Wednesday, April 4, 2012

தமிழிசைக் கருவிகள் கசக்குதா சிவனுக்கு?


விருத்தாசலத்தில் இருக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அடித்து வைத்திருக்கும் சிவனுக்குத் தமிழிசைக் கருவிகள் கசக்கின்றனவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த ஆறு ஆண்டுக் காலமாக தமிழிசைக் கருவிகளைக் கொண்டு சிவனடியார்கள் வாசித்து வந்தனர். திடீரென்று கோவில் அர்ச்சகர் பார்ப் பனர்கள் தமிழிசையை வாசிக்கக் கூடாது என்று தடை போட்டுள்ளனர். இதனை எதிர்த்து தமிழி சைக் கருவிகளை வாசிக்கும் சிவனடியார்கள் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்கிறார்கள் - வித்தியாசமான போராட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.
தடைக்கு என்ன காரணமாம்?
சிவனடியார்கள் மிக சப்தமாக வாசிக்கிறார் களாம். அதுவும் சிவன் பள்ளியறைக்குச் செல் லும்போது அதிக சத்தத்துடன் வாசிக்கிறார்களாம்- இது பொது மக்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம்.
விருத்தகிரீசுவரர் பள்ளி அறைக்குப் போகிறா ராம்; அப்போது அதிக சத்தம் போட்டுப் பாடு கிறார்களாம் - இதுதான் பிரதான குற்றச்சாற்று.
உண்மைதானே, சிவன் பள்ளியறைக்குச் செல்லுவது பரம ரகசியமான சமாச்சாரம். அதைப் போய் இப்படி நாலு பேர்களுக்குத் தெரியும்படி சத்தம்போடுவது அபச்சாரமாக இருக்கும்தானே! - அது மட்டுமல்ல, சிவனுக்கும் அவனின் பாரி யாளுக்கும் பள்ளியறையில் சங்கோஜமாகத்தானே இருக்கும்? அந்த வகையில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் தடை செய்துள்ளார்கள் போலும்!
உலகத்திலே எந்த மதத்திலாவது கடவுள்கள் பள்ளியறைக்குச் செல்லும் சமாச்சாரங்கள் உண்டா?
அது கேவலம் இல்லையாம் - அந்த நேரத்தில் இசைக் கருவிகளை முழக்குவதுதான் கேவலமாம் - சங்கடமாம்!
அர்த்தமுள்ள இந்த இந்து மதத்தில்தான் கடவுள்களின் இந்தப் பள்ளியறை சமாச்சாரங்கள்! அது மட்டுமல்ல கடவுள் வைப்பாட்டி வீட்டுக்குச் செல்லுவதும் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான்.
உண்மை என்னவென்றால், பள்ளியறை களுக்கும் சரி, வைப்பாட்டி வீட்டுக்கும் சரி, கடவுளைத் தூக்கிக் கொண்டு செல்லுபவர்களே இந்தப் பக்தர்கள்தான் - மனிதர்கள்தானே!
அப்படித்தான் பள்ளியறைகளுக்கும், வைப்பாட்டி வீட்டுக்கும், தூக்கிக் கொண்டு இன்று வரைக்கும் சென்று கொண்டு இருக்கிறார்களே  - குழந்தை குட்டிகள் உண்டா? இன்னும் பழைய விநாயகனை யும், சுப்பிரமணியனையும்தானே சொல்லிக் கொண்டு திரிகிறார்கள்? கடவுள்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு விட்டார்களா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி விட்டல்லவா சிவனடியார் சத்தம் போட்டு கருவிகளை வாசிப்பதால் சிவனுக்கு அந்தரங்க ரகசியங்களுக்கு இடையூறாக இருக்கிறது, தூக்கம் கெட்டுப் போகிறது என்கிற இடத்துக்கு வர வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோவிலுக்குள் புகுந்து கொண்டு தமிழ் அர்ச்சனை கூடாது; தமிழன் அர்ச்சகனாக வரக்கூடாது; தமிழிசைக் கருவிகளை இசைக்கக் கூடாது என்று தடை போடுகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன?
தமிழனுக்கு இன்னும் தன்மான உணர்ச்சி இன உணர்ச்சி போதுமான அளவு வரவில்லை - நியாயமான அளவுக்கு எதிர்ப்பின் வேகம் அதிகரிக்கவில்லை என்றுதானே பொருள்!
சிவனே உடுக்கடி வித்தகன்தானே - அப்படியிருக்கும்போது தமிழிசைக் கருவிகள் இசைக்கப்படுவதை எப்படி வெறுப்பான் சிவன்? இவ்வளவுக்கும் சிவனடியார்கள் தமிழிசைக் கருவிகளை மீட்டுவதற்கு எந்தவித பணமும் வாங்கிக் கொள்வதில்லையாம்.
எப்படியாக இருந்தாலும், தமிழ் சம்பந்தப்பட்டது எதுவாக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு நீஷமானது தானே!
இந்து அறநிலையத்துறை இதில் ஏன் தலையிடவில்லை? பக்திக்கு அப்பாற்பட்டுப் பொதுப் பிரச்சினையாக இது வெடித்துக் கிளம்ப வேண் டுமா? இந்து அறநிலையத்துறைதான் முடிவு செய்ய வேண்டும்.


.
 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...