Thursday, October 11, 2012

குல்தீப் நய்யாரின் எச்சரிக்கை


ஆனந்தவிகடன் இதழில் (3.10.2012) பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அளித்த பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது.
கேள்வி: இந்திய ஜனநாயகத்துக்குச் சவா லான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?
பதில்: பசி இன்றைய இந்தியாவில் அரங்கே றும் அத்தனைப் பயங்கரங்களுக்குப் பின்னணி யில் பட்டினியோடு தூங்கப் போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்டவற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினை வாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித் தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடும். இன் னொரு முக்கிய காரணம் இந்துத் தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந் தியையே பழி வாங்கியது. திட்டமிட்டு அரங் கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான் களால் உருவாக்கப்பட்டவைதானே. சமீப காலமாக திரைக்குப் பின்னால் தென்படும் இந்துத்  தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் என்று கூறியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார்.
பசி வந்தால் பத்தும் பறக்கும் என்பது பட்டறிவோடு கூடிய உண்மையாகும்.
வன்முறைக்குக் கத்தியைத் தீட்டக் கூடிய வெறியை அது கிளப்பி விடும் என்பதில் அய்ய மில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்கள்மூலம் அந்தப் பசியைக் கப்பலேற்றி விடலாம்.
இரண்டாவதாக குல்தீப் நய்யார், இந்துத் தாலிபான்கள் பற்றி அதன் கோரத்தைப் பற்றி மிகச் சரியாகவே வலியுறுத்திக் கூறியுள்ளார்.
காந்தியாரின் குருதியையே அது குடித் திருக்கிறது என்பது சாதாரணமல்ல; அந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்தக் கொடியோர்கள் எப்படி நாட்டில் நடமாடுகிறார்கள் - அமைப்பையும் வைத்துள்ளனர்; ஏன் மத்தியிலும் ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பது உள்ளபடியே அதிர்ச்சிக் குரியது தான்.
காந்தியாரைச் சுட்டுக் கொன்று பசியாறிய அந்த காவிக் கூட்டம் 1992இல், 450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக்களான முசுலிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கில் கூடி அடித்து நொறுக்கவில்லையா?
அதற்குத் தலைமை தாங்கியவர்கள் சாதாரண மானவர்களல்லர். அக்கட்சிகளின் பெருந் தலைவர்கள்; பிற்காலத்தில் துணைப் பிரதமராக, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக, மாநில முதல் அமைச்சர்களாக ஆகியிருக்கின் றனர்.
இவற்றையெல்லாம் மனதிற் கொண்டுதான் குல்தீப் நய்யார். இந்தப் போக்கு இந்தியாவைக் கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விடும் என்று அபாய அறிவிப்பினைக் கொடுத்துள்ளார்.
குஜராத் இனக் கலவரத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். முதல் அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவரே தன் சட்டப் பேரவை உறுப்பினர் களை அழைத்து மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் தருகிறேன் - அதற்குள் சிறுபான்மை மக்களை வேட்டையாடுங்கள் - கொன்று குவியுங்கள் என்று உத்தரவிடுகிறார் என்றால் இந்த அநாகரிக, காட்டுவிலங்காண்டித்தனத்தை என்னவென்று சொல்லுவது!
இன்னும் சொல்லப் போனால் கோத்ரா ரயில் பெட்டி எரிப்புக் காரணமாக தீயில் எரிந்து பிணமானவர்களை அவரவர் ஊர்களுக்குக் கொண்டு செல்லுவது என்ற முடிவை மாற்றி, அத்தனைப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லுவது என்ற முடிவை எடுத்தவரே முதல் அமைச்சர் நரேந்திரமோடிதான் - அதனுடைய பாரதூர விளைவுகளை அறிந்துதானே, வேண்டுமென்றே, திட்டமிட்டு ஏற்பாடு செய்தார்?
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் குல்தீப் நய்யார் தன் மனதைத் திறந்து காட்டியுள்ளார். அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராத பொது நிலையாளர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
2014ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் இவற்றை நாட்டு மக்கள் மறக்கக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...