Saturday, February 4, 2012

அடர்த்தி மிகுந்த தனிமம் எது ?


ஓஸ்மியம் (osmium) அல்லது இருடியம் (iridium) தான் அடர்த்தி மிகுந்த தனிமம் ஆகும். அவற்றில் எது என்பது அதனை நீங்கள் எவ்வாறு அளவிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
அடர்த்தியில் இந்த இரு உலோகங்களும் மிக நெருக்கமானவை. கடந்த காலத்தில் பலமுறை ஒவ்வொன்றும் மாறி மாறி முதல் இடத்தைப் பெற்றுள்ளன. மூன்றாவது அடர்த்தி மிகுந்த தனிமம் பிளாட்டினம் (platinum) ஆகும். அதனைத் தொடர்ந்து ரேனியம் (rhenium) , நெப்டியூனியம் (neptuunium) , ப்ளூடோனியம் (plutonium) மற்றும் தங்கம் (gold)  இடம் பெறுகின்றன. ஈயம் (lead) இந்தப் பட்டியில் மிகமிகக் கீழாக இருக்கிறது. ஒஸ்மானியம் அல்லது இருடியத்தின் அடர்த்தியின் ஈயத்தின் அடர்த்தி பாதி அளவே ஆகும். ஓஸ்ஸிமயம் மிக அரிதான உலோகமாகும். கடினம் நிறைந்த இந்த வெள்ளி நீள உலோகம் இருடியத்துடன் சேர்த்து 1803 இல் ஆங்கிலேய வேதியியலார் ஸ்மித் சன் டென்னன்ட் (Smithson Tennant 1761-1815) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ரிச்மாண்டைச் சேர்ந்த ஒரு பாதிரியின் மகனான டென்னன்ட்தான் வைரம் தூய்மையான ஒரு வடிவம் கொண்ட கரி என்பதை முதன் முதலாகக் காட்டியவர் ஆவார். மணம் (smell) என்ற பொருள்படும் (osme) என்ற கிரேக்க சொல்லைக் கொண்டு அவர் ஓஸ்மியம் என்று பெயரிட்டார். அது அதிக போதை தரும் ஓஸ்மியம் டெட்ராக்சைடை வெளிவிடுகிறது.  எரிச்சலூட்டும்  கார மணம் கொண்ட அது நுரை யீரல், தோல் மற்றும் கண்ணுக்குக் கேடு விளைவிப்பதுடன், கடும் தலைவலியையும் ஏற்படுத்த இயன்றது.  கைவிரல் ரேகைப் பதிவு செய்வதில் இது பயன்படுத்தப் படுகிறது. விரல்களில் எண்ணெய் விட்டுச் செல்லும் நுண்ணிய அடையாளங்கள் மீதும் செயல்பட்டு கருப்புப் புள்ளிகளை ஏற்படுத்த  வல்லது அதன் ஆவி. அதன் அதிகப்படியான கடினத் தன்மை, கரைப்பானை எதிர்த்து நிற்கும் ஆற்றல் ஆகியவை காரணமாக நீண்ட காலம் உழைக்கும் கிராமபோன் ஊசி, காம்பஸ் ஊசி மற்றும் தரம் வாய்ந்த பேனா நிப் ஆகியவைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. இதன் வணிகப் பெயர் ஓஸ்மராய்டு என்பதாகும்.
3,054o  C   வெப்பத்தில் உருகக் கூடிய ஒஸ்மியம் மிக அதிக உருகும் நிலை கொண்டது. மின்விளக்குகளில் எடிசன் பயன்படுத்திய மூங்கில் பிளமென்டுக்கு பதிலாக 1897 இல் கார்ல் ஆயர்  (Carl Auer) என்பவர் ஓஸ்மியத்தை பிளமின்டாகப் பயன்படுத்தினார். பின்னர் இதற்கு பதிலாக 3,407o  C வெப்பத்தில் உருகக்கூடிய டங்ஸ்டன் பயன்படுத்தப்பட்டது. இந்த வியாபாரப் பெயர் ஓஸ்ராம் என்பதை 1906 இல் ஆயர் பதிவு செய்தார்.  இது ஓஸ்மியம் மற்றும் ஜெர்மன் மொழியில் டங்ஸ்டனின் பெயரான வுல்ப் ராம் (wolfRam) என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது.
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் 220 பவுண்டு (100 கி.கி.) க்கும் குறைவான ஓஸ்மியம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இருடியம் ஓஸ்மியம் போலவே மஞ்சள் பூசிய வெள்ளை உலோகமாகும். இது பிளாடினத்துடன் நெருங்கிய உறவு கொண்டது. வானவில் (Rainbow) என்ற பொருள் தரும் iris    என்னும் கிரேக்க சொல்லில் இருந்து இந்தப் பெயர் வந்தது. அதன் கலவைகள்  அழகு நிறைந்த வண்ணங்களை வெளிப்படுத்துவதே இப்பெயர் பெறக் காரணமாகும். இருடியம் மிக அதிக உருகு நிலையைக் 2,446o  C கொண்டது. உலோகத் தொழிற்சாலைகளில் உலோகத்தை உருக்கும் பாத்திரங்கள் செய்வதற்கும், பிளாடினத்தைக் கடினப் படுத்தவும் இது பயன்படுத்தப்படுகிறது. உலகில் மிகமிக அரிதான தனிமங்களில் இதுவும் ஒன்றாகும்.  இந்த உலோகம் விண்ணிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று புவியியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  பெரிய எரிகற்கள் தாக்குத லினால்தான் டயானோசர்கள்  அழிந்தன என்ற கருத்துக்கு ஆதரவு அளிப்பதாக இது உள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...