Sunday, August 26, 2012

தண்ணீரும் மின்சாரமும்


தமிழ்நாடு மக்களை இரு வேறு பிரச்சினை கள் வாட்டி வதைத்துக் கொண்டு இருக் கின்றன. ஒன்று மின்சார வெட்டு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் மின் வெட்டுப் பிரச்சினை 6 மாதங்களில் தீர்த்து வைக்கப்படும் என்று அடித்துச் சொன்னது. 15 மாதங்கள் ஓடிய பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இடையில் கொஞ்சம் மாற்றம் தெரிந்தது. பரவாயில்லை மின்வெட்டுத் தீர்ந்து விடும் என்று நம்பியிருந்த நிலையில் மீண்டும் கடும் பற்றாக்குறை எனும் புயல் வீசத் தொடங்கி விட்டது.

பனிரெண்டு மணி நேரம் என்கிற அளவுக்குக்கூட மின்வெட்டு என்றால், அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று  பொருள். உற்பத்திப் பாதிப்பு, வேலை வாய்ப்புப் பாதிப்பு இவற்றின் காரணமாக விலைவாசி ஏற்றம் என்று ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டு இருக்கிறது.

இந்த மின்வெட்டை நீக்க உருப்படியான முடிவுகள் ஏதாவது எட்டப்பட்டு இருப்ப தாகவும் தெரியவில்லை. மின்வெட்டினால் விவசாயம் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. ஜூன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில், குறுவைச் சாகுபடி நாசமாகப் போய் விட்டது. சம்பா விவசாயமும் கேள்விக்குறியாகிவிட்டது.

நிலத்தடி தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் மின் வெட்டின் காரணமாக மோட்டாரைப் பயன் படுத்த முடியாத முட்டுக்கட்டை! உரலுக்கு ஒரு பக்கத்தில் அடி என்றால் மத்தளத்துக்கு இரு பக்கம் அடி என்று சொல்லுவார்களே - அந்த நிலைக்கு நம் நாட்டு விவசாயிகள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

காவிரி நீரை நம்பி வாழும் டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்ல - முல்லைப் பெரியாறு பிரச்சினையால் தென் மாவட்ட விவசாயிகள் கை பிசைந்து நிற்கின்றனர்.

இவற்றிற்கு எல்லாம் என்னதான் பரி காரம்? விடிவு கிடைக்குமா? விடிவுக்கு ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றனவா? அரசு என்ற ஒன்று இயங்கு கிறதா? அதிகாரிகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்களா? என்ற வினா சாதாரண மக்கள் மத்தியிலேகூட செங்குத்தாக எழுந்து நிற்கிறது.

உணவு உற்பத்தி பாதிக்கப்படும் நிலையில் அடுத்து வரும் காலம் மக்களுக்குக் கடும் சோதனையாக - வேதனையாக - சவாலாக இருக்கப் போகிறது. அதன் விளைவு கடுமை யானதாக இருக்கும்.

தொலைநோக்குக் கண்ணோட்டத்தோடு பிரச்சினைகளுக்கு உருப்படியான தீர்வினைக் காண அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டாமா? யாருக்கோ வந்த விருந்து என்ற தன்மையில் ஏனோ தானோ என்று இருக்கலாமா?

எதிர்க்கட்சிகள் வாய் திறந்தால், பேனாவைத் திறந்தால் அவர்கள்மீது வழக்குப் போடுவதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் என்றால் குற்றம் கூறத்தான் செய்வார்கள் என்கிற ஜனநாயகப் பண்பை ஏற்றுக் கொண்டு, மக்கள் சந்திக்கும் பற்றாக் குறைகளைச் சரி செய்யும் வேலையில் அரசு கவனம் செலுத்தட்டும்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...