Wednesday, July 25, 2012

குவளைத் தண்ணீரில் அம்மன் முகமா?


அறிவியல் பூர்வமாக நிருபித்தால் ரூ.ஒரு லட்சம் பரிசு!
திராவிடர் கழகம் நேரடி பதிலடி!

கடலூர், ஜூலை.24- குவளைத் தண்ணீரில் அம்மன் முகம் என்று புரளி கிளப்பி விடப்பட்டதற்கு திராவிடர் கழகத் தின் சார்பில் நேரடி பதிலடி கொடுக் கப்பட்டது.
கடலூரில் பரபரப்பான தெருமுனைக் கூட்டம் குவளைத் தண்ணீரில் பூஞ் சோலை அம்மன் முகமா! அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் ஒரு லட்சம் பரிசு என துண்டு அறிக்கை வெளியிட்டு கடலூர் திராவிடர் கழகம்  சார்பில் 22.7.2012 அன்று அய்ந்து இடங்களில் 4 மணி முதல் இரவு 9 மணி வரை. தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் அவர்கள் கடலூர் திருப் பாதிரிப்புலியூர் தேரடி தெருவிலும், புது பாளையத்திலும் தொடங்கி வைத்துப் உரையாற்றினார். இதில் கடவுளின் தன்மைகள் மனிதனுக்கு எந்த வகையிலும் உதவாத புராணம் இதிகாசத்தில் உள்ள ஆபாசங்களை விளக்கியும் சங்கராச்சாரி முதல் பிரேம நந்தா காஞ்சிபுரம் தேவநாதன் இன்று உள்ள நித்தியானந்தா வரை சாமியார்கள் செய்த லீலைகளை விளக்கியும் சில மாவட்டங்களில் இரத்தக் காட்டேரி மூடநம்பிக்கைகள் சில ஊர் களில் வேப்பிலை மோசடி சில ஊர்களில் இன்று போய் நாளை வா என்று எழுதுவது; கடலூரில் குப்பன்குளத்தில் குவளைத் தண்ணீரில் பூஞ்சோலை அம்மன் முகமா! கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவனுக்கு புத்தி வேண்டாமா? சிந்தியுங்கள் அறிவுக்கு வேலை கொடுப்போம் அறியாமைக்கு விடை கொடுப்போம் என்று பேசினார். கூத்தப்பாக்கத்தில் யாழ் திலீபன் உரை யாற்றினார். வண்ணாரப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் நா. தாமோதரன் உரையாற் றினார். பெரியார் நினைவு தூண் அருகே கூட்டம் நிறைவடைந்தது. இக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் சொ. தண்டபாணி மண்டல இளைஞரணி செயலாளர் சி. மணிவேல் கடலூர் நகர தலைவர் விஜயக்குமார், மாவட்ட ப.க. செயலாளர் எழிலேந்தி, நெய்வேலி நகர செயலாளர் ச. கண்ணன், கடலூர் சின்னதுரை, கடலூர் பெரியார் நூலகர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  துணைப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் உரையாற் றினார். முடிவில் கடலூர் நகர செயலாளர் தென் சிவக் குமார் நன்றி கூறினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...