Thursday, August 16, 2012

டெசோவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?


கேள்வி: டெசோ மாநாட்டுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: (1) தமிழ்நாடு முழுவதும் டெசோ தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஆகஸ்டு 20 முதல் 30 வரை நடக்கும் என்று டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். இதில் டெசோவின் உறுப்பினர்களாக உள்ள கட்சியினரும் கலந்து கொள்வார்கள்.
(2) டெசோ மாநாட்டுத் தீர்மானம் அய்.நா.வுக்கு அனுப்பி வைக்கப்படும்.
(3) நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.
மாநாட்டின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அலறுவதே போதுமானது. இன்றைய நாளேடுகளில் அது பற்றிய செய்தியும் வெளிவந்துள்ளது.
டெசோ மாநாட்டைத் தடை செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு முதல் அமைச்சர்  சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றும்போது கூட ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பேசவேண்டிய அளவிற்குத் தாக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
எந்தெந்த கோணத்தில் யார் ஆதரவு கொடுத்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம்! இதற்குப் பிறகாவது வீண் விமர்சனங்களை நிறுத்திக் கொள்வார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.
- சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (16-8-2012)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...