Sunday, June 10, 2012

ராமனின் மறுபக்கம்


ச. சோமசுந்தரம்
1. மகாவிஷ்ணு இராமனாக அவ தாரம் எடுத்தார். எப்படி?
2. இராமன் ஓர் அவதாரம். எப்படி?
3. தசரதனின் மைந்தன் இராமன். எப்படி?
4. தந்தை சொல் மீறாதவன் இராமன். எப்படி?
5.  இராமன் ஓர் சுயநலக்காரன். எப்படி?
6. இராமன் ஒரு வஞ்சகன் எப்படி?
7. இராமன் ஈவு இரக்கம் அற்றவன். எப்படி?
8. இராமன் ஒரு கோழை. எப்படி?
9. இராமன் ஒரு காமாந்தகாரன். எப்படி?
10. இராமன் ஒரு சந்தேகப் பேர்வழி. எப்படி?
11. இராமன் ஒரு பதவிப் பிரியன். எப்படி?
12. இராமராஜ்யம் ஒரு வர்ணாஸ்ரம ராஜ்யம். எப்படி?
இத்தனை எப்படிகளுக்கும் விடை காண்பதே இக் கட்டுரை.
மகாவிஷ்ணு வழக்கம்போல் பாற் கடலில் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, லட்சுமி அவர் கால் களை அமுக்கிக் கொண்டேயிருக்கி றாள். அந்த ஆனந்த சுகத்திலே பகவான் விஷ்ணு தன்னை மறந்து தான் உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகளை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.
கணவன் மனைவி தனித்திருப்பதைப் பொருட் படுத்தாமல் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் மகாவிஷ்ணுவைத் துயிலெ ழுப்புகின்றனர். துயிலெழுப்பி மகாப் பிரபோ! மகாதேவா! ஸ்ரீமன் நாரா யணா! நமஸ்கரிக்கின்றோம். அபயம், அபயம்! என்று விளிக்க, மகாவிஷ்ணு துயில் நீங்கி, உங்களுக்கு என்ன நேர்ந் தது? என்று வினவுகிறார்.
(மூவுலகம் அறிந்தவர், காக்கும் கடவுள், உலகி லுள்ள அத்தனை ஜீவராசிகளையும் காப்பவர். இவர் காக்காவிடில் உலகில் யாரும்  வாழமாட்டார்கள். அப் பேர்ப்பட்டவருக்கு தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் ஆகியோருக்கு வந்துற்ற துயரம் என்னவென்று தெரிய வில்லை. பார்க்கப் போனால் கடமை யிலிருந்து தவறியவருக்கு தண்டனை வழங்க வேண்டுமல்லவா!)
முனி: நமோ நாராயணா!  நீ அறியா தது ஒன்றுமில்லை. அடியேங்களை அசுரப் பயல் இராவணனும், அசுரப் பயல்களும் துன்புறுத்துகிறார்கள். தொல்லை கொடுக்கிறார்கள். யாகம் செய்யவிடாமல் தடுக்கிறார்கள். சுரா பானம் குடிக்கக்கூடாதாம், மது அருந் தக்கூடாதாம். இம்மாபாதகச் செயலைச் செய்யும் இராவணனிடமிருந்து எங் களைக் காப்பாற்றுங்கள் மஹாபிரபோ!
விஷ்ணு: அப்படியா!  மகாசிவ பக்தனான இராவணன், மாமேருவைத் தூக்கிய மாவீரன், இசையில் இணை யற்ற ஞானம் பெற்றவன். அவனாலா உங்களுக்குக் கஷ்டம். கவலைப்படா தீர்கள். நான் இராமாவதாரம் எடுத்து அந்த இணையற்ற வீரனான இரா வணனை எப்படியாவது வதம் செய்து உங்களைக் காப்பாற்றுகிறேன்.
முனி: தன்யன் ஆனோம்!  மகாப் பிரபோ!  ஆனந்தம் அடைந்தோம். தங்கள் இராமாவதாரம் காணக் காத்திருக்கிறோம். உத்தரவு தாருங்கள் பிரபோ! விஷ்ணு: அப்படியே செய்யுங்கள். போய் வாருங்கள். நான் லட்சுமியோடு தனித்திருக்க வேண்டும். இராமவதாரம் பற்றி அவளோடு யோசிக்க வேண்டும்.
முனி: வருகிறோம் பிரபோ!  நமோ நாராயணா!   நமோ நாராயணா!  இலட்சுமி: தாங்கள் இராமாவதாரம் எப்போது எடுப்பது? இவர்கள் கஷ்டம் எப்போது தீருவது?
விஷ்ணு: பூலோகத்தில் அயோத்திப் பட்டணத்தில் தசரத ராஜன் என்பவன் ஆண்டுகொண்டிருக்கிறான். அவனுக்கு 60,000 க்கு மேல் மனைவிகள். இருந்தும் குழந்தை இல்லை. அவன் அதற்காக புத்ரகாமேஷ்டியாகம் செய்யப் போகிறான். அப்போது நான் அவன் மகனாக பூமியில் அவதரிக்கப் போகிறேன்.
இலட்சுமி: என்ன பிரபோ முனி வர்கள் கஷ்டம் இப்போது தீராது போலிருக்கிறதே-
விஷ்ணு: ஏன் அப்படிச் சொல் கிறாய்?
இலட்சுமி: இனிமேல் தசரதன் யாகம் செய்து, அதன் பிறகு நீங்கள் அவதாரம் எடுத்து, முடி துறந்து காட்டுக்குப் போய் பதினான்கு ஆண்டுகள் கழித்து அல்லவோ இராவணனை வதம் செய்யவேண்டும்.
விஷ்ணு: ஆமாம்! நான் அவதரித்து 12 வயதுக்கு மேல் கானகம் சென்று அங்கு பதினான்கு ஆண்டுகள் கழித்து, ஆக 26 ஆண்டுகள் சென்றபின்தான் இராவண வதம் நடைபெறும்.
இலட்சுமி: அத்தனை வருஷங்கள் முனிவர்களும், ரிஷிகளும் துன்பங்களை அனுபவிக்கவேண்டுமா?
விஷ்ணு: ஆமாம்! இவர்கள் சோம்பேறிகளாய் எந்த வேலையையும் செய்யாமல் ஊரில் மக்கள் வாழ்வதற்குத் தேவையான அரிசி, நெல், நெய், எண்ணெய், பழங்கள், வஸ்திரங்கள் ஆகியவற்றை நெருப்பில் போட்டு, பொசுக்கி வீணாக்குகிறார்கள். இதனால் மக்கள் அன்றாடம் சாப்பிடும் உணவுகளுக்கும், உடுத்தும் உடை களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களைக் காக்கவேண்டிய எனக்கு இவர்களால் கெட்ட பெயர் ஏற்படு கிறது. எனவே 26 வருஷமாவது இரா வணனால் இவர்கள் தொல்லையி லிருந்து மக்கள் விடுபட்டு சுபிட்சமாக வாழட்டுமே!
இலட்சுமி: நல்ல யோசனைதான். தாங்கள்தான் சூழ்ச்சி செய்வதில் வல்லவர் ஆயிற்றே!
விஷ்ணு: பொறுத்திருந்து பார்.
இராமன் ஒரு கடவுள் அவதாரம் என்றால் இராமாவதாரமோ!, பரசுரா மாவதாரமோ! ஒரே நேரத்தில் இரண்டு அவதாரங்கள் எடுக்கமுடியுமா? அப் படியே எடுத்தாலும் ஏன் ஒன்றுக் கொன்று சண்டையிட்டுக் கொண்டன. (இராமாவதாரமும், மற்றும் பிற அவதாரங்கள் எடுத்தபோதெல்லாம் பாற்கடலில் பாம்புப் படுக்கையும், விஷ்ணுவும் லட்சுமியும் இல்லாமல் வெறிச்சோடிப் போயல்லவா இருக்கும்? அப்போது விஷ்ணுவின் காத்தல் தொழிலை யார் பார்த்தார்கள்? இது போன்ற அய்யங்கள் ஏற்படுவது நியாயம்தானே?) அவதாரம் என்றால் கடவுளுக்குக் கற்பித்த குணங்களில் ஒரு சிலவாவது இருக்க வேண்டாமா? இராமனைப் பொறுத்தவரை அவன் யாரையும் காத்ததாகத் தெரியவில்லை. அரக்கர்களையும், அவர்களைச் சேர்ந்தவர்களையும் அழித்திருக்கிறான்.
காத்தலைத் தொழிலாகக் கொண்ட கடவுளான விஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் இராமன் அழித்தல் தொழிலையே கைக்கொண்டு நடந் துள்ளான். எனவே இராமன் கடவுள் அவதாரமா? என்ற அய்யம் எழுகிறது. இராமன் கடவுள் அவதாரமா? சிந்தித் துப் பாருங்கள்.
இராமன் தசரதன் மைந்தனா? தசரதன் மைந்தன் இராமன் என்று சொல்லப்படுவது சரியா? தசரதனுக்கு 60,000 மனைவிகள் (முதல் மனைவியைப் பார்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்க்க வேண்டுமானால் சுமார் 165 ஆண்டுகள் ஆகுமே!) அத்தனை மனைவிகள் இருந்தும் பிள்ளைப் பேறு இல்லையே! அதனால்தானே புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் கிடைத்த பாயசத்தை அருந்தியதால்தானே மூன்று பட்ட மகிஷிகளும் நான்கு புதல்வர்களைப் பெற்றதாகக் கூறுகிறார்கள். மேலும் அந்த யாகத்தின் முடிவில் தசரதன் தன் மூன்று மனைவிகளையும் ரித்விக்கு களுக்கு அளித்ததாகவும், அவர்களோடு  ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவி யரும் இருந்ததாகவும் கூறப்படுகிறதே! தவிர வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக எழுதப் பட்டுள்ளதே! அதன் பிறகல்லவா நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.
அப்படியென்றால் இராமன் கோசலைக்கு பிறந்தவன்தானே தவிர தசரதனுக்குப் பிறந்ததாக எப்படி சொல்ல முடியும்? (இந்த இடத்தில் தந்தை பெரியார் அவர்கள் அம்மாதிரி தானுங்களே நமக்குத் தெரியும் என்று சொல்வதை சற்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும்). எனவே கோ (கோசலை)இராமன், பா(பாயசம்) இராமன், கு(குதிரை) இராமன் என்று தானே கூறவேண்டும்? இராமனின் பிறப்பு அதுவும் ஒரு அவதாரத்தின் பிறப்பு இப்படியா இருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள்.
இராமன் தந்தை சொல் மீறாதவன் என்கிறார்களே! தந்தை சொன்னதாக கைகேயி சொன்னது என்ன? இரா மனுக்கு பதில் பரதன் இந்த நாட்டை ஆளவேண்டும். இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண் டும் என்பதுதானே! அப்படியிருக்க சீதை வருகிறேன் என்றவுடன் சம்மதிக் கிறானே! எப்படி? தந்தை என்னை மட்டும்தான் காட்டுக்குச் செல்ல ஆணையிட்டிருக்கிறார்.
என்னுடன் உங்களில் யாரையும் அழைத்துச் செல்லும்படி சொல்லவில்லையே! என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் சீதையையும், லட்சுமணனையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறானே! இது தந்தை சொல்லை மீறியதாகாதா? இதுதான் அவதாரத்தின் லட்சணமா? தந்தை சொல்லை மீறியவன்தானே இராமன்? சிந்தித்துப் பாருங்கள்.
(தொடரும்)


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...