பேய், பில்லி, சூன்யம் பித்தலாட்டம்
அரசியல் பிரச்சினை என்றால் அண்டத்தைப் புரட்டும் அளவுக்கு அணு அணுவாக விமர்சனம் செய்யும் இந்தப் பார்ப்பன ஏடுகள், மக்களின் மூட நம்பிக்கை பிரச்சினை என்றால் எவ்வளவு முட் டாள்தனமாக அவற்றை நியாயப்படுத்துகின்றன! எந்த அளவுக்கு ஜமக் காளம் போட்டு வடிகட்டி வக்கணையாக எழுது கிறார்கள்.
மூடநம்பிக்கைகளை மூச்சு முட்ட பரப்புவதற் காகவே சில மூடநம் பிக்கை வியாபாரிகளை அமர்த்தி அவர்கள் மூலம் சாமர்த்தியமாக மூட நச்சுக் கருத்துகளைப் பரப்புவார்கள்.
பில்லி, சூன்யம் பற்றி கல்கி (29.1.2012)யில் ஒருவர் அளக்கும் கதையைக் கேளுங்கள்! கேளுங்கள்!!
கேள்வி: பில்லி, சூன் யம், செய்வினை என்பது நிஜமா? சாத்தியமா? இப் பாதிப்பு நமக்கு இருப்பதை எப்படி உணர்வது? பரிகா ரம் என்ன?
பதில்: பில்லி, சூன்யம், செய்வினை என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், இன்று அதில் கை தேர்ந்தவர்கள் யாருமில்லை. நூறு வருடத்துக்கு முன்புகூட பல ஞானிகள் கடவுளைக் கண்டுள்ளனர். இன்று ஒரு பாட்டுப் பாடி கடவுளை வரவழைக்கும் சக்தி வாய்ந்த மகான் யாருமில்லை. ஒரு மந்திரம் போட்டு அடுத்தவன் பிழைப்பைக் கெடுக்கும் சூன்யக்காரர் யாருமில்லை. அருணகிரி நாதரின் அதல சேடனாராட என்னும் திருப்புகழைப் படித்து வந்தால் துர்தேவதைகள் அண்டா - இது தான் கல்கி தரும் கருத்து!
எனக்கு அதிகாரம் இருந்தால், இந்த அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுப்பேன் என்றார் தந்தை பெரியார்.
இந்தக் கல்கி கும் பலுக்கு மக்களின் அறிவை நாசப்படுத்துவதில் அப்படி என்ன அடங்கா வெறி?
ஓ, அறிவு வந்து விட் டால் தங்களின் சுரண்டல் தொழில் போனி ஆகாதே என்ற நினைப்பா?
அறிவியல் மனப்பான் மையை வளர்ப்பது ஒவ் வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே!
அறிவியல் மனப்பான் மையை வளர்ப்பது ஒவ் வொரு குடிமகனின் அடிப் படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே!
இந்த நிலையில் இவர் கள்மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண் டாமா?
இப்பொழுதெல்லாம் கடவுளைக் காண்பவர்கள் இல்லை. பில்லி, சூன்யம் செய்பவர்கள் இல்லை என்று தப்பிக்கப் பார்ப்பது ஏன்?
இது ஒரு வகையான தப்பிப் பிழைக்கும் (Escapism) தந்திரமாகும்.
எங்கே பில்லி, சூன்யம் செய்து காட்டுங்கள் என்று சவால் கிளம்பி விடுமே - அதிலிருந்து தப்பவே இந்தப் பித்தலாட்டமான எழுத்துகள்.
பில்லி, பேய், சூன்யம் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது?
பேய், பிசாசு, பில்லி சூன்யம் எல்லாம் ஏய்க்கும் உணர்ச்சிகளே! (Deceptive Perceptions).
இதனை மூன்று வகை களாகப் பிரிக்கின்றனர்.
1. மாயப்புலன் உணர்ச்சி (Illusion)
2. மயக்கப் புலன் உணர்ச்சி (Hallucination)
3. மருட்சி (Delusion)..
1983இல் ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத் தில் பில்லி, சூன்யம், பேய், பிசாசு என்ற பிரச்சினை தலை விரித்தாடியது. பில்லி, சூன்யம் செய்ததாகச் சிலர் எரிக்கவும் பட்டனர்.
மாவட்டக் காவல்துறை அதிகாரி விஜயவாடாவில் உள்ள கோரா நாத்திக மய்யத்தை அணுகினார். மூன்று மருத்துவர்கள் ஒரு இயற்பியல் அறிஞர், ஒரு சமூகவியல் அறிஞர், மனோதத்துவ டாக்டர் என்று ஒரு அணி அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தது.
யார் யார் என்னென்ன நோய்களுக்கு ஆளாகினர் என்பதை அக்குழு அறிக்கை மூலம் தெரிவித்தது. பேய், பில்லி, சூன்யம் என்பவை ஒரு கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும், பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் மனோவியல் காரணங் களே இந்த மூடநம்பிக் கைகளுக்குக் காரணம் என்றும் அவர்கள் கூறி னார்கள்.
இந்தப் பேய், பிசாசு வகையறாக்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளையும், உயர் ஜாதிக்காரர்களையும் பிடித்து ஆட்டுவதில் லையே - ஏன்?
படிக்காத பாமர மக் களையும், கிராமப்புறத் தைச் சேர்ந்தவர்களையும் தான் அவை பிடிக்குமா?
சோவுக்குப் பேய் பிடித் தது. ஜெயேந்திரருக்குப் பில்லி வைக்கப்பட்டது. தினமலர் கிருஷ்ண மூர்த்தி அய்யருக்குப் பிசாசு பிடித்தது. கல்கி ஆசிரியருக்குச் சூன்யம் வைத்தனர் என்று சேதி வருவதில்லையே - ஏன்? ஏன்?
ஊருக்கு இளைச்சவர் கள் இந்தச் சூத்திரர் களும் பஞ்சமர்களும் தானா?
இவர்களைத் தலை எடுக்கச் செய்யாமல் இருப்பதற்குக் கல்கி கூட்டம் இந்த எத்து வேலைகளைப் பரப்புகிறது என்பதுதான் உண்மை.
No comments:
Post a Comment