Friday, September 14, 2012

கல்கியின் இரு பதில்கள்


கல்கி வார இதழ் (16.9.2012) இரண்டு கேள்விகளுக்கு இரண்டு பதில்களை அளித்துள்ளது.
கேள்வி: தமிழரசன், தமிழரசி எனத் தமிழ் நாட்டில் பெயரைச் சூட்டுவதுபோல் மற்ற மொழிக் காரர்கள் தங்கள் மொழியை முன்னிலைப்படுத்திப் பெயர் சூட்டுவதில்லையே - ஏன்?
பதில்: தமிழ் மொழியின் தொன்மை, இனிமை குறித்து மகாகவி பாரதி போன்ற பலரின் கவிதைகள் நம் உள்ளத்தில் வேரூன்றியது ஒரு காரணம். அதனால் தாய்மொழிப் பற்று அதிகரித் தது. தமிழை வைத்து திராவிடக் கட்சிகள் அரசியல் பண்ணியது இரண்டாம் பட்சமான மற்றொரு காரணம்.
என்று கல்கி பதில் கூறுகிறதே! எதைச் சிந்தித்தாலும், சொன்னாலும், எழுதினாலும் பார்ப்பனர்களுக்கே உரித்தான அந்தக் குணம் மட்டும் ஜென்மத்தில் பிறந்தது  எதைக் கொண்டு சாற்றினாலும் போகவே போகாது.
பாரதியார் என்ன தமிழ் உணர்வை ஊட்டினார்? ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறைமேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று பாரதி பாடியதில் உள்ள பார்ப்பனத்தனத்துக்கு விளக்கமும் தேவையோ!
அடுத்து ஆன்ற மொழிகளிலுள்ளே ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன் எனும் வரிகளில் செத்துப் போன ஆரிய மொழியான சமஸ்கிருதத் துக்கு நிகரானது தமிழாம்.
சரி, இன்னொன்றையும் கேட்கலாம்; பாரதியார் தான் தமிழுணர்வை ஊட்டினார்; அதனால்தான் தமிழரசன், தமிழரசி என்று பெயர் சூட்டிக் கொள்கின்றனர் என்பது உண்மையானால், பாரதி ஊட்டிய (?) அந்த உணர்வின் அடிப்படையில் எந்தப் பார்ப்பான் வீட்டுப் பெண்ணுக்குத் தமிழரசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது? எந்தப் பார்ப்பனப் பையனுக்குத் தமிழரசன் என்று பெயர் சூட்டப் பட்டது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டைக் கூற முடியுமா? விரலை மடக்க முடியுமா?
தமிழுணர்வு பீறிட்டது புரட்சிக்கவிஞர் படைப்பால் என்று கூறலாம். தமிழியக்கம் ஒன்றே ஒன்று போதுமே - தமிழுணர்வும், தமிழின உணர்வும் பொங்கி எழுவதற்கு!
கல்கியின் பதிலில் இரண்டாவது நச்சுத் தன்மையும் கவனிக்கத்தக்கதாகும். தமிழை வைத்து திராவிடக் கட்சிகள் அரசியல் பண்ணியது இரண்டாம் பட்சமான மற்றொரு காரணமாம்.
திமுக தன்னை அரசியல் கட்சியாக்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டது 1957ஆம் ஆண்டு என்று வைத்துக் கொண்டால், ஆச்சாரி யார் எனும் ராஜாஜி சென்னை மாநிலத்தில் முதல் அமைச்சராக 1937இல் வந்தபோது, இந்தியைத் திணித்ததால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ் நாடே பொங்கி எழுந்ததே. அதனுடைய விளைச்சல்தான் தமிழ் உணர்வு!
நாராயணசாமி, நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன், அன்பழகனாகவும், சோமசுந்தரம், மதியழகனாகவும், கோதண்டபாணி, தில்லை வில்லாளனாகவும், அரங்கசாமி, அரங்கண்ண லாகவும் மறுமலர்ச்சி பெற்றதும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்டதன் எதிர்விளைவாகும்.
அந்தக் காலகட்டத்தில் திராவிடக் கட்சி எந்த அரசியலைப் பண்ணியதாம்? அதனால் தமிழரசன், தமிழரசி நடைமுறைக்கு வந்ததாம்?
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பால் சமஸ்கிருத ஊடுருவலால் கெட்டதுதானே தமிழும், தமிழனும்?
மனிதனை நான்கு வருணமாகப் பிளந்தது போதாது என்று சமஸ்கிருதம் என்ற நரி புகுந்து தமிழிலும் பல பிளவுகளை ஏற்படுத்தி விட்டதே! அதன் விளைவு தானே தெலுங்கும், மலை யாளமும், கன்னடமும், துளுவும்?
துவேஷ உணர்வும், புத்தியும்   பார்ப்பனர் களிடத்திலே இன்னும் பதுங்கி இருக்கிறது என்பதன் அடையாளமே கல்கியின் பதில்.
தமிழா தமிழனாக இரு!
தமிழா இனவுணர்வு கொள்!!
(இன்னொரு பதில் குறித்து நாளை)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...