், வருத்தம் தெரிவிக்காமலும் அதேநேரத்தில் அதனை நியாயப்படுத்துவோர் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
10. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இட ஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் கூடாது என்று குரல் கிளம்புவதைக் கவனிக்கத் தவறக்கூடாது. அதற்கு இடமின்றி பிரச்சாரப் பணி தொடரவேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர் ஜாதியினர் பெற்று இருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு இவற்றோடு ஒப்பிடும்போது இன்னும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.
சமநிலை - உரிய அளவினை எட்டும் வகையில் ஜாதிய அளவுகோல் தேவைப்பட்டே தீரும்.
அதேநேரத்தில் இட ஒதுக்கீடுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்; மற்ற எந்தப் பிரச்சினையிலும் ஜாதிய உணர்வு தலை எடுப்பது அனுமதிக்கப்படக் கூடாது. மருந்தில் விஷம் சேர்ப்பதுபோன்றது இட ஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோலாகும்.
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்கு குறிப்பிட்ட அளவில் (Inter-Caste Quota) சட்ட ரீதியாக அளிக்கப்படவேண்டும்.
11. தந்தை பெரியார் இறுதியாக 1973 டிசம்பரில் நடத்திய மாநாட்டில் முக்கியமாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது (Untouchability) என்ப தற்குப் பதிலாக ஜாதி (Caste) ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் செய்யப்படவேண்டும் என்ற தீர்மானம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவேண்டும்.
12. சென்னை பெரியார் திடலில் இன்று (25.11.2012) வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, துணைவரை இழந்தோர், மண முறிவு பெற்றோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான இணையர் தேடும் மன்றல் விழாவினை தமிழ்நாட்டின் இதரப் பகுதிகளிலும் விரிவுபடுத்தினால் மிகுந்த பயன் அளிக்கும் - நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும்.
13. உலகக் காதலர் தினமான பிப்ரவரி 14 - இந்துத்துவா அடிப்படைவாதிகளாலும், ஜாதி வெறியர் களாலும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது - விமர்சிக்கப் படுகிறது. அந்த நாளில் காதலை ஊக்குவிக்கும் நாளாக அனுசரிக்கலாம். ஜாதி ஒழிப்பு - காதல் ஊக்குவிப்பு நாளாக அனுசரிக்கலாம்.
14. ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பினை முன்னிறுத்த ஒத்த கருத்துள்ளவர்களை இணைத்துக் கூட்டு இயக்கமாக நடத்தவேண்டும்.
15. டிசம்பர் 9 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் தருமபுரியில் நடத்தப்பட உள்ள ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஒத்த கருத்துள்ளவர்கள் பங்குகொள்ள அழைப்பு விடுத்து, ஏற்பாடு செய்தல்.
16. மீண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, மீண்டும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின், இயக்கங்களின், அமைப்புகளின் பிரதிநிதிகளை பெரியார் திடலில் கூட்டி, கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் பொதுத் திட்டம் ஒன்றை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...