Sunday, April 22, 2012

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்


அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யும் சட்டம் ஒன்றினைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
திருமண முறைகள் பல வகைகளில் நடை பெற்றாலும் கூட, அதையும் தாண்டி கட்டாயப் பதிவு என்பது மிகவும் அவசியமே!
ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு ஏற்பாடுகள் இருப்பதைப் பற்றிக் குழப்பிக் கொள்ளாமல் பிறப்பு - இறப்புப் பதிவைப் போல திருமணத்தையும் பதிவு செய்து கொள்வதால் பல்வேறு சிக்கல்களிலிருந்து சமூகம் விடுபட முடியும்.
வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் - சுயமரியாதை திருமணச் சட்டம் கூட செல்லுபடியாகாது. சுயமரியாதைத் திருமணம் என்பது இந்தியத் திருமணச் சட்டத் திருத்தமே. இந்த நிலையில் மத  மாற்றம் செய்து கொள்ளாமல் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்புச் சட்டத்தின் கீழ் (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ) பதிவு செய்து  கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.
இவை எல்லாவற்றையும் புறந்தள்ளிய திருமணம் என்றால் கட்டாயப் பதிவு என்பது ஒரு ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவும். மற்ற மற்ற நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளதுதான்.
இப்பொழுது பெரும்பாலும் பதிவுத் திருமணம் எதற்குப் பயன்படுகிறது? பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால் காதல் இணையர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பதிவுத் திருமண முறை பயன்பட்டு வருகிறது.
மிக எளிய முறையில் திருமணம் நடைபெற வேண்டும்; திருமணத்திற்கு வீண் செலவு செய்யக் கூடாது. அதிக பட்சமாக 10 அல்லது 15 நாட்கள் வருமானம் என்னவோ அந்த அளவுக்குத்தான் திருமணத்திற்குச் செலவு செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார். நான் ஒரு நிமிடம் அரசனாக இருந்தால், திருமணத்திற்காக அதிகம் செலவு செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பேன் என்கிற அளவுக்குக் கூட தந்தை பெரியார் சென்றிருக்கிறார்.
போலி கவுரவத்திற்காகவும், அடுத்தவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகவும் கடன் வாங்கியும் கல்யாணம் செய்து கொள்ளும் போக்கு நாட்டில் இருந்து வருகிறது.
கல்யாணத்துக்காகக் கடன் வாங்குவது, அந்தக் கடனை அடைப்பதற்காகவே சம்பாதிப்பது என்கிற தீய வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையிலிருந்து நம் மக்களை மீட்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். அதனால்தான் சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி வைக்கும் தந்தை பெரியார் அவர்கள் இது போன்ற அவசியமான - மேலான கருத்துகளைக் கூறி வந்துள்ளார்.
திருமண மேடையை சமுதாய மாற்றத்திற்கான இடமாக மாற்றி அதில் மாபெரும் வெற்றி கண்டவர் தந்தை பெரியாரே!
செய்யாறை அடுத்த வாழ்குடை என்கிற ஊரில் ஒரு திருமணத்தில் மூன்றரை மணி நேரம் உரை ஆற்றி யுள்ளார் பெரியார் என்றால் அது என்ன சாதாரணமா?
கட்டாய பதிவுத் திருமண முறை வந்துவிட்டால், தனியாக திருமண விழா என்ற ஒன்று தேவை யில்லாமல் போய்விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் வரவேற்பு விழா என்பது கூட அவசிய மில்லாத ஒன்றுதான்.
தந்தை பெரியார் மிகச் சரியாக வழிகாட்டியுள்ளது போல, திருமணம் செய்து கொண்ட இணையர்கள்,  இந்தத் தேதியில் பதிவு முறையில் தங்களுக்குத் திருமணம் நடந்தேறியது என்று உற்றார் உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் அஞ்சல் அட்டையில் அறிவித்துவிடலாமே.
கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் நிறைவேற்றப் பட்டால் படிப்படியாக - தந்தை பெரியார் அறிவுறுத்திய - வழிகாட்டிய அந்தத் திசையில் சமூகம்  நடை போடத் தொடங்குவதற்கு  அதிகமாகவே வாய்ப்புண்டு.
ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்கள் அவதிப் படாமல் கிராம நிருவாக அதிகாரி மட்டத்தில் (ஏஹடீ) பதிவு செய்வது குறித்தும் யோசிக்கலாமே!


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...