Sunday, October 7, 2012

பழைய பெயரும் பழகும் புதிய பெயரும்


பழைய பெயரும் பழகும் புதிய பெயரும்


அறிவோம் சென்னையை என்ற வகையில் சென்னை நகரம் பிறந்த கதை, வளர்ந்த கதை, விரிந்த கதை பற்றி, கடந்த ஒரு திங்களில், அறிந்து கொள்ள வேண்டிய, நல்ல பல செய்திகளை, ஊடகங்கள் வழங்கி வந்துள்ளன.
சென்னையின் பலப்பகுதிகளின் பெயர்களாக வழங்கும் முறைகளை நாம் அறிவோம். அந்தப் பெயர்கள் எப்படி பழக்கத்தில் வந்தன. அவற்றிற்கு பழைய பெயர்கள் இருந்தனவா? இது பற்றிய சில தகவல்களை டைமஸ் ஆப் இந் தியா (8.9.2012) இதழ் வழங்கியுள்ளதைக் காண்போம்.
லஸ்
மயிலாப்பூரின் ஒரு பகுதி லஸ், போர்ச்சுகீசியர் இந்தியாவை நோக்கி வந்த காலத்தில், சென்னைக் கடற் கரையை நோக்கி வரும் வேளையில், ஒரு தெய்வீக ஒளி அவர்களுக்கு வழி காட்டியாகத் தெரிந்ததாம். கடற் கரையை அடைந்த உடன் அந்த ஒளி மறைந்து விட்டதாம். கரை சேர்ந்த மாலுமிகள் அந்த இடத்தில் தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். அதை லஸ் தேவாலயம் என்றழைத்தனர். போர்ச்சு கீசிய மொழியில் லஸ் என்றால் ஒளி என்று பொருள். நாளடைவில் இந்த பகுதிக்கு லஸ் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி என்ற பகுதி பழைமையானதும், வரலாற்றையும் பெற்ற பகுதி கிழக்கிந்திய கம்பெனி, இந்தப் பகுதியில், தன் வசம் கொண்ட முதல் கிராமம். திருஅல்லிகேணி என்ற பெயர் ஆங்கிலேயர் அவர் மொழி கலந்த உச்சரிப்பில் திருவல்லிக்கேணி என்று பழக்கத்தில் வந்துள்ளது. பார்த்தசாரதி கோயிலுடன் சேர்ந்த அழகிய அல்லிமலருடன் கூடிய குளத்தின் பெயரே திருஅல்லிக்கேணி.
புனித ஜார்ஜ் கோட்டை
திருவல்லிக்கேணிப் பகுதியின் வடக்கில் அமைந்துள்ளது புனித ஜார்ஜ் கோட்டை ஏப்ரல் 23ஆம் தேதி புனித ஜார்ஜ் தினம். 23.4.1640 அன்று புனித ஜார்ஜ் கோட்டை திறப்பு விழா நடந்ததால் கோட்டைக்கு அந்த பெயர் வைக்கப்பட்டது.
வெள்ளை நகரம், கறுப்பு நகரம்
ஆங்கிலேய ஆட்சியின் துவக்க காலத்தில், கோட்டையின் உள்ளே, ஆங் கிலேயர்கள் மட்டும் குடியிருந்தனர். எனவே அந்தப் பகுதி, வெள்ளை நகரம் என்று வழங்கப்பட்டது. ஆங்கிலேயர் களுக்காக வேலை செய்து வந்த இந்தி யர்கள் பெரும் பகுதியினர், கோட் டைக்கு வடக்குப் பகுதியில் குடியிருப்புப் பகுதியை அமைத்து வாழ்ந்தனர். அந்தப் பகுதி கறுப்பு நகரம் என்று அழைக்கப் பட்டது. இந்த கறுப்பு நகரமே கூட திம்மண்ணா நகரம் என்று அழைக்கப் பட்டது. பெரி திம்மண்ணா அந்தப் பகுதியின் முக்கிய மனிதர். அவர் ஜார்ஜ் கோட்டைப் பகுதியை ஆங்கிலேயர் உரிமைப் பெறுவதற்கு உதவியாக இருந்தவர். இந்த திம்மண்ணா நகரம், அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர், அவரது முடிசூட்டும் விழாவிற்குப் பிறகு (1911) இந்தியா வந்ததின் நினைவாக பெயர் மாற்றம் செய்து ஜார்ஜ் நகரம் என்று அழைக்கப்பட்டது.
எழும்பூர்
தற்போது எக்மோர் என்று அழைக்கப்படும் பகுதி, பக்கத்துப் பக்கம்  இருந்த ஏழு குடியிருப்புப் பகுதிகளின் தொகுப்புப் பெயராக எழாம்பூர் என்று வழங்கப்பட்டதாகப் பரவலாகக் கருதப்படுகிறது.
பாந்தியன் சாலை
பொது மக்கள் குழுமும்கூடம் என்பது பேந்தியன் என்பதைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. இந்தப் பகுதி தற் போது அரசு அருங்காட்சியகத்தை உள் ளடக்கிய சில பகுதியைக் குறிக்கிறது.
சிந்தாதிரிப்பேட்டை
நெசவுத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த குடும்பங்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். சிறுதறியா ளர்கள் கிராமம் என்றழைக்கப்பட்டது. சிந்தாதிரிப்பேட்டை என்று மாற்ற மடைந்துள்ளது.
சேத்துப்பட்டு
செட்டியார்கள் தோட்டங்களுடன் கூடிய வீடுகளில் வாழ்ந்த பகுதி செட்டிபேட்டை என்று அழைக்கப் பட்டு இன்று சேத்துப்பட்டு என்று வழங்கப்படுகிறது.
மாம்பலம்
இந்த பகுதிக்கு இப்பெயர் வந்த கார ணம் பற்றி ஒருமித்த கருத்து வரவில்லை. இந்த பகுதி மாந்தோப்பாக இருந்த பகுதி என்ற பொதுவானகருத்து உள்ளது.
சைதாப்பேட்டை
சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், சைதாப்பேட்டை என்றாகியது.
பல்லாவரம்
பல்லாவரம் என்றழைக்கும் பகுதி முன்னதாக பல்லவபுரம் என்று அழைக்கப்பட்டது. பல்லவ மன்னர்கள் ஆட்சிப் பகுதியாக முற்காலத்தில் இருந்த வகையில் பல்லவபுரம், பல்லா வரமாக உள்ளது.
ஆக்கம்: மு.வி. சோமசுந்தரம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...