Thursday, February 16, 2012

சல்மான் குர்ஷித் செய்த தவறு என்ன?

சல்மான் குர்ஷித் செய்த தவறு என்ன?

உத்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ்ஆட்சிக்கு வந்தால் முசுலிம்களுக்கு 9 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறிவிட்டாராம். இது தேர்தல் விதிமுறைக்கு முரண்பட்டது என்ற பிரச்சினையைப் பூதாகரமாக்கி இருக்கிறது பி.ஜே.பி. அதற்குத் துணை போய்க்கொண்டு இருக்கிறது தேர்தல் ஆணையம்.
காங்கிரஸ் தன் தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் அதனை விளக்கிப் பேசியதில் என்ன குற்றம் என்று தெரிய வில்லை.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொன்னவுடன் பார்ப்பனீய பாரதீய ஜனதாவுக்குப் பச்சை மிளகாயைக் கடித்தது போன்ற எரிச்சல். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் - ஆகா, ஒரு மத்திய அமைச்சர் எப்படி இப்படிப் பேசலாம்? இது தேர்தல் விதிமுறைக்கு எதிரானது அல்லவா என்று உத்தம புத்திரர்கள் போல பூமிக்கும், விண்ணுக்கும் தாவிக் குதிக்கின்றனர்.
இதே பாரதீய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில், உத்தரப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் ராமன் கோவில் கட்டு வோம் என்று அறிவித்து இருக்கிறார்களே. அதைப் பற்றி தேர்தல் ஆணையம் ஏன் கண்டு கொள்ளவில்லை?
மதச்சார்பற்ற தன்மையுடைய இந்திய அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்களே. இது மாபெரும் குற்றமில்லையா?
இதனை ஏன் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை - பி.ஜே.பி.யை விளக்கம் கேட்கவில்லை?
இதில் ஒரு கெட்ட வாய்ப்பு, வருந்தத்தக்க விசயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சி கூட இதனைப் பிரச்சினையாக்கவில்லையே என்பதுதான்.
உத்தரப் பிரதேசத்தில் தலைவர்களின் சிலைகளை மூடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதே போல தமிழ்நாட்டில் செய்தபோது திராவிடர் கழகம்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. நீதிமன்ற ஆணையின் காரணமாக மூடப்பட்ட தந்தை பெரியார் சிலை உள்பட மற்ற தலைவர்களின் சிலைகள் மீது மூடப்பட்ட துணி அகற்றப்பட்டது.
ஒரு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் தேர்தல் ஆணையம் உத்தரப்பிரதேசத்தில் தலைவர்களின் சிலையை மூடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது சரியானது தானா?
தேர்தல் ஆணையம் அரசமைப்பு சட்டப்படி தனி அதிகாரம் படைத்த (Autonamous)அமைப்பாக இருக்கலாம் என்பதால் எதையும் செய்யலாம் என்று நினைத்துவிடக்கூடா தல்லவா?
குஜராத் மாநிலத்தில் தேர்தல் என்பது வெளிப்படையாக மதவாதத்தின் அடிப்படை யில்தான் பிரச்சாரம் உள்பட நடந்தது. அப்பொழுது இந்தத் தேர்தல் ஆணையம் என்ன செய்தது?
தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய அதிகார மய்யத்தில் மதச்சார்பற்ற தன்மை கொண்டவர்களையே நியமிக்கவேண்டும். இது போன்ற உரத்த சிந்தனை தேவை!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...