Tuesday, July 24, 2012

மாற்றுப் பாதையில் சேதுக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த முடியாது!


கற்பனை வாதத்தை தகர்த்த வல்லுநர் குழுவின்  அறிக்கை


சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என்று வல்லுநர் குழு அறிக்கையை சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில், ராமேசுவரத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வந்தன. சேது சமுத்திர திட்டப்பணிகள் 30 மீட்டர் அகலம், 12 மீட் டர் ஆழம், 167 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டி நிறைவேற்றுவது ஆகும்.
சேது சமுத்திர திட்டப்பணிகளை ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பாதையில் நிறைவேற்றினால், கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக வங்கக்கடலை நேராக அடை வதற்கு வழி பிறக்கும்.இதனால்,தமிழ்நாட்டின் தென் மாவட்டம் வளம் பெரும் ,தமிழர்களின்  நூற்றாண்டுக் கனவு நிறைவேறும். ஆனால்,இதனை விரும்பாத வடநாட்டு இந்துத்துவ சக்திகள் கற்பனையான காரணத்தைக் கூறி  சிறப்பான சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க நினைத்தனர்.
சேது சமுத்திர திட்டப்பணிகள் விரைவாக நடந்த நிலையில்  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக் ஜல சந்திப்பகுதியில் ராமனின் வானரப் படையினால் கட்டப்பட்ட பாலம் இருப்பதாக  கதை கட்டினர்..
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டத் துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், ரூ.2 ஆயிரத்து 487 கோடி மதிப்பில் நிறைவேற்றப் படவிருந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது.
மேலும், சேது சமுத் திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்ச வுரி குழுவை மத்திய அரசு அமைத்தது.இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை மத் திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதற்கிடையே ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ராமர் பாலத்தை பாரம் பரியச் சின்னமாக அறி விப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கோரி உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த மத்திய அரசின் கருத்தை கேட்டது. அதற்கு மத்திய அரசு, இந்த விஷயத்தில் முடிவு எடுத்து அறிவிக்க விருப்பம் இல்லை என்றும், அது குறித்து உச்சநீதிமன்றமே  முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறி விட்டது.
இந்த நிலையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். டட்டு, சி.கே.பிரசாத் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக ஜோலோ 2 அன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசு வழக்கறிஞர்) ரோஹிண் டன் நரிமன், பச்சவுரி குழுவின் 37 பக்க அறிக் கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
ராமர் பாலத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், மாற்றுப் பாதை தேடுவது என்பது ஏற்கத்தகுந்த யோசனை அல்ல. அது பொது நலன் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.
ஆய்வின் அடிப் படையிலும்,  நிர்வாக இழப்பு அணுகுமுறையின் அடிப்படையிலும் மட்டு மல்லாமல் சுற்றுச் சூழல் மற்றும் பொரு ளாதார கோணத்திலும் பார்க்கிறபோது, 4 ஏ வரிசையில் (தனுஷ் கோடிக்கு கிழக்கில்) மாற்றுப்பாதை திட்டம் என்பது கேள்விக்குறி தான்.
விரிவான ஆய்வு களில் எழுந்த சந்தேகங் களை தொடர்ந்து, 4 ஏ வரிசையில் சேது சமுத் திர திட்டத்தை நிறை வேற்றுவது என்பது பொது நலனுக்கு உசித மான ஒன்றாக இருக் காது. இந்த மாற்றுத் திட்டம் சுற்றுச்சூழ லுக்கு ஆபத்தை ஏற்படுத் தும். இந்த நிலையில், எளிதில் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழலில் மாற் றுத்திட்டத்தை நிறை வேற்றுவதற்கான சாத்தி யக்கூறுகள் தொடர்பாக மேலும் ஆய்வு தேவைப் படும்.
தற்போதைய நிலை யில், 4 ஏ வரிசையில் இந்த திட்டத்தை நிறை வேற்றுவது என்பது சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அந்த பகுதிகளில் (திட் டப்பகுதிகளில்) சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக அமையும்.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்டன் நரிமன், நீதிபதிகள் முன்னிலையில், பிரபல சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சவுரி கமிட்டி, சேது சமுத்திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலித்துள்ளது. அதில், பொருளாதார ரீதியிலும், சுற்றுச்சூழல் ரீதியிலும் சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழிப்பாதையில் நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது என்று  கூறினார்.
இதையடுத்து சேது சமுத்திர திட்டத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவது குறித்து அறிவிப்பதற்கு மத்திய அரசுக்கு 8 வார கால அவகாசம் வழங்கி, அதுவரை வழக்குகளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அறிவியல் வளர்ந்த 21 ஆம்  நூற்றாண்டிலும் புரானப்புளுகைகை நீதிமன்றம் வரை கொண்டு சென்று மாபெரும் மக்கள் திட்டத்தை தடுக்க எண்ணிய பிற்போக்காளர்களின்  எண்ணத்தில் மண்ணை கொட்டியிருக்கிறது வல்லுநர் குழு அறிக்கை.

JULY 16-31


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...