Saturday, February 4, 2012

ஸ்காட்லாந்து இறுதியாக எந்த நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது ?



ஸ்காட்லாந்து நாடு இறுதியாக பனாமா நாட்டின் மீது படையெடுத்துச் சென்றது. கிரேட் பிரிட்டனை உருவாக்க இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளுடன் ஸ்காட்லாந் தை இணைக்கும் 1707 ஆம் ஆண்டு யூனியன் சட்டம் இயற்றப் பட்ட பிறகு, ஸ்காட்லாந்து மேற்கொண்ட மிக மோசமான முயற்சி டேரியன் இஸ்துமஸ் (இருபக்கமும் நீரால் சூழப்பட்டு, பெருநிலப் பகுதியுடன் இணைந் திருக்கும் வால் போன்ற நிலப்பகுதி) பகுதியை குடியேற்றப் பகுதியாக ஆக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதுதான்.
இங்கிலாந்து வங்கியின் தோற்றுனரான வில்லியம் பேடர்சன் கனவு கண்ட திட்டம் இது. பசிபிக் பகுதியில் இருக்கும் பணக்காரர்களை வியாபாரம் செய்யும் மேற்கு அய்ரோப்பிய நாடுகளுடன் இணைக்கும் ஓர் இணைப்பாக ஒரு வர்த்தக மய்யத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் கருதினார். இந்தத் திட்டத்தில் பங்குதாரர்களாக சேருவதில்லை என்ற முடிவை ஆங்கிலேயர்கள் விரைவாக எடுத்துவிட்டனர். அந்த நேரத்தில் இங்கிலாந்து பிரான்ஸ் நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், பனாமா நாட்டின் மீது உரிமை கொண்டாடும் ஸ்பேனிஷ் நாட்டைக் கோபப்படுத்த அவர்கள் விரும்பவில்லை. இந்தத் திட்டத்தைப் பற்றி இங்கிலாந்து அரசு கேள்விப் பட்டவுடன், அதில் ஆங்கிலேயர்கள் முதலீடு செய்வதைத் தடை செய்து விட்டது. அதன் எல்லைக்கு வடக்கே இருந்த ஸ்காட்லாந்தில் இருந்து மட்டுமே தனது நிதி ஆதாரம் அனைத்தையும் திரட்டுவது என்று பேடர்சன் முடிவு செய்துவிட்டார். ஆறு மாதங்களில் 400,000 பவுண்டுகளை அவர் திரட்டினார். அந்த அளவுக்கு இதில் முதலீடு செய்வதில் ஸ்காட்லாந்துக் காரர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர்.  ஏறக்குறைய அனைத்து ஸ்காட்லாந்துக்காரர்களும் 5 பவுண்டுகளாவது செலுத்தி தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொண்டனர்.
லீய்த் துறைமுகத்தில் இருந்து 1698 இல் புறப்பட்ட முதல் அய்ந்து கப்பல்கள் நவம்பரில் சென்றடைந்தன. அவர்கள் சரியான தகவல்கள் அறிந்தவர்களாகவோ, எதற்கும் தயாராக இருப்பவர்களாகவோ இருக்கவில்லை. தாங்கள் ஒரு புதிய செல்வக் களஞ்சியத்தை உருவாக்கப் போகிறோம் என்று நம்பியிருந்த அவர்கள், அந்த நிலப்பகுதி விவசாயம் செய்யவும் லாயக்கற்றதாக, கொசுக்கள் நிரம்பிய, தண்ணீர் தேங்கி நிற்கும் சதுப்பு நிலக் காடாக இருந்தது. விற்பதற்காக அவர்கள் கொண்டு வந்த விக், கண்ணாடிகள், சீப்புகள் எதுவும் அங்கு வாழும் இந்தியர் களுக்குத் தேவையாக இருக்கவில்லை. அப்பகுதியில் இருந்த ஆங்கிலேயக் குடி யிருப்புகள் இந்தப் புதிய பகுதியுடன் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் இருந்த ஸ்பானிஷ் மக்களோ தணிக்க முடியாத பகைமை பாராட்டினர்.
ஆறுமாத காலத்தில், அங்கு குடியேறிய 1,200 பேர்களில் 200 பேர் மலேரியாவினாலும் மற்ற வெப்பநாடுகளின் நோய்களாலும் இறந்து போயினர். இறப்பவர்களின் விகிதம் ஒரு நாளைக்கு பத்து என்ற அளவில் உயர்ந்தது.  சதுப்பு நிலத்தில் தேங்கி இருந்த நீரை வற்றச் செய்வதிலேயே அவர்களின் முதுகு ஒடிந்துபோனது. அவர்கள் கொண்டு வந்த உணபுப்  பொருள்கள் அனைத்தும் கெட்டுப் போயின. கோடை காலம் துவங்கிய நேரத்தில் அவர்கள் ஒரு வாரத்தில் பூச்சிகள் விழுந்த ஒரு பவுண்டு மாவை மட்டுமே கொண்டு உயிர் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நேரத்தில் ஸ்பானிஷ்காரர்கள் தாக்கப் போகிறார்கள் என்று வந்த செய்தியே அவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப் போதுமானதாக இருந்தது. சென்றவர்களில் 300 பேர் மட்டுமே ஸ்காட்லாந்துக்குத் திரும்பினர்.
இந்த முயற்சி ஸ்காட்லாந்து நாட்டுக்கு பெரும் பேரழிவாக அமைந்தது. மக்களின் மனஉறுதி தளர்ந்த நிலையில், அவர்களின் பொருளாதார நிலை ஏறக்குறைய 250,000 பவுண்டுகள் கடனாளிகளாக ஆக்கிவிட்டது. அதன்பின் ஏழு ஆண்டுகள் கழிந்த பிறகு, இங்கிலாந்து நாட்டுடன் இணைக்கும் சட்டத்தில் கையெழுத்திடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்காட்லாந்துக்கு உதவி செய்ய மறுத்த இங்கிலாந்து, இணைப்பைத் தவிர்க்க முடியாததாக ஆக்கி ஸ்காட்லாந்தை அவமானப்படுத்திவிட்டது என்பதே ஸ்காட்லாந்து பொதுமக்களிடையே நிலவிய பொதுவான ஒருமித்த கருத்தாகும். அடுத்த நாற்பது ஆண்டுகளில் ஜாக்கோபைட்டு நோக்கத்துக்கு ஸ்காட்லாந்து மக்கள் அளித்த ஆதரவின் பின்னணியில்,  அவர்கள் இழந்த குடியேற்றப் பகுதி பற்றிய எதிர்பார்ப்புகள் நொறுங்கிப் போனதும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளும் இருந்தன. டேரியன் பகுதியைப் பொறுத்த அளவில், அடர்ந்த காடு கொண்ட மனிதர் வாழ்வதற்கு சிறிதும் லாயக்கற்ற இடமாக தொடர்ந்து இருந்து வருகிறது. வடக்கே அலஸ்காவையும், தெற்கே அர்ஜன்டைனாவையும் இணைக்கும் அமெரிக்க நெடுஞ்சாலையும் கூட டேரியன் இடைவெளியில் போடமுடியாமல் விட்டுவிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...