Sunday, August 26, 2012

நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை


50 ஆண்டுகள் விடுதலை ஆசிரியராக மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு பாராட்டு விழா


நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை  விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் ஏற்புரை

நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை  விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் ஏற்புரை
சென்னை, ஆக.26-விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவுப் பெருவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏற்புரையாற்றி தமிழர்தலைவர், நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும் என்றார்.
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாக தந்தை பெரியார் அவர்களை நிறுவனராகக் கொண்டு, தொடர்ந்து 78 ஆண்டுகள் வெளிவந்து கொண் டிருக்கும் சிறப்புக்குரியது விடுதலை நாளேடாகும். இந்த சாதனை நாளிதழின் மகுடத்தில் வைரமாக மிளிர்வது மற்றுமொரு சாதனை!
உலகின் வேறெங்கும் எவரும் ஈடு செய்ய முடியாத அளவுக்கு தொடர்ந்து 50 ஆண்டுகள் (1962-2012) ஒரு நாளேட்டுக்கு ஆசிரியர் பொறுப்பில் தொடர்ந்து, சாதனை படைத்து வரும் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு நேற்று (25.8.2012) நிறைவுப் பெருவிழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் காலை முதல் இரவு வரை வெகுசிறப்பாக நடைபெற்றது.
நீதியரசர்களின் பாராட்டு
காலை 10.30 மணியளவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், பெரியார் பேருரையாளர் முனைவர் மா.நன்னன், திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமி துரை, இந்திய நீதிபதிகள் சங்க பொதுச்செயலாளர் இரா.பரஞ்சோதி வழக்குரைஞர் வீரசேகரன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் பங்கேற்று தமிழர் தலைவருக்கு பாராட்டுரை வழங்கினர்.
கலைஞர் தலைமையில் ஊடகங்களின் சங்கமம்
மாலை சரியாக 6.30 மணியளவில் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, மூத்த பத்திரி கையாளர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையில் ஊடகங்களின் பாராட்டுரை - கருத்துரை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரி யருமான கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற் றினார். தமிழர் தலைவருக்கு  மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் அனுப் பிய வாழ்த்து கடிதத்தை படித்தார். திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அறிமுகவுரை நிகழ்த்தினார்.
கலைஞர் தொலைக்காட்சி தலைவர் ரமேஷ் பிரபா, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன், லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் ஜெக்மோகன்சிங் வர்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா தலைமை உரையை தி.மு.க. தலைவர் கலைஞர் நிகழ்த்தினார். திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் நன்றி கூறினார். திராவிடர் கழக மகளிர் பாசறை தலைவர் டெய்சி மணியம்மை இணைப்புரை வழங்கினார்.
இப்பெருவிழாவில் விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது ஏற்புரையில்:
தமிழகத்தில் விடுதலை, முரசொலி ஆகிய இரண்டு ஏடுகள் எதிர்நீச்சலில் வளர்ந்தவை. இவை செய்தித்தாள்கள் அல்ல. விழுந்த இனத்தை எழுந்து நிற்க கூடிய துணிச்சலை கொடுக்கக்கூடிய ஏடுகள்.
நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை  விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் ஏற்புரை
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலனுக்கு திராவிடர் கழக  தென் மண்டல பிரச்சாரக் குழு செயலாளர் தே.எடிசன் ராஜா சிறப்பு செய்தார்.
லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெக்மோகன் சிங் வர்மாவுக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்க செயலாளர் கோ.கருணாநிதி சிறப்பு செய்தார்.
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்திற்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிறைநுதல் செல்வி சிறப்பு செய்தார்.
கலைஞர் தொலைக்காட்சித் தலைவர் ரமேஷ் பிரபா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் சிறப்பு செய்தார்.
பத்திரிகை மூலம் மிகப்பெரிய புரட்சி செய்தார் தந்தை பெரியார். எனக்கு அவர் கிடைத்தார். அவரது கொள்கைகள் கிடைத்தன. அவரது தத்துவத்தால் நான் மனிதன் ஆனேன். என்னைப் போல மற்றவர்களும் ஆக வேண்டும் என்று பாடுபடுகிறேன். பத்திரிகை சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும், உண்மையை எடுத்துச்சொல்வ தாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார் தந்தை பெரியார். தந்தை பெரியார் ஒப்படைத்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு அன்று பெரியார் இருந்தார். இன்று எங்கள் மூத்த சகோதரராக கலைஞர்இருக்கிறார்.
நூற்றாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை பத்திரிகை. சமுதாய எழுச்சிக்கு எங்கள் பயணம் தொடரும். தந்தை பெரியாரின் கொள்கைகள், லட்சியங்கள், திராவிட இயக்கத்தின் வெற்றி தொடரும். ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும், இனத்தின் மீட்சிக்கு விடுதலை பத்திரிகை போர் வாளாகவும், கேடயமாகவும் எப்போதும் துணை நிற்கும் என தமிழர் தலைவர் தமது ஏற்புரையில் குறிப் பிட்டார்.
தமிழர் தலைவருக்கு முத்தமிழ் அறிஞர் சிறப்பு
முன்னதாக இப்பெருவிழாவிற்கு தலைமை யேற்று வாழ்த்துரை வழங்க வந்த முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி, கழக நூல்களையும் வழங்கினார். இதையடுத்து, விடு தலை ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர் களுக்கு கலைஞர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
விழா விருந்தினர்களுக்கு சிறப்பு
இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி சிறப்பித்த, அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பொன்னீலன் அவர்களுக்கு திராவிடர் கழக தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் எடிசன் ராசா சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர் புத்தகங்கள் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார். லக்னோ பல்கலைக் கழக பேராசிரியர் ஜெக்மோகன்சிங்வர்மாவுக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி சால்வை அணிவித்து கழகப் புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் நினைவுப்பரிசு வழங்கினார்.
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, திராவிடர் கழக பொதுக்குக்குழு உறுப்பினர் டாக்டர் பிறைநுதல் செல்வி சால்வை அணிவித்து கழகப் புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்.
கலைஞர் தொலைக்காட்சியின் தலைவர் ரமேஷ் பிரபா அவர்களுக்கு திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் சால்வை அணிவித்து கழகப் புத்தகங்களை வழங்கினார். தமிழர் தலைவர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தார்.
இவ்விழாவில் திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, வரியியல் வல்லுநர் ராஜரத்தினம், முன்னாள் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், உரத்தநாடு இரா.குண சேகரன், துரை.சந்திரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, செங்கல்பட்டு மாவட்டதலைவர் அ.கோ.கோபால்சாமி, திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவைத் தலைவர் நாக லிங்கம், சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணைவேந்தர் வி.பி.நாராயணன், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், மு.பா.பால சுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், செங்கை சிவம், கயல்தினகரன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் நல்.ராமச்சந்திரன், திருச்சி பெரியார் வீரவிளையாட்டுக் கழக தலைவர் பி.சுப்பிரமணியம், திருமதி மோகனா வீரமணி, எழுத்தாளர்கள் க.திருநாவுக்கரசு, முன்னாள் மேயர் சா.கணேசன், சாவல்பூண்டிசுந்தரேசன், வழக்குரைஞர் வீரசே கரன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, டாக்டர் கவுதமன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பி.பட்டாபிராமன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், கி.தளபதிராஜ், ஆடிட்டர் இராமச் சந்திரன், மதுரை மண்டல இளைஞரணி செய லாளர் இல.திருப்பதி, காஞ்சிபுரம் மாவட்ட தலை வர் டி.ஏ.ஜி. அசோகன், காஞ்சி கதிரவன், திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கோவை பழ. அன்பரசு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், சி.வெற்றிச்செல்விபூங்குன்றன், கு.தங்க மணி, பசும்பொன், மீனாட்சி, தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, வடசென்னை  தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர், தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள் ளுவன், செயலாளர் கி.இராமலிங்கம், கழக கரூர் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.க.இராஜசே கரன், வேலூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம், செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், சென்னை மண்டல கழகத் தலைவர் தாம்பரம் தி.இரா.இரத் தினசாமி, செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், காரைக்குடி மாவட்ட செயலாளர் தி.என்னாரெசு பிராட்லா  மற்றும் திராவிட முன்னேற்றக் கழக இன்னாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்-தோழியர்கள் தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்து பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
விடுதலை  பற்றிய தகவல் ஆவணப்படம் ஒன்று விழா மேடையில் ஒளிபரப்பப்பட்டது
நூறாண்டுகள் கண்ட திராவிட இயக்கத்தின் வலிமையான ஆயுதம்தான் விடுதலை  விடுதலை ஆசிரியர் தமிழர் தலைவர் ஏற்புரை
விடுதலை  ஆசிரியராக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவுப் பெருவிழாவில் பங்கேற்றோர் (25.8.2012)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...