Thursday, September 13, 2012

பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர்கள்!


பாரதீய ஜனதா கட்சியில் பிரதமருக்கான வேட்பாளர் யார் என்பதுபற்றி சர்ச்சை கிளம்பி யுள்ளது. பந்தியிலேயே இடமில்லை என்று ஆகிவிட்ட பிறகு இலையில் பொத்தல் என்று பேசுவதில் பொருள் இருக்க முடியாது.
2014 மக்களவைத் தேர்தலில் இப்பொழுதே வெற்றி பெற்றுவிட்ட மிதப்பில் அவர்கள் இருப்பதாகத் தெரிகிறது. கடந்த தேர்தலில்கூட நாங்கள்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று கூறி எல்.கே. அத்வானியை முன்னிறுத்திப் பார்த்தனர்; விளக் கெண்ணெய்க்குக் கேடாக முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்தபாடில்லை.
காங்கிரசின் பலகீனம் தங்களுக்குப் பலம் என்று நினைக்கிறார்கள் போலும்! அதேநேரத்தில் பி.ஜே.பி. யார்? ஊழல் இலஞ்ச லாவண்யம் அறவேயற்ற மாசு மருவற்ற பத்தரைமாற்றுத் தங்கமா?
பி.ஜே.பி. ஆளும் எந்த மாநிலத்தில் ஊழல் இல்லை? பங்காரு லட்சுமணன் கதை என்ன?
எடியூரப்பாவின் முகவரி என்ன? கொக்கு ஒட்டகத்தைப் பழித்த கதையாக இருக்கக் கூடா தல்லவா?
ஊழல் என்பது வெறும் பொருளாதாரத்தில் நடப்பது மட்டுமல்ல; பி.ஜே.பி.யின் சிந்தனையே ஊழல் கொழிக்கும் தன்மை கொண்டதாயிற்றே! அவர்கள் நம்பும் - காண விரும்பும் இந்துத்துவா என்பதன் வரையறை என்ன?
அதில் நேர்மை ஏதாவது மருந்துக்கும் இருக் கிறதா? பிறப்பில் பேதம் என்பதைவிட மோசமான ஊழல் புத்தி வேறு உண்டா?
இந்திய அரசமைப்புச் சாசனத்தில் உறுதி யளிக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை என்பதில் நம்பிக்கை கொண்டவர்களா பி.ஜே.பி.யினர் அல்லது சங் பரிவார்க் கூட்டத்தினர்?
450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தார்களே - அந்தப் புத்தியில் நேர்மை இருக்கிறதா? பண்பாடு துளி யேனும் துளிர்த்துள்ளதா? ஊழலைவிட அபாயகர மான செயல் அல்லவா இந்து மதவெறி!
லிபரான் ஆணையத்தின் அறிக்கை என்ன கூறுகிறது? 17 ஆண்டுகள் விசாரணை நடத்திய ஆணையமாயிற்றே அது!
63 பேர்கள் குற்றவாளிகள் என்று பட்டியல் போட்டுச் சொல்லிவிட்டதே! ரேபரேலி (உத்தரப்பிர தேசம்) நீதிமன்றம் அத்வானி உள்ளிட்ட 49 பேர்கள் மீது குற்றவியல் சட்டம் 147, 153(ஏ), 149, 153(பி) மற்றும் 505 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுவிட்டதே!
கலகம் விளைவித்தல், மக்களிடையே குரோத உணர்ச்சியைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித் தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாக குற்றம் செய்யத் தூண்டுதல், பீதியை உண்டாக்குதல் என்னும் வழக்குப் பிரிவுகள் இவை.
இந்தத் தரத்தில் உள்ளவர்கள் ஊழலைப்பற்றிப் பேசலாமா? அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாபர் மசூதி இடிப்பு வழக்கினை விரைவுபடுத்தி விசாரித்தாலே பி.ஜே.பி. தலைவர்கள் கூண்டோடு கைலாசம் என்பார்களே - அதன்படி ஒருவர்கூட தேர்தலில் போட்டியிட முடியாதே - இவர்கள் வெளி யில்தான் நடமாட முடியுமா? எல்லாம் கடுங்காவல் தண்டனை குற்றவாளியாக அல்லவா இருந் திருப்பார்கள்!
மோடி என்ற மனித குல விரோதி, பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளராம். இன்னொருவரை சிவசேனா தலைவர் பால்தாக்கரே முன்மொழிந்துள்ளார். அவர் யார் என்றால், மக்களவையில் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக் கூடிய திருமதி சுஷ்மா சுவராஜ்.
இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? ஆம், நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம் - உங்களால் என்ன செய்ய முடியும்? என்று நாடாளுமன்றத்திலேயே சவால் விட்டவராயிற்றே.
ஆக, பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் - ஒன்று அரச பயங்கரவாதம் நடத்தி சிறுபான்மையின மக்களை வேட்டையாடியவராக இருக்கவேண்டும் அல்லது சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலத்தை நாங்கள்தான் இடித்தோம் என்று வெறித் தனமாகச் சொல்லுபவராக இருக்கவேண்டும்.
இவர்களைப் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கும் கட்சியை, அதன் தலைவர்களைப் பொது மக்களாகிய வாக்காளர்கள் நன்றாகவே அறி வார்கள் - சோ ராமசாமிகள் துள்ளவேண்டாம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...