Thursday, August 16, 2012

கடவுளுக்குக் கேட்குது குவார்ட்டர்கள்!


சின்னமனூர், ஆக.16- குச்சனூர் கருப்பண்ணசாமிக்கு 4 ஆயிரம் மது பாட்டில்களை பக்தர்கள் படைய லிட்டு நேர்த்தி கடன் செலுத்தினார் களாம். மேலும் 13 ஆடுகள், 10 சேவல் களை பலியிட்டு விடிய, விடிய பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட தாம்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரபகவான் கோயிலில் தனி சன்னதியாக சோனைக் கருப்பண்ணசாமி கோயில் இருக்கிறது.
ஆடி நான்காவது வாரம் சனிக் கிழமை முடிந்து இரண்டாவது நாளில் சோணை கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்து  திரு விழா நடத்தப்பட்டது. கருப் பண்ண சாமிக்கு நேர்த்திகடனாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் மது பாட் டில்களை காணிக்கையாக செலுத் தினார்களாம்.
பக்தர்கள் வழங்கிய குவார்ட்டர், ஆப், புல் என சுமார் 4 ஆயிரம் பாட்டில்கள் சுவாமிக்கு படையலிடப் பட்டனவாம். பூசாரி ஜெயபாலமுத்து வாயில் துணியை கட்டிக்கொண்டு பூஜைகள் செய்தாராம். பின்னர் கதவினை பூட்டிக்கொண்டு சுவா மிக்கு பின்புறம் உள்ள துவாரத்தின் வழியாக மதுவை ஊற்றினாராம். அந்த மதுவை சுவாமி துவாரம் வழியாக ஏற்றுக்கொள்வாராம்.
அப்போது வெளியில் நின்றவாறே பக்தர்கள் பிரார்த்தனை செய்தார் களாம். இவ்விழாவையொட்டி 13 ஆடுகள், 10 சேவல்கள் வெட்டி பலி கொடுக்கப்பட்டனவாம். இதைய டுத்து 2 ஆயிரம் பேருக்கு கறிச் சோறு  வழங்கப்பட்டதாம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா, இரவு ஒரு  மணிக்கு முடிந் ததாம். விழா ஏற் பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரகுமார் செய்திருந்தார்.
நேர்த்தி கடனாக வழங்கிய மது பாட்டில்கள் கருவறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...