Saturday, February 4, 2012

உங்களுக்கு நூறு வயது ஆகும்போது என்ன கிடைக்கும்?


உங்களுக்கு நூறு வயது ஆகும்போது, வாழ்த்து தெரிவித்து ஒரு தொலைபேசிச் செய்தி உங் களுக்கு இங்கிலாந்து ராணியிட மிருந்து கிடைக்கும். ஆனால், முன்பு போல் அது தானாக வருவ தில்லை; நீங்கள் கேட்டுக்கொண் டால்தான் அனுப்பி வைக்கப்படும். இதற்கு முன்பு நூறு வயதை எட்டிய வர்களுக்கு வாழ்த்துத் தந்தி ராணியிடமிருந்து வரும்.
ஆனால் இங்கிலாந்தில் 1982 இல் தந்தி ஒழிக்கப்பட்டுவிட்டபடியால், தொலைபேசிச் செய்திகள் மட்டும் அடுத்த நாள் தபால்களுடன் விநியோகிக்கப்படுகின்றன. இந்தப் புதிய சேவை முக்கியமான தகவலுடன் வாடிக்கையாளருடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு திறமையான வழியாக உள்ளது என்றும், அதனால் உண்மையில் கூடுதலான பலன் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் நீங்கள் கேட்டால், உங்களது நூறாவது பிறந்த நாளின்போது வாழ்த்துச் செய்தி ஒன்றை தொலைபேசிச் செய்தி மூலம் ராணி அனுப்பி வைப்பார். 105 ஆவது பிறந்த நாளுக்குப் பிறகு ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் உங்களுக்கு ராணி வாழ்த்துச் செய்தி அனுப்பி வைப்பார். அமெரிக்காவில் நூறு வயதை எட்டியவர்களுக்கு அதிபரிடமிருந்து ஒரு  வாழ்த்துக் கடிதம் வரும்.
இங்கிலாந்து நாட்டில் இன்று நூறு வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 7 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இங்கிலாந்து நாட்டில் மட்டும் 2000 ஆம் ஆண்டில் நூறு வயதைக் கடந்தவர்கள் 7,000 பேர் இருந்தனர். உலக அளவில் அத்தகையவர்கள் 1,00,000 உள்ளனரென மதிப்பிடப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.
நவீனகால ஆவணங்களால் உறுதிப்படுத்தப்பட்டபடி மிக அதிக வயது வரை வாழ்ந்த ஜீன் கால்மென்ட் என்பவர் 1875 ஆம் ஆண்டில் பிறந்து 122 வயது வரை உயிர்வாழ்ந்தார். ஆவணப்படி அதிக வயது வரை உயிர் வாழ்ந்திருந்த ஆண் கிறிஸ்டியன் மோர்டன்சன் என்ற டேனிஷ் நாட்டில் பிறந்த அமெரிக்கர் ஆவார் (1882-1998). அவருடன் நெருக்கமாகப் போட்டியிட்ட ஜப்பானியரான சிகேசியோ இசுமி (1865-1986) 120 வயது வரை வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவரது பிறப்பு சான்றிதழ் அவருடையது அல்ல, அவருடைய சகோதரருடையது என்ற வதந்திகளும் உலவின. ஆனால் அவரது கோரிக்கையை கினியா உலக சாதனை நூல் ஏற்றுக் கொண்டது.
நீண்ட காலம் உயிர் வாழும் உங்களது ரகசியம் என்ன என்று ஜீன் கால்மென்டை அவரது 121 ஆவது பிறந்த நாளின் போது கேட்டதற்கு, அதற்கான பெருமையை ஆலிவ் எண்ணெய்க்கு அவர் அளித்தார். அன்றாட சமையலில் தான் ஆலிவ் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்துவதாகவும், தனது தோலின் மீது அந்த எண்ணெய்யைத் தேய்த்துக் கொள்வதாகவும் கூறிய அவர், என் உடலில் ஒரே ஒரு சுருக்கம்தான் இருக்கிறது என்று பெருமையாகக் கூறிக் கொண்டார்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’   பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...