தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் பெரியார் பிஞ்சுகள் பழகு முகாம் இம்மாதம் ஒன்று முதல் 5ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற்றது. முகாமில் 150 குழந்தைகள் பங்கு பெற்றனர்.
1993 முதல் நான்கு ஆண்டுகள் இதுபோன்ற முகாம் நடத்தப்பட்டு, இடையில் நின்று போன இந்த முகாம் கடந்த ஈராண்டுக் காலமாக முன்னிலும் நேர்த்தியாக - பல்வேறு வசதிகளுடன் நடத்தப்பட்டது.
கடந்தாண்டு முகாமில் பங்கேற்ற பிள்ளைகள் தொடர்ந்து வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டும்கூட, அதனையும் மீறி ஆர்வப் பெருக்கால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிள்ளைகள் வந்தனர் என்றால், இந்த முகாமின் ஈர்ப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
1) காலை 5 மணிக்கு விழிப்பு - ஓட்டம் என்று ஆரம்பிக்கும் செயல்பாடுகள் திட்டமிட்ட வகையில் கால வரையறைகளுடன் எதுவும் ஒழுங்கு பிசகாமல் நடைபெற்றதற்குக் காரணம் ஏற்பாட்டாளர்களைவிட அந்தக் குழந்தைகளின் ஒத்துழைப்புதான்.
2) பிள்ளைகளை நேர்ப்படுத்தினால் அதனைப் பற்றிக் கொள்வார்கள் என்பதை முதலில் பெற் றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோர்களின் நடப்புகளும், உரையாடல்களும் பிள்ளைகளைப் பாதிக்கச் செய்யும் என்பது உண்மை. ஒரு வகையில் பெற்றோர்களுக்கேகூட தனி முகாம்கள் நடத்தினால் கூடத் தேவலாம் என்று தோன்றுகிறது.
3) பிள்ளைகளை வெளி உலக வெளிச்சத்திற்கே கொண்டு வராமல் பாசப் பெட்டிக்குள் வைத்து அழகு பார்க்கும் பெற்றோர்கள் முக்கியமாகக் குழந்தை களுக்குக் கெடுதல் செய்தவர்கள் ஆவார்கள் உண்மையைச் சொல்லப் போனால் பெற்றோர்களைப் பிரிந்து 5 நாள்கள் முகாம்களில் தங்கும் குழந்தை களைவிட, அந்தப் பிள்ளைகளைப் பிரிந்த பெற்றோர்களால் தறிகொள்ள முடியாது போலும்! இந்த விசித்திர அனுபவத்தையும் சந்திக்க முடிந்தது.
4. பிள்ளைகள் வரிசையாக நின்று உணவைப் பெற்றுக் கொள்வது, சாப்பிட்ட பின் தட்டுகளை எடுத்துச் சுத்தம் செய்வது, குப்பைகளைத் தொட்டியில் மட்டுமே போடச் செய்வது என்பது போன்றவற்றை முகாம்களில் நாங்கள் கற்றுக் கொடுத்தால் போதுமா? அதனைத் தொடரும் வகையில் பெற்றோர்கள் ஊக்குவித்தால் இந்தப் பழகு முகாமில் பெற்ற பலன் - வாழ்நாள் முழுமையும் பயணித்து வெற்றிக் கனிகளை ருசிக்கச் செய்யுமே, செய்வார்களா பெற்றோர்கள் - உற்றார் உறவினர்கள்?
5) சந்தேகம் வந்தால் துணிச்சலாகக் கேட்பது, தன் எண்ணத்தில் உதித்தவற்றைக் கூச்சமில்லாமல் வெளிப்படுத்தும் பாங்கு, உடற்பயிற்சிகள் மேற் கொள்ளல், எதையும் விரயம் செய்யாமை, அடுத்த வர்களிடம் அன்பாகப் பழகுதல், உதவுதல், இனிமையாக - கனிவாக பேசுதல் என்பதெல்லாம் கடையில் காசு கொடுத்து வாங்கும் பொருள்களல்ல - இவற்றிற்கான தொடக்கத்தை இந்த முகாம் கண்டிப்பாகக் கொடுத்திருக்கிறது.
இவற்றைச் சிந்தாமல் சிதறாமல் பிள்ளைகளை இட்டுச் செல்லும் பெற்றோர்கள், அவர்களுக்குப் பெரும் உதவி செய்தவர்கள் ஆவார்கள்.
6) பிள்ளைகள் கடந்த தலைமுறையினரைவிட வளர்ந்து அறிவிலும், ஆற்றலிலும், கூர்மையாகக் கவனிப்பதிலும், நுணுக்கமானவற்றையும்கூட விரைந்து கிரகித்துக் கொள்வதிலும் வியக்கும் வகையில் அதிக வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பது எங்களின் கணிப்பு.
7) மதவாதிகள் பிஞ்சுகளுக்கு வேறு வகையான பயிற்சிகளை அளித்து பிஞ்சு நெஞ்சங்களில் வஞ்சனை நச்சு விதைகளைத் தூவுகிறார்கள். பெரியார் கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தி இந்தத் திசையில் கவலை கொண்டு இளங் குருத்துகளை ஆற்றுப்படுத்தும் ஆக்கப் பூர்வமான இந்தப் பணிகளையும் தொலைநோக்கோடு செய்து வருவதற்கு ஆக்கம் தர வேண்டியது பெரியவர்களின் கடமையாகும்.
கொள்கைப் பிரச்சாரம், இயக்கப் பணிகள் என்பவைகளோடு இதுபோன்ற பணிகளைத் திட்டமிட்டுச் செய்வது திராவிடர் கழகமே!
உங்கள் வீட்டுப் பிஞ்சுகளையும், மாணவர் களையும், இருபால் இளைஞர்களையும் திராவிடர் கழகத்தை நோக்கி ஆற்றுப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை வெற்றிகரமாக ஆக்குங்கள் என்பதே நமது கனிவான வேண்டுகோள்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினை!
- அம்பேத்கர் அவமதிப்பு
- மதுரை பி.ஜே.பி. மாநாடு
- சந்தி சிரிக்கும் ஆன்மீகம்
- மரபு மீறப்படுகிறதா?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment