Sunday, February 5, 2012

மதத்தினால் ஏற்படும் மிகப் பெரிய சீரழிவு, அது குழந்தைகளின் மூளையை சலவை செய்வதுதான்


வினீத் கில்
(நம் காலத்தில் வாழும் தலைசிறந்த சுயசிந்தனையாளர்களில் ஒருவர் ரிச்சர்ட் டாக்கின்ஸ். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் மரபணுவியல் பேராசிரியராகப் பணியாற்றும் அவர், மதத்தின் மீது கடுமையான- அறிவார்ந்த போர் ஒன்றினை மேற் கொண்டுள்ளார். மக்களிடையே தற்போது ஆட்சி செய்யும் மதத்தின் இடத்தில் அறிவியலும், பகுத்தறிவுமே ஆட்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துபவர் அவர்.

அண்மையில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவுக்கு வருகை தந்திருந்த அவர், மதநம்பிக்கையை விடுத்து அறிவியலுக்கு மட்டுமே தான் ஏன் முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பது, தான் ஒரு நாத்திக தீவிரவாதியா என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், அழிவற்ற தன்மை என்பது போன்ற பிரச்சினைகள் பற்றியும் பேசியுள்ளார்.)

இன்றுள்ள சராசரி மதம் பற்றிய தங்களின் கருத்து என்ன? அது தீவிரவாதிகளை உருவாக்கும் இடம் என்று முன்னர் நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.

ஆம்.  அவ்வாறு நான் கூறியிருப்பது உண்மையாகவே ஆகிவிடும் என்று நான் அஞ்சுகிறேன். மதநம்பிக்கை என்பது ஒரு நற்கூறு  என்றும், எதையாவது நம்புவ தற்கு உங்களுக்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை என்றும் குழந்தைகளுக் குக் கற்பித்தால்,  ஒரு சிறுபான்மையின மக்கள் தீவிரவாதிகளாக ஆகிவிடுவ தற்கு அது வழி வகுக்கும்.  உங்களது நம்பிக்கையைப் பொறுத்தது என்றால் அதனுடன் நீங்கள் விவாதிக்கக்கூடாது என்ற கருத்து எல்லோர் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது.

இது பேரழிவை ஏற்படுத்துவதாகும் என்பது என்றே நான் எண்ணுகிறேன். தங்களது நம்பிக்கைக்கு ஆதாரங்கள் எதுவும் தேவையில்லை என்று குழந்தைகளுக்குக் கற்பித்தால், தீவிரவாதத்திற்கு அது வழி வகுக்கிறது.  மதம் விளைவிக்கும் மாபெரும் கேடு குழந்தைகள் மனதில் இத்தகைய நம்பிக்கைகளை விதைத்து அவர்களது மூளையை சலவை செய்வதுதான்.

மதத்தை விட அறிவியலையே நீங்கள் பெரிதும் விரும்பி ஆதரிக் கிறீர்கள் - அறிவியல் தவறாகிப் போகும்போது என்ன நேரிடும்?

அனைத்து உண்மைகளையும் தான் அறிந்திருப்பதாக அறிவியல் எப்போதுமே கூறுவதில்லை.  உண்மைக்கு படிப்படியாக மிக நெருக்கமாகச் செல்லவே அது கடினமாக செயலாற்றுகிறது. அறிவியலும் தனது தவறுகளில் இருந்தே கற்றுக் கொள்கிறது; ஊகங்களையும், தவறான வைகளையும் உண்மை அல்ல என்று மெய்ப்பித்துதான் அறிவியல் வளர்ச்சி அடைகிறது.  ஆதாரங்களின் அடிப் படையில் தனது மனதை மாற்றிக் கொள்ள அறிவியல் தயாராக இருக்கிறது என்பதுதான் அதன் நற்கூறுகளில் ஒன்றாகும்.

வெளிப்படையாக அனை வருடனும் பகிர்ந்து கொள்வது என்பது அறிவியல் கோட்பாட்டின் ஒரு பகுதி யாகும். இது எனக்கு உண்மை; ஆனால் அது உனக்கு உண்மையாக இருக்க முடியாது என்று எந்த அறிவியலாளரும் கூறமாட்டார்.
ஆராய்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் அறிவியல் இடம் அளிக்கிறது. அப்படியிருக்கும்போது, மதத்தை ஒட்டு மொத்தமாக தவிர்த்து விடாமல், மக்கள் தங்கள் சிந்தனை களை வளர்த்துக் கொள்ளும், வாழும் ஒரு சோதனைச் சாலை யாக மதத்தை நாம் ஏன் பார்க்கக் கூடாது?

மனிதனின் தோற்ற, வளர்ச்சியியல் மற்றும் மனவியல் ஆய்வுக் களத்தில் அவ்வாறு செய்வது சரியானதாக இருக்கலாம்.  மதம் பற்றி ஒருவகையில் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். நீங்கள் இந்த மதம் அல்லது அந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று மட்டும் அவர்களுக்குக் கூறக் கூடாது. இந்த மதம் இருக்கிறது; அந்த மதம் இருக்கிறது என்று அவர்களுக்குக் கூற வேண்டும். நீ வளரும்போது இவை களில் எதில் வேண்டுமானாலும் சேரவோ, எதிலும் சேராமல் இருக்கவோ முடிவு எடுக்கலாம் என்றும் அவர்களுக்குக் கூற வேண்டும்.

காலத்தை அறிவியல் வெற்றி கொள்ள வேண்டுமானால், அதன் உதவியுடன் அழிவின்றி நிலைத் திருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?

இறப்பு பற்றி அச்சம் கொள்ளத் தேவையானது ஏதேனும் இருப்பதாக இருந்தால், எப்போதும் நிலைத்திருப் பதைப் பற்றிய அச்சம்தான் அது என்று நான் நினைக்கிறேன்.  அந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதும் அதே போல் அச்சத்தைத் தருவதுதான். உண்மையில், அங்கு நீங்கள் இருப்பது உங்களை அதிகமா கவே அச்சப்படுத்தும். நூற்றுக்கணக் கான, கோடிக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருப்பதை எண்ணிப் பாருங்கள். எத்தகைய சோர்வு தரக்கூடியது அது. அவ்வாறு அழிவின்றி வாழ நேர்ந்தால், ஒரு மயக்க நிலையில் வாழ்வதையே அப்போது நான் விரும்புவேன். அதுதான் நடக்கப் போவதும் கூட.

அறிவியல் களத்துக்கு வெளி யில், மதம் மக்கள் மீது கொண்டி ருக்கும் ஆற்றல் மிகுந்த செல்வாக் குக்கு என்ன விளக்கத்தை, கார ணத்தை உங்களால் அளிக்க முடியும்?

அது மிகவும் ஆர்வம் அளிப்பதாகும். யாரோ ஒருவரை நம்பிக்கையால் கொல்லச் செய்ய முடியும் என்பதில் என்ன இருக்கிறது? தேசப்பற்று என்பது வேறு. எனது நாடு சரியானது அல்லது தவறானது என்று மக்கள் நம்புகிறார்கள். உலகப்போர்களில்,   மற்ற நாட்டு மக்களை, அவர்கள் தவறான நாட்டைச் சேர்ந்த வர்கள் என்பதால்,  அவர்களின் கருத்து என்ன என்பதைக் கேட்கவும் செய்யாமல், மிகச் சரியாக சுட்டுக் கொள்ள ஒரு நாட்டு மக்களால் முடிகிறது. மத நம்பிக்கையும் அத்தகையதுதான்.

மதநம்பிக்கையை ஒரே அடியாக ஒட்டு மொத்தமாக  நிரா கரிப்பதால், உங்களை ஒரு நாத்திக தீவிரவாதி அல்லது அடிப்படை வாதி என்று கூறலாமா?

அடிப்படைவாதி என்றால் ஒரு புனித நூலையே நீங்கள் நம்புகிறவர் என்றும், எப்போதும் அது பற்றி உங்கள் மனதை மாற்றிக் கொள்ளாதவர் என்றும் பொருள் தரும். ஆனால், கண்முன் உள்ள ஆதாரங்கள் மாற்றம் தேவை எனக் காட்டினால், நான் என் மனதை மாற்றிக் கொள்ளத் தயாராக உள்ளேன். உங்களுடைய நண்பரும், சகநாத்திகருபமான காலம் சென்ற கிறிஸ்டொபர் ஹிச்சன் பற்றி உங் கள் கருத்து என்ன?

கிறிஸ்டொபர் ஹிச்சன்ஸ் ஒரு மாபெரும் போராளியும், ஒரு அற்புதமான சொற்பொழிவாளரும்,  ஒரு குத்துச் சண்டை வீரரும், ஒரு மனிதநேயம் மிக்க மனிதரும் ஆவார். கருணை மனம் கொண்ட அவர், முட்டாள்களுடன் விவாதிக்கும்போதும் அவர்களை சிறைப் படுத்துவதில்லை; புண்படுத்துவதில்லை.

சல்மான் ருஷ்டி இங்கு இல்லாமல் போயிருக்கலாம். என்றாலும் கடவுளின் நிழல் ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவின் மீது பெரிதாகவே விழுந்தது. கடவுளை கணினி நோய்க்கிருமி என்று ரிச்சர்ட் டாக்கின்ஸ் விவரித்து கடவுள் கருத்தை மறுத்தார். மக்கள் நாம் நாமாக இருப்பதற்குக் காரணமே நமது மரபணுக்கள்,  உயிரினத் தோற்ற வளர்ச்சி வரலாறுதான்.

கடவுளை நீங்கள் நம்பவேண்டும் என்றால், உயிரியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்களின் வாதங்களை நீங்கள் பார்க்காதீர்கள். கடவுள் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலில் உங் களுக்கு விடை கிடைக்காது  என்று டாகின்ஸ் அவரது பேச்சைக் கேட்க ஜெய்ப்பூரில் கூடியிருந்த நூற்றுக்கணக் கான மக்களிடம் கூறினார்.

கடவுள் இருக்கிறார் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல என்று கூறும் பல்வேறுபட்ட தத்துவங்கள் உள்ளன என்று கூறிய உலகின் மாபெரும் நாத்திக ரானடாக்கின்ஸ், கடவுளை அறி வார்ந்த படைப்பாளி என்று கூறப்படும் தத்து வத்தைப் பொய் என்று மறுதலிக்கிறார்.

மதம் என்பது தீயதன்மையின் ஒரு வடிவம், குழந்தைகளின் இளம் மனதை மயக்கிக் கெடுப்பது என்று கூறும் டாக்கின்ஸ் அமைப்பு ரீதியிலான மதங்கள் அழிய வேண்டும் (இறக்க வேண்டும்) என்று விரும்புகிறார். கடவுள் நம்பிக்கை என்பது கணினி நோய்க்கிருமி (வைரஸ்) போன்றது என்று அவர் கூறுகிறார். ஒரு கடிகாரத்தைத் தயாரிக்க ஒரு தயாரிப்பாளர் இருப்பதைப் போல பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் ஒருவர் இருக்க வேண்டும் என்ற வாதத்துக்கு எதிராக 1986 ல் தான் எழுதிய குருட்டு கடிகார தயாரிப்பாளர் என்ற தனது நூலில், உயிரினத் தோற்ற வளர்ச்சியை ஒரு குருட்டு கடிகார தயாரிப்பாளருடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

யூத, கிறித்துவ, இஸ்லாம் மதங்களின் அடிப்படையிலான ஒழுக்க நெறிகளைக் கண்டிக்கும் டாக்கின்ஸ், 21 ஆம் நூற் றாண்டில் மதச்சார்பற்ற மதிப்பீடுகளின் அடிப்படையிலான ஒழுக்க நெறி அமைய வேண்டும் என்று கோருகிறார்.

நாம் 21 ஆம் நூற்றாண்டு ஒழுக்க நெறியாளர்கள்; நாத்திகர்கள் ஆவோம். மதங்களிலிருந்து நாம் ஒழுக்க நெறிகளைப் பெறத் தேவையில்லை. மதச்சார்பற்ற ஒழுக்க தத்துவத்திலிருந்து, மதசார்பற்ற நீதித்துறையிலிருந்து, உணவருந்தும் மேசை கலந்துரையாடல்களிலிருந்து நமது ஒழுக்கநெறிகளை நாம் பெறுகிறோம்.

வரலாற்றுக் காலத்தில், மனிதத் தன்மை கருணை நிறைந்ததாக மேன்மை அடைந்ததற்கு மதம் காரணம் அல்ல என்று கூறிய டாகின்ஸ், 21 ஆம் நூற்றாண் டில் மக்கள் எவ்வாறு இனஉணர்வு, பால் உணர்வு ஆகியவற்றிலிருந்து வெளிப் போந்தனர் என்பதை சுட்டிக் காட்டினார்.

20 ஆம் நூற்றாண்டு புதினம் இனஉணர்வைக் கொண்டதாக இருக்கும். ஏதோ சில விஷயங்கள் மாற்றம் பெற்று வருகின்றன. ஆனால் அதற்கும் மதத் திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

மத புனித நூல்களில் ஒழுக்க நெறிகளைக் காண நாம் விரும்பவில்லை. அறிவொளிபெற்ற மதச்சார்ப்பற்ற ஒழுக்க மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ள நம்மால் முடியும் என்று கூறிய டாகின்ஸ் இந்த மதசார்பற்ற ஒழுக்க நெறியை மனிதநேய பிரகடனம்  என்று அழைத்தார்.

மரபணுவை மய்யமாகக் கொண்ட உயிர்த் தோற்ற வளர்ச்சியை பிரபலமாக்கிய தனது சுயநலமிக்க மரபணு  என்ற நூலில், ஒரு மரபணு மனப்பான்மையையும்,  பொதுநலம் பேணும் விழைவையும், மற்ற மனிதரிடம் அன்பாக வும், கருணையுடனும் இருப்பதையும் மனிதஇனம் பெற்றுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
(நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா 25.1.2012
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...