Thursday, February 16, 2012

சட்டம்

சட்டம்


காதலர் நாள் உலகம் முழுவதும் நேற்று கொண் டாடப்பட்டுள்ளது. குறிப் பிட்ட வயது அடைந்த வர்கள் - காதலர்கள் தங் களின் உணர்வுகளுக்கும், மகிழ்வுக்கும் அடை யாளமாக இந்நாளை ஏற் படுத்திக் கொண்டுள்ளனர்.
காதல் என்பது உயிர் இயற்கை, அது கட்டில் அகப்படும் தன்மையதோ? என்றார் புரட்சிக் கவிஞர்.
வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் திரு மணம் செய்து கொள்வது கூட தனிப்பட்ட இருவர் பிரச்சினை.  இதில் மூன் றாவது மனிதனுக்கு என்ன வேலை? என்ற வினாவை எழுப்பியவர் உயர் எண் ணங்கள் மலரும் சோலை யாம் தந்தை பெரியார்.
இந்த நிலையில் காதலர் நாள் எதிர்ப்பு என்று கூறி இந்து முன்னணிக் கும்பல், காதலர் சந்திப்பு இடங் களுக்குச் சென்று முண்டா தட்டி கலகம் விளைவிப் பதும், அடிப்பதும், உதைப் பதும், கட்டாயமாக தாலி கட்டச் செய்வதும் எந்த வகையில் நியாயம்?
சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள இந்து முன்னணியினருக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?
இந்து மதத்தில் கடவு ளர்களே காதல் செய்ய வில்லையா? காதலையும் தாண்டி காமலீலைகளில்  60 ஆயிரம் கோபிகை களுடன் கிருஷ்ண பகவான் ஆடாத ஆட்டமா? செய் யாத அசிங்கமா, ஆபாசமா? குளிக்கும் பெண் களின் ஆடைகளைத் திருடி தன்னிடம் வைத்துக் கொண்டு நிர்வாணமாகக் கரையில் வந்து இரு கை களையும் தூக்கிக் கும் பிட்டால்தான் ஆடைகளைத் தருவேன் என்று அடம் பிடித்த அயோக்கியனைப் படம் போட்டு மாட்டி வைத்து, வீட்டில் விழுந்து கும்பிடுபவர்கள் காதலர் தினத்தைக் கண்டிக்க லாமா?
சட்டமன்றம் நடக்கும் நேரத்திலேயே கைப்பேசி யில் ஆபாசப் படங்களை ரசித்த கூட்டமா காதலைக் கொச்சைப்படுத்துவது?
காதலர் தினத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ். எஸ்., சங் பரிவார்க் கும்பல் எதிர்ப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக் கிறது.
ஜாதியைப் பார்த்து, மதத்தைப் பார்த்து காதல் வருவதில்லையே. இதனால் ஜாதி ஒழிகிறது, மதம் மாண்டு போகிறதே! இவற் றைக் கட்டிக் காப்பதற்கே அவதாரம் எடுத்ததாகக் காட்டிக் கொள்ளும் இந்து முன்னணியினர் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள் என்பதை மனதில் வையுங் கள்.
சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள இந்து முன்னணியினர் அனுமதிக் கப்பட்டால், அதனைத் தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நிலை ஏற்படும் - எச்சரிக்கை!
- மயிலாடன்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...