Friday, October 5, 2012

கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தரா?


தந்தை பெரியார் அவர்களின் 134 ஆம் ஆண்டு பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் நாளிட்ட தினமலர் ஏட்டில் ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது.
கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் தந்தை பெரியாரை வணங்குகிறேன் என்று தலைப்பிட்டு  தந்தை பெரியார் உருவப் படத் துடன் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் கீழ் இடம் பெற்றுள்ள வாசகமும் முக்கியமானது.
ஆன்மீகம் இல்லா மல் அறிவியல் இல்லை. அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதுதான் அந்த வாசகம். தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் அது.
விளம்பரம் என்பதால் தாங்கள் வெளியிட்டுள் ளோம் என்று தினமலர் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும். அது எப்படியோ தொலையட்டும்!
ஆனால் அதில் வெளி வந்துள்ள வாசகங்கள் சரியானதுதானா?
பெரியார் கறுப்புச் சட்டை அணிந்த விவேகா னந்தர் என்பது எப்படி சரி ஆகும்?
இந்து என்று சொல் லாதே, இழிவைத் தேடிக் கொள்ளாதே என்று சொன்ன தந்தை பெரியார் எங்கே? இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்பிய விவேகானந்தர் எங்கே?
ஒரு முறை அமெரிக்கர் ஒருவர் தந்தை பெரியாரைச் சந்தித்தார். அப்பொழுது விவேகானந்தரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று தந்தை பெரியார் அவர்களிடம் அந்த அமெரிக்கர் கேட்டபோது, பட்டென்று அளித்த பதில் - அந்த ஆள் ஒரு கிறுக்கன் மாதிரி. இப்படியும் அப்படியு மாகப் பேசியவர் என்று பதில் சொன்னார்.
அப்படிச் சொல்லாதீர் கள். எங்கள் அமெரிக்கா விலேயே விவேகானந்த ரின் நூற்றாண்டு விழா வைக் கொண்டாடுகிறோமே? என்றார்.
அவ்வளவுதான், முட்டாள்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தமா? என்று செவுளில் அறைந்தாற் போல் தந்தை பெரியார் சொன்னாரே பார்க்கலாம் - பொறி கலங்கிப் போனார் அந்த அமெரிக்கர்!
உண்மை இவ்வாறு இருக்க, தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில் பெரியாரின் படத்தைப் போட்டு, கறுப்புச் சட்டை அணிந்த விவேகானந்தர் என்று விளம்பரம் செய்தி ருப்பது அசல் திரிபுவாத மாகும்.
பார்ப்பனர்கள் பற்றி தந்தை பெரியார் சொன் னது போல ஒன்றிரண்டு விவேகானந்தர் சொல்லி யிருக்கலாம். அதை வைத் துக் கொண்டு பெரியாரும் விவேகானந்தரும் ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட முடியாதே!
அந்த விளம்பரத்தில் இடம் பெற்ற இரு வாச கங்கள் கோணிப் பைக் குள்ளிருந்து பூனை வெளியில் வந்துவிட்டதைக் காட்டக் கூடியதாகும்.
ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் இல்லையாமே! ஏதாவது புரிகிறதா? சூடான அய்ஸ் கிரீம் என்று சொல்வது போல் இல்லையா?
அறிவியல், சந்திரனை பூமியின் துணைக் கோள் என்கிறது. ஆனால் ஆன் மீகமோ குரு பத்தினியின் கற்பினை அழித்தவன் சந் திரன் என்கிறது. குருவின் சாபத்தால் சந்திரன் தேய்கிறான் - ராகு, கேது என்கிற பாம்பு சந்திரனை விழுங்குகிறது. அதுதான் கிரகணம் என்கிறது ஆன்மீகம்.
பூமியின் சுழற்சியால் சூரியனின் ஒளி சந்திரனில் விழாமல் தடுக்கப்படுவ தால் கிரகணம் ஏற்படு கிறது என்கிறது அறிவி யல். முரண்பட்ட இரண்டும் எப்படி ஒன்றாகும்?
அறிவியல் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என் பதை இப்படி எடுத்துக் கொள்ளலாம்.
அறிவியலை வைத்துத் தானே ஆன்மீகத்தின் பிழைப்பு நடக்கிறது! அறி வியல் நன்கொடையான தொலைக் காட்சியில் காலையிலிருந்து சோதி டம், வாஸ்து, எந்த நிறத்தில் உடை, எந்த நிறத்தில் மோதிரக் கல் அணிவது உட்பட எல் லாம் பிரச்சாரம் செய்யப் படுவது இல்லையா?
கம்ப்யூட்டர் சோதிடம் என்கிற அளவுக்கு வயிற் றுப் பிழைப்பு நடக்க வில்லையா?
ஆரிய மதத்தின் ஆணி வேரை அசைத்த புத்தரையே மகாவிஷ்ணு வின் பத்தாவது அவ தாரம் ஆக்கிய பார்ப் பனர்கள் கொஞ்சம் நாம் அசந்தால் தந்தை பெரியாரையும் அவதாரப் புருஷர் ஆக்கி விடுவார் கள். அதன் ஒரு முன் னோட்டம்தான் (Feeler) இந்தத் தினமலர் விளம்பரம்!
எச்சரிக்கை!
Adobe Flash Player not installed or older than 9.0.115!
Get Adobe Flash Player here

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...