Tuesday, June 12, 2012

தமிழ்நாடெங்கும் நுழைவுத் தேர்வை எதிர்த்து கழக ஆர்ப்பாட்டம் நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் - திராவிடர் கழக மாணவரணி - இளைஞரணி சார்பில் போராட்ட எரிமலை வெடிக்கும்! தஞ்சையில் தமிழர் தலைவர் எச்சரிக்கை


தஞ்சாவூர், ஜூன் 12- நுழைவுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் திரா விடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் அடுத்த கட்டப் போராட்டம் எரி மலையாக வெடித்துக் கிளம்பும் என்றார் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி அவர்கள்.
நுழைவுத் தேர்வை எதிர்த்து தஞ்சாவூரில் இன்று காலை 11 மணி யளவில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்து கண் டன உரையாற்றினார் கள். தனது உரையில் குறிப்பிட்டதாவது:
கடந்த பல ஆண்டு களாக நுழைவுத் தேர்வு என்பது ரத்து செய்யப்பட்டு, அதுவும் திமுக ஆட்சியில் சட்ட மாக வடிவமைத்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்து, நுழைவுத் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ளது. மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறார்கள். கான்பூர் அய்.அய்.டி. டில்லி அய்.அய்.டி. போன்றவற்றிலேகூட  அகில இந்திய அளவில் எதிர்க்கிறார்கள்.
ஒரே வகை கல்வி பொருந்துமா
இந்தியாவில் பன் மொழி பல தரப்பட்ட கலாச்சாரம் உள்ளது. நாட்டில் அனை வருக்கும் ஒரே கல்விக் கொள்கை, நுழைவுத் தேர்வு என்பது தேவை யற்றது. கல்வியில் சீர்மை என்ற பேரில், எல்லோ ரும் கோதுமையை சாப்பிட முடியுமா?
சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் அம்பேத் கர்பற்றி கார்ட்டூன் போட்டு கொச்சைப் படுத்துவது, மொழிப் போரை கொச்சைப் படுத்துவது தேவை யில்லாத ஒன்று. பாடத் திட்டத்தில் இந்தி எதிர்ப்புப் போர் தவ றாகப் பதிவு செய்யப் பட்டு, தவறாக வரலாறு சொல்லி தருவதையும், உடனடியாக பாடத் திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும். நுழை வுத் தேர்வு என்பதை கை விட வேண்டும். இல் லையென்றால் தமிழ் நாடு முழுவதும் திரா விடர் கழக மாண வரணி, இளைஞரணி சார்பில் போராட்டம் எரிமலையாக வெடிக் கும். இப்போராட்டம் இப்பொழுது நடை பெறுவது ஒரு தொடக் கம்தான்.
மதவாத சக்திகள் உள்ளே புகுவதைவிட வெளியில் இருப்பவர் களைவிட கபில்சிபல் போன்றவர்கள் உள்ளே இருந்து சமூகநீதியை அழிக்கின்றனர்?
மாணவர்களுக்கு தேவையற்றது நுழைவுத் தேர்வு! பெற்றோர் களின் தலையில் கல்லை போடுவது போன்றது நுழைவுத் தேர்வு. மாநி லப் பட்டியலிலுள்ள கல்வியை மத்திய பட் டியலுக்கு கொண்டு சென்றது மாற்றப்பட வேண்டும். கிராமத்து பிள்ளைகளின் வயிற்றில் அடிக்கும் முயற்சிதான் நுழைவுத் தேர்வு என்று பல செய்திகளை எடுத் துக் கூறி கண்டன எழுச்சி யுரையாற்றினார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...