Monday, July 30, 2012

அடியாட்களை ஏவி அட்டகாசம்! சிவசங்கர் பாபா கைது செய்யப்படுவாரா?


சென்னை, ஜூலை 29- சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நீலாங்கரையில் ஆசிரமம் அமைத்து பக்தி வியா பாரம் செய்யும் சிவசங்கர்பாபாவின் மீது வன்முறையைத் தூண்டிய தாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாபா நடத்தும் கோடீஸ்வர அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் மாம்பாக்கம் - கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் ஏ.எம்.எஸ். வணிக வளாகத்தின் ஒரு பகுதியில்  சுரேஷ் என்பவர் 11-4-2011 முதல் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மாத வாடகை ரூ. 9000 அளிக்க ஒப்புக் கொண்டு முன்பணம் ரூ. 30,000 செலுத்தி 11 மாத காலத்திற்கான வாடகை ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொண்டுள்ளார். தனது அழகு நிலையத்திற்கு ஏற்ற வகை யில் கட்டடத்தை அழகுபடுத்த - தான் 15 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகக் கூறும் சுரேஷ், தனது வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கோரியபோது, அந்த அறக்கட்டளையினர் அவ்வாறு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்த துடன் அந்த இடத்தை உடனே காலி செய்து விடுமாறும் சுரே ஷைக் கேட்டுள்ளனர். நாளடை வில் அவரை மிரட்டவும் செய் தனர். கட்டடத்தை அழகுபடுத்த, தான் பெரும் அளவில் செலவு செய்துள்ளதால், வாடகை ஒப் பந்தம் நீட்டிக்கப்படாவிட்டால், தான் பேரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவர் தெரிவித் திருந்தும், அறக்கட்டளையினர்   அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இடத்தைக் காலி செய்யக் கூறி மிரட்டலும் அதிகரித்தது.
இதனால் காஞ்சிபுரம் மாவட் டக் காவல் துறை அதிகாரிக்கு சுரேஷ் அனுப்பிய ஒரு புகார் கடிதம் கேளம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அத்துடன் செங் கல்பட்டு மாவட்ட மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் சுரேஷ் தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில்  23-07-2012 அன்று இரவு சுரேஷ் தனது அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு பல குண்டர்கள் லாரியில் வந்து அழகு நிலையத் தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கே இருந்த பொருள் களை எல்லாம் அடித்து உடைத்து லாரியில் வாரிப் போட்டுக் கொண் டிருந்தனர். தகவல் அறிந்த சுரேஷ் தனது மனைவியுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது டன் காவல்துறையினரிடமும் புகார் அளித்தார். சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வன்முறையில் ஈடு பட்ட வர்களையும், லாரியில் ஏற் பட்டடிருந்த அழகுநிலையத்தின் உடைக்கப்பட்ட பொருள்களுடன் லாரியை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று, சிவசங்கர்பாபா, ஜானகி, நாகராஜன் மற்றும் இதர அறக் கட்டளை உறுப்பினர்கள் மீதும், வன்முறையில் ஈடு பட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.
பக்தி போர்வையில் ஊரையும், மக்களையும் ஏமாற்றி வரும் சிவசங்கர் பாபாவின் வன்முறைச் செயல்களுக்கு தக்க நடவடிக் கையை காவல்துறை மேற்கொள் ளும் என்று நம்புகிறோம்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...