Monday, July 16, 2012

இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?


பக்கம் 1 எண் 2:
1925 க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்த போதெல்லாம் மைலாப் பூரில் சீனுவாச அய்யங் கார் வீட்டுத் திண்ணை யில்தான் உட்கார்ந் திருப்பார் - உள்ளே போகாமல்.
1926 க்குப் பின்தான் அவர் வீட்டுக்குள் சென் றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினைப் பெரியார் ஆரம்பித்து 1925 முதல் பிரச் சாரம் செய்தார்.)
மகாத்மா காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 5 எண். 32:
மைலாப்பூர் கபாலீசுவரன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு, மற்ற எல்லாரையும் விட 1916 ஆம் ஆண்டிலேயே  ரூ. 10,000 நன்கொடை வழங்கிய நீதிக் கட்சித் தலைவர் தியாகராயர்  விழா மேடையில் உட்காரப் பார்ப்பனர்கள் அனுமதிக்க வில்லை! அதே நேரத்தில் தியாக ராயரின் பார்ப்பன கிளார்க்கு களுக்குக் கூட அந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது!
இந்த அவமானத்தைக் கண்டு கொதித்தெழுந்த தியாகராயர், பார்ப்பன எதிர்ப்பில் மிகத் தீவிரவாதியாக மாறினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?பக்கம் 18 எண். 113 :
1938 ஆம் ஆண்டு நீடாமங் கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதிதிராவிட தோழர்கள் சரிசமமாக உட் கார்ந்து விருந்து சாப்பிட்டார்கள் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 18  எண். 114:
டாக்டர் சுப்பராயன் முதலமைச்சராக இருந்த காலத்தில் பட்டுக்கோட்டை தாலுகா போர்டுக்கு, பட்டுக் கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட தோழரை நியமனம் செய்த காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட  தோழரும் சமமாக உட்காருவார் என்ற காரணத்தால், போர்டு கூட்டத்தைக் கூட்டா மல் காலங்கடத்தி வந் ததும், இதனை எதிர்த் துப் பட்டுக்கோட்டை சுயமரியாதை இயக்கத் தவர்கள் கண்டனக் கூட்டங்களை நடத்தி கடுமையாக எதிர்ப்புக் காட்டியதைத் தொடர்ந்து முதலமைச்சர் சுப்பராயனே தலையிட்டு தாலுகா போர்டு கூட்டத்தைக் கூட்டா விட்டால் போர்டையே கலைத்து விடுவேன் என்று எச்சரித்ததன் பேரில் போர்டு கூட்டம் நடத்தப் பட்டதும், அந்தக் கூட்டத்தில் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழர் சமமாக அமர்ந்ததும் உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 24 எண். 155:
எட்டயபுரத்திலே நடந்த பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற் காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந் தூராரையும் டாக்டர் சுப்பரா யனையும் தரையில் பாய்போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
பக்கம் 27 எண் 174
1929 இல் உத்தமபாளையம் வட்டம் சீலையம்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினர்களே, பார்ப் பனர்களுக்குச் சரி சமமாக உட் காரத் தடை விதிக்கப் பட்டனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
- க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...