Monday, July 30, 2012

செய்திச் சிதறல்கள்!


காலரா எனும் கொடிய நோய்

காலரா என்ற வார்த்தை புதிய தலைமுறையினருக்கு அனேகமாக தெரியாத வார்த்தையாகும்.
ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் இந்த நோய் மக்களை அள்ளிக் கொண்டு செல்லும். வீடு வீடாக, தெருத் தெருவாக சாவுகள் விழுந்து கொண்டே இருக்கும்.
பக்திச் சேற்றில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு காலரா ஒரு நோய் என்று தெரியாது. காளியாத்தா ளுக்குக் கோபம்! அதன் விளைவு தான் காலரா என்று நம்பினார்கள். என்ன செய்வார்கள் தெரியுமா?
காளியம்மன் கோயிலுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள்.  ஆனாலும் மரணக் கழுகு மக்களைக் கொத்திக் கொண்டு செல்வது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அது போலவே அம்மை நோயும். மாரியாத்தாளுக்குக் கோபம் என்று மாரியம்மன் கோயிலுக்குக் கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். பிரயோ சனப் படவில்லை.
காலரா ஒரு நோய். குறிப்பிட்ட கிருமியால் தொற்றக் கூடியது; அம்மை ஒரு நோய் - குறிப்பிட்ட கிருமியால் பரவக் கூடியது என்று கண்டறிந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டு,(Prophylatic Measures) பொது மக்களுக்கு தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. அதன் விளைவு - இந்நோய்கள் மறைந்துவிட்டன.
சுகாதாரமற்ற உணவும், தண்ணீரும், சுற்றுச் சூழலும்தான் இந்நோய்கள்  தொற்றுவதற்குக் காரணம் ஆகும்.
சில நாள்களாக சென்னையில் காலரா பரவியுள்ளது பற்றி செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. இல்லை என்று சென்னை மாநகராட்சி மறுக்கிறது.
இது ஒன்றும் அரசியல் பிரச்சி னையல்ல - மக்கள் உயிரோடு விளையாடிப் பார்க்க யாரும் ஆசைப்பட வேண்டாம்.
பிரச்சினைகளை எடுத்துச் சொல்லத்தான் எதிர்க் கட்சிகள். மாநகராட்சிக் கூட்டங்களில் கருத்துக்களை எடுத்துக் கூற எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். அது தான் ஆளும் தரப்புக்கு நல்லது.
மதுரையிலும் காலரா பரவி வருவதாக செய்திகள் வெளி வரு கின்றன. பொதுவாக மாநகராட்சி யின் முக்கிய வேலை நகரத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே - கவனத்தைப் பிரச்சினையின் மீது செலுத்த வேண்டும் - குறை கூறும் எதிர்கட்சிகள் மீதல்ல!


பேருந்துகள் கொலைக் களமா?


பள்ளிப் பேருந்துகளா கொலைப் பீடங்களா என்ற கேள்வி செங்குத் தாக எழுந்துள்ளது. தாம்பரம் அருகே இந்திரா நகர் சீயோன் மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி 2ஆம் வகுப்பு சிறுமி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து பலியான கோர சம்பவம் இதயக் குழாய்களை வெடிக்கச் செய்த கொடுமை அடங் குவதற்குள் வரிசையாக பேருந்து களில் மாணவிகள் மரணச் செய்தி கள் அடுத்தடுத்து வெளி வந்துள் ளன. ஆம்பூர் அருகே பள்ளிப் பேருந்தில் இறங்கி சாலையைக் கடக்க முயன்ற சிறுமி அதே பேருந் தின் முன் சக்கரத்தில் சிக்கிச் சிதறுண்டார் என்ற செய்தியும் நம் உணர்வுகளைச் சிதற அடிக்கிறது.
அதேபோல சிதம்பரத்தில் ஆறாம் வகுப்புப் படித்த மாணவி தீபிகா மரணம் அடைந்துள்ளார்.
பேருந்து என்றாலே மாணவி களின் மரணக் கிணறுகளா என்று அதிர்ச்சியுறும் நிலை!
பிரச்சினைகள் ஏற்படும் பொழுது மட்டும் கடுமையான நடவடிக்கை கள், அதன்பின் பழைய குருடி - கதவைத் திறடி என்கிற மனப் போக் குகள் நம் நாட்டில் சர்வ சாதாரணம்!
அந்த நிலை இதிலும் ஏற்பட்டு விடக் கூடாது! மனித உயிர்கள் நம் நாட்டில் வெறும் குப்பைகள்தானா?
மதம் இருக்கிறது. ஆனால் மனிதநேயத்தைச் சொல்லிக் கொடுக் கும் மனம் அதனிடம் இல்லையே!

சக்தியுள்ள கடவுள்கள்?


தமிழ்நாட்டுக் கோயில்களி லிருந்து திருடப்பட்ட ரூபாய் 110 கோடி மதிப்புடைய சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.
இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.  இணைய தளத்தில், வெளியிடப்பட்ட படங்களைப் பார்த்து அதன் அடிப்படையில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்.
நம் நாட்டுக் கோயில்களின் வீர தீரப் பிரதாபங்களை ஆன்மீகச் சிறப்பிதழ் போட்டு விளம்பரப்படுத் தும் அதே இதழ்கள்தான் - தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய்துள்ளதையும் வெளி யிடுகின்றன. இதில் இவர்களுக்கு வெட்கம் சிறிதும் இல்லை. இந்து மதக் கோயில்களுக்குள் வெளி மதக் காரன் நுழைய அனுமதியில்லை - வெளியிலேயே அறிவிப்புப் பல கையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? அமெரிக்காவில் உள்ள கிறித்துவக் காவல்துறை அதிகாரிகள்தான் அந்த இந்துக் கடவுள்களைக் கைப்பற்றுகிறார்கள். கண்டுபிடித்தது கிறித்துவக் கை என்பதால் இந்தியாவுக்குக் கொண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட் டோம் என்று சங்கராச்சாரியார் களும்,  இந்து முன்னணி வகை யறாக்களும் சொல்வார்களா?
பார்ப்பனர்கள் பலே கெட்டிக் காரர்கள் ஆயிற்றே! அதற்கும் சடங்கு, சாங்கித் தியம், சுத்திகரிப்பு என்று சொல்லி பணம் பறிப்புத் தொழிலைத் தயா ராக வைத்திருக்க மாட்டார்களா?
சுரண்டல் தொழிலில் நட்டக் கணக்குக்கு இடம் ஏது?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...