Tuesday, July 24, 2012

அய்.அய்.டி.



ஒரு காலத்தில் சொல்லப்படுவதுண்டு  AIR என்றால்  All Iyer and Iyengar Radio; LIC என்றால்  Licentiate Iyer and Iyengar Corporation; SRy  என்றால் Sri Rangam Railway என்றெல்லாம் சொல் லுவதுண்டு. அந்த அள விற்கு இவை எல்லாம் அக்கிரகாரவாசிகளின் வேலை வாய்ப்பு உல் லாசப் பூங்காக்களாக கொழித்தன.
இப்பொழுது  IIT   என் றால் என்ன பொருள்?  Iyer and Iyengar Technology என்பது இன்றள வுக்கும் உள்ள உண்மை யான நிலவரமாகும்.
ஒவ்வொரு அய். அய்.டி.யும் ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியில் ஒய்யாரமாக பார்ப்பனர் களுக்கு மட்டுமே குத் தகைக்கு விடப்பட்டு ஒண்டிக்கட்டையாகக் காட்சி அளிக்கிறது.
மாணவர் சேர்க் கையிலும் சரி, ஆசிரி யர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் சரி, அங்கே உள்ளே நுழைந்தால் அது ஒரு பெரிய அக்கிரகாரமா கவே காட்சி அளிக்கும். அவாள் வீட்டுப் பிள்ளை களுக்கு, அந்த வளா கத்துக்குள்ளேயே கல்வி கற்க உயர் தட் டுக் கல்விக் கூடங்கள் -இத்தியாதி! இத் தியாதி!!
எடுத்துக்காட்டாக மொத்தப் பேராசிரி யர்கள் 400 எனில் பார்ப்பனர்கள் 282 பேர் (70 விழுக்காடு) முன் னேறிய உயர்ஜாதி பார்ப்பனர் அல்லாதார் 40 பேர் (10 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர் 57 (14 விழுக்காடு) தாழ்த் தப்பட்டோர் 3 (0.75 விழுக்காடு) கிறித்தவர் 15 (3 விழுக்காடு) முசுலீம் - பூச்சியம்.
இதுதான் நிலைமை. தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பெயரளவுக்கு இட ஒதுக்கீடு. தப்பித் தவறி உள்ளே நுழைந்தாலும் பட்டம் பெற்று வெளியே வருவது அரிதே!
இப்படிப்பட்ட அக்கிர காரத்தில் முதன் முத லாக அய்.அய்.டி. பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நலச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதே. தாழ்த்தப்பட்டோர் நலச் சங்கமும், பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கமும் ஒருங்கிணைந்து அக் கிரகார ஆதிக்கத்திற் குத் தண்ணீர் காட்டு வார்களாக! இந்தி யாவுக்கே பெரியார் பிறந்த மண் இந்த வகையிலும் வழிகாட்டி யுள்ளது பாராட்டுக் குரியதே!
- மயிலாடன்


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>


JULY 16-31


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...