Sunday, February 5, 2012

உண்ணுவதற்கு எண்ணுவதும் ஏற்பதும் தேவை! தேவை!!'





மனிதர்களில் இருவகை உண்டு
1. வாழ்வதற்காக உண்பவர்கள்
2. உண்பதற்காகவே வாழ்கிறவர்கள்
உடலைப்  பாதுகாக்கவேண்டியது அவசியம்.
உடம்பார் அழியின் உயிரார் அழி வார் என்பது உண்மைதான். அதற்காக சதாசர்வகாலமும் உணவுக்கே முக்கி யத்துவம் கொடுத்து, அரவை மில் போல் அரைத்துக் கொண்டே இருப்பது, நாக்கு ருசிக்காக பல  மைல் தேடித் தேடி, ஓடி ஓடி உண்பது.
கால நேரம் பார்க்காது, ஏன் சில நேரங்களில் சுவை, தரம் பற்றிக் கூட எண்ணாது, சாப்பிட்டுக் கொண்டே இருப்பது, அதனால் ஊளைச் சதை மலையாகி மூச்சுவிடுவதற்குக் கூட திணறும் நிலை - இள வயதிலேயே இன்று எங்கணும் நாம் காணும் அன்றாட  அவலங்களாகி உள்ளன!
சமச்சீர் உணவாக, சத்துள்ளவை களை காய்கறிகளாகவோ, மீன், முட்டை, இறைச்சி வகையறாக்களாகவோ சாப்பிடுவது அவசியம்தான். அதற்காக அளவுக்கு அதிகமாக உண்டால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு, நோய்களுக்கு நாம் இரையாகிட நேரிடும்.
மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு அருமையான அறிவுரை.
அளவுக்கு மீறி உண்பதால்தான் இளமையிலேயே இளைஞர்கள் பலர், மாரடைப்பு என்ற இதயநோய்க்கும், சர்க்கரை நோய் என்ற டயபெட்டீசுக்கும் ரத்தக் கொதிப்புக்கும், செரிமானக் கோளாறுக்கும் ஆட்படும் அவலம் உள்ளது!
பன்னாட்டு உணவகங்களின் படை யெடுப்பினால், பணச் செலவு ஒருபுறம், மறுபுறம் உடல்நலக் கேடு என்பது மலிந்து வேக உணவு (ஃபாஸ்ட் புட்) உண்டு வேக வேகமாக தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள வில்லிலிருந்து வெளிப்பட்ட அம்புகள் போல் பறபறவென்று பறக் கின்றனர்!
பர்கர், பீட்சா இப்படி விதவிதமாக பேட்டைக்குப் பேட்டை அங்கிங்கெனாத படி எங்கும் உள்ளதால், கொஞ்சம் சுமாரான வசதி படைத்த குடும்பத்தில் உள்ள இருபால் இளைஞர்களும், மாண வர்களும் தின்பது, கொக்கோகோலா (கோக்) போன்றவைகளைக் குடிப்பது போன்றவற்றில் ஒரே நேரத்தில் பல நூறு ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள். அமெரிக்காவில் இது மலிவு உணவு; இங்கோ அதிகம். (டாலர் மதிப்பு ஏறுமுகம்; ரூபாய் மதிப்பு இறங்கு முகம் என்பதால் ஏராளமான பணத்தை நமது பிள்ளைகள் தண்ணீர்போல் செல வழிக்கின்றனர் - பழங்கால உவமைக்கு மன்னிக்கவும், இப்போது தண்ணீர்தான் விலை அதிகம் உள்ள பொருளாக மாறி வருகிறதே!).
தானே புயலால் பாதிக்கப்பட்ட நமது மக்களிடம் கேட்டுப் பார்த்தால், குடி தண்ணீருக்கு சில நாள்கள் பட்டபாடு அவர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத அனுபவ வடுவாக பதிந்து விட்டதே!
முதலில் எங்கு உண்ணப் போனாலும், உங்கள் கைகளை நன்றாகக் கழுவி, வாய் கொப்பளித்து அமர்ந்து சாப்பிடுங்கள்.
இப்போதெல்லாம் பல பிள்ளைகள் - இருபாலரும்தான் - ஏதோ ரயிலில் பயணம் செய்வோர், நடைமேடைகளில் - பிளாட் பாரங்களில் நின்று கொண்டு அரக்க பறக்க கைகளில் தட்டைத் தூக்கிக் கொண்டு, இன்னொரு காதில் செல்போன் பேச்சுகளில் ஈடுபட்டு எதைச் சாப்பிடுகிறோம் என்று கூடத் தெரிந்து கொள்ளாது உண்ணும் பழக்கமும் வீடு களில்கூட அன்றாடக் காட்சிகளாக அரங்கேறி உள்ளன!
ஆர அமர்ந்து கலகலப்பாகப் பேசி, குடும்பத்து உறுப்பினர்கள் மேஜைமுன் அமர்ந்து சாப்பிடுவதை நாம் தொலைத் துப் பல ஆண்டுகளாகிவிட்டனவே!
ஒவ்வொருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சர்வ சாதாரணம்! அதிகம் சாப்பாடு உள்ளே போவது தெரியவே தெரியாது! விளைவு - நாற்காலி பொம்மைகளான உருளைக் கிழங்குகளாக(Counch Pototos) ஆகி ஊதி உப்பி, பெருத்து பிறகு அவதிக் குள்ளாகும் நிலைதான்!
அமெரிக்கா மற்றும் பல மேலை நாடுகளில் முக்கிய உணவு ஒரே ஒரு வேளைதான் வீடுகளில்! மாலை வேலை முடித்துத் திரும்பி சாப்பிடும் பிரதான சாப்பாடு (Dinner) தான். காலையில் ஒரு ரொட்டித் துண்டும், கப் காபியும்; இன்றேல் வெறும் காப்பி மட்டுமே! மதியம் அநேகமாக பட்டினி அல்லது ஏதாவது சூப், ஜூஸ் - பழரசம் அல்லது பழங்கள் போன்ற லேசான உணவு.
இங்கோ நமக்கு மூன்று வேளை முக்கிய உணவுகள் - பலருக்கு ஆறுகால பூஜையும் உண்டு - இடையில் நொறுக்குத் தீனிகளும் கூடவே!
ஆனால், சரியான உடல்நலம் பேண எப்படி உணவு முறை அமையவேண்டும் என்பதுபற்றி மருத்துவர்கள் மற்றும் வாழ்வியலாளர்கள் பலரும் கூறுவது!
வயிற்றில் அரை பாகம் உணவு - திட உணவு
கால் பகுதி - திரவப் பகுதி - உணவு
கால் பகுதி காலியாக விட்டு விடுதல்,
செரிமான உறுப்புகளை நாம் சுமை ஏற்றி பணி செய்யச் சொன்னால், அது வெகுவிரைவில் பழுதாகி விடுமே என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் இல்லையே!
உணவு எடுத்த பிறகு கடும் நடை, யோகா பயிற்சிகளைச் செய்வது நல்ல தல்ல.
உடனே படுப்பது, தூங்குவதும் சரியான உடல்நலப் பாதுகாப்பு ஆகாது!
இரவு ஒரு மணிநேரம், பகல் அரை மணிநேரம் கழித்தே படுக்கைக்குச் செல் லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள் ளுங்கள்.
காலை உணவு தவிர்க்கப்படக் கூடாது.
இரவு உணவுக்கும், காலை உணவுக் கும் இடையே பல மணி பட்டினி என்பதை முறிக்கவே Break Fast என்று வெள்ளைக் காரர்கள் பெயரிட்டனர் - புரிந்து கொள்வீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...