Monday, February 6, 2012

டீ சாப்பிடலாம் வாங்க!


தேநீர் அருந்துவதில் மிகவும் உடல் நலப் பாதுகாப்பு அமைகிறது என்று மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து கூறுகிறார்கள்! மிக நல்ல செய்தி இது!
பல்வகை நோய்கள் தடுப்புக்கு தேநீர் உதவுகிறது என்கின்றனர் அவர்கள்!
டீயில் உள்ள ஃபிளோவோநாய்டு (Flavonoids) என்பது Anti-Oxidents என்பதாக இயற்கையிலேயே ஏராளம் உள்ளது.
டீயில் கேட்டீசென்ஸ் (catechins)  என்ற ஒரு AntiOxidents உள்ளது. அது புதிதாக பறிக்கப்பட்ட தேயிலைகளில் சுமார் 30 சதவிகிதம் உள்ளது!
கிரீன் டீ என்ற தேநீரிலும்,  வெள்ளைத் தேயிலையிலும் இந்த கேட்டீசென்ஸ் என்பது மிகவும் கெட்டிப்பட்ட தன்மையில் இருக்கிறதாம்!
இந்த கிரீன் டீயில் உள்ள பிளோவோ னாய்ட் என்பது ஸ்ட்ரோக் (stroke)  மற்றும் இதய - மாரடைப்பு நோய்த் தடுப்பாகவும் பயன்படுகிறதாம்!
காஃபியில் கேஃபின் (caffene) என் பது டீயில் குறைவாக உள்ளது. காஃபியில்  135 அப கேஃபின் இருக்கிறது; டீயில் அது 30, 40 அப அளவில்தான் உள்ளது.
காஃபி குடிப்பதால் அஜீரணம், தலை வலி, தூக்கமின்மை முதலியவை ஏற்படக் கூடும். ஆனால் டீயில் அப்படி ஏதும் இல்லை. அதைவிட, புற்றுநோய்த் தடுப் பாகவும் டீ பயன்படுகிறது. அதிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கிறதாம்!
டீயில் பாலிஃபோனெல்ஸ் (Polyphenols) என்பது Anti -Oxidents என்ற கரியமில வாயுக்கு எதிரான சத்துகளும் புற்றுநோயை எதிர்த்துப் போரிடும் வீரர்களாகத் திகழ்கின்றனவாம்! எனவே டீ குடித்தால் அது ஒரு வகையில் கேன்சரிலிருந்து நம்மைப் பாதுகாக்கிற முறையாகவும் அமைந்துவிடுகிறது!
போலிஃபோனெல்ஸ் என்பவை புற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் பல்வேறு முறைகளை உருவாக்கிட உடலுக்குள் உதவுவதாக ஆய்வு நிபுணர் கள் கூறுகிறார்கள்!
எனவே கிரீன் டீ, பிளாக் டீ (பால் போடாதது) ஆகியவை புற்றுநோய் தடுப்புக்கான சத்துகளைக் கொண்டதாக அமைந்துள்ளன.
அதோடு, டீ என்பது கலோரிகளை உடலில் கூட்டி, உடல் எடை கூடி, பரும னாக்காமல் தடுக்கவும் கூடியது என்கின் றனர். இனிப்பு மாத்திரைகளையோ, பாலையோ சேர்க்காததால் இந்த மாதிரி கூடுதல் கலோரிகள் உடலில் சேர வாய்ப்பில்லை எனக் கூறுகின்றனர்! எனவே கோக் போன்றவைகளைக் குடிக்காமல் டீ குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மற்றொரு போனஸ் செய்தியும் தேநீர் அருந்துபவர்களுக்கு.
மெட்டபாலிசம் (Metobolism)  என்பது உடலில் உள்ள உடல் கூறு அம்ச மாகும். இது மிகவும் நடந்தால் எடை குறைப்பு போன்றவைகளைச் சரிவர நடத்திட முடியாது!
கிரீன் டீ என்ற பசுந்தேநீர் - பச்சை யான வர்ணத்தில் இருக்கிறது; இப்போது எல்லா முக்கிய கடைகளிலும் கூட கிடைக்கிறது. சிறுசிறு பொட்டலங்களாக -அதை வாங்கி, வெந்நீரில் போட்டு கிரீன் டீ தயாரித்து, தொல்லையின்றி குடிக்க லாமே!
மெட்டபாலிக்ரேட் என்பதை அது அதிகப்படுத்தி 70, 80 கலோரிகளை தினமும் எரித்து உடல் எடை கூடாமல் தடுக்கிறதே!
என்ன டீ சாப்பிடலாமா? டீ பார்ட்டி என்ற சொல் நல்ல சொல்தானே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...