Tuesday, November 27, 2012

புதுவையில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்


தமிழர் தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
திராவிடர் கழக மாநாடு புதுவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க புதுவை சென்ற தமிழர் தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும். நாள் ஒன்றுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு புதுவை மாநில அரசு வட்டி செலுத்தி வருகிறது. கழுத்தை நெரிக்கக் கூடிய அளவுக்கு இது உள்ளது. மாநில அரசின் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல, தமிழ்நாட்டைப் போல புதுவையிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட உரிய முறையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும். அதற்கான நடைமுறைகளை மாநில அரசு மேற்கொள்ளவேண்டும்.
அதேபோல, புதுவையிலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக மாநில அரசு சட்டம் இயற்றவேண்டும்.
மாநிலத் தகுதி
மத்திய அரசு தென்னக மாநிலங்களில் நிலவும் மின் பற்றாக் குறையைப் போக்கிட உரிய மின் வழித்தடத்தை அமைக்கவேண்டும். வடநாட்டில் பெருத்த வெள்ளம் ஏற்பட்டு கடலில் சென்று தண்ணீர் வீணாகிறது. இதற்காக நதிகளை இணைக்க வலியுறுத்துவதைப்போல மின்சாரத்தையும் மிகையாக உள்ள இடங்களில் இருந்து உபரியாக உள்ளதை மற்ற மாநிலங்கள் பயன்படுத்தும் வண்ணம் தென்னக மாநிலங்களில் மக்களுக்குப் பயன்பட நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
காவிரி நதிநீர்
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும், கெஜட் செய்யாமல் இருக்கிறது. அரசிதழில் வெளியிட்டால்தான் சட்ட வலிமை ஏற்படும். புதுவை மாநிலம் காரைக்கால் பகுதிகளுக்கு 5 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும் உரிய பங்கு நியாயமான ஆதங்கமாகத்தான் இருக்கிறது.
எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை தீர்மானங்களாக மாநாட்டில் நிறைவேற்றி இருக்கிறோம். இதனை மத்திய - மாநில அரசுகள் நிறைவேற்றவேண்டுமென தமிழர் தலைவர் கேட்டுக் கொண்டார்.
உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், வீ. அன்புராஜ், புதுவை மாவட்டத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் இருந்தனர்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...