Thursday, February 16, 2012

ரயில் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ். மீது சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

ரயில் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ். மீது சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு


புதுடில்லி,பிப்.16- 2007 ஆ-ம் ஆண்டு சம்சவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து 68 பேர் இறந்தனர். இந்த ரயில் குண்டு வெடிப்பு குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கமல் சவுகான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் குறித்து சி.பி.அய்.(எம்)-ன் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:-

இவர் மத்திய பிரதேசத்தில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக உள்ளார். அதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறது. இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது.

மேலும், 2008 இ-ல் மாலேகானில் நடந்த தாக்குதல், 2007-இல் அய்தராபாத் நகரின் ஒரு மசூதி மற்றும் அஜ்மர் ஷெரிப் தர்காவில் நடந்த தாக்குதல் ஆகியவற்றுக்கும் இந்த ரயில் விபத்துக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...