Tuesday, June 12, 2012

காவிரியில் வருண யாகமாம்! அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ளலாமா? யாகம் நடத்தியும் மழை பெய்யவில்லையே!


- சர்ச்லைட்
கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மழை வேண்டி பாரதீய கிசான் சங்கம் சார்பில் 108 விவசாயிகள் பட்டினி விரதம் - யாகம், ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றில் குழி தோண்டி தண்ணீர் நிரப்பி பர்ஜன்ய சாந்தி ஹோமம் நடத்தினார்களாம் வேத விற்பன்னர் களான பூணூல் திருமேனிகள்!
இதனை தமிழ்நாட்டு அமைச்சர் திருமேனிகள் இருவர் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. கே.வி. ராமலிங்கம், கல்வி அமைச்சர் திரு. சிவபதி ஆகி யோர் தொடங்கி வைத்தார்களாம்!
மழை உடனே கொட்டு கொட்டு என்று கொட்டித் தீர்த்து, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடி விட்டதா?
இவ்வமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்த இந்திய அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவின் கீழ், ஒவ்வொரு குடிமகனுடைய அடிப்படைக் கடமை அறிவியல் -  மனப்பான்மை, ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பது, மனிதநேயம், சீர்திருத்தம் இவை களை உருவாக்குதல் ஆகும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளதே - அதற்கு நேர் முரணானது அல்லவா இந்(து)த மூடநம்பிக்கை - யாகம் என்பது!
யாகத்தால் - வேத விற்பன்னர்களால் மழையை வரவழைக்க முடியும் என்றால் அவர்களை அரசு தேசியமயமாக்கி, எங்கெங்கெல்லாம் மழை தேவையோ அங்கே மழை பெய்ய வைக்கலாமே!
அட மண்டூகங்களே, அறிவியல் ரீதியாக மேலை நாடுகளில் செயற்கை மழையை (செலவு அதிகம் அதற்கு) வரவழைக்கிறார்களே! விமானங்கள் மேகங்களுக்கு மேலே சென்று, சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனப் பொருளைத் தூவி செயற்கை மழையை வரவழைக்கலாமே!
கலைஞர் முன்பு முதல் அமைச்சராக இருந்த கட்டத்தில் இப்படி ஒரு செயற்கை மழையை சென்னைப் பகுதியில்கூட செய்து காட்டினாரே!
அதுதானே அறிவியல் அணுகுமுறை? அதை விடுத்து, யாகம், வேத முழக்கம் என்பதெல்லாம் பார்ப்பனர் பிழைக்கும் வழியான  பித்தலாட்டம் அல்லா மல் வேறு என்ன? இதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் ஆதரவு காட்டுவது, துவக்கி வைப்பது எல்லாம் மதச் சார் பின்மை தத்துவத்திற்கு விரோதம் - அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கையைப் பரப்பும் வெட்கக் கேடான செயல் அல்லவா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...