Friday, February 10, 2012

எனது வழக்கறிஞர் பணியில் பா.ஜ.க. தலையீடு! கருநாடக மாநில அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா குற்றச்சாட்டு!

எனது வழக்கறிஞர் பணியில் பா.ஜ.க. தலையீடு! கருநாடக மாநில அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா குற்றச்சாட்டு!


பெங்களூரு, பிப். 10: கருநாடக மாநிலத்தில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிய ஆச்சார் யாவின் வழக்காடும் உரிமையில் பா.ஜ.க. மாநில அரசும், மத்திய பா.ஜ.க. தலைமையும் தலையிட்டு, அரசு வழக் குரைஞர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர் என்று பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார் ஆச்சார்யா.
தமிழ்நாடு முதல மைச்சர் செல்வி ஜெய லலிதா மீதான வரு வாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக் கில், சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக இருக் கும் மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா இந்த சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் பதவியை விட்டு விலகவேண்டும் என்று கருநாடக பா.ஜ.க. அரசின் முதல் அமைச் சர் சதானந்த கவுடா விரும்புவதாகவும், ஆனால் தான் அந்தப் பதவியை விட்டு விலகா மல் அட்வகேட் ஜென ரல் பதவியை மட்டும் ராஜினாமா செய்துள்ள தாகவும் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுடன் அரசியல் ரீதியாக நெருங்கி வரும் பா.ஜ.க. அவருக்கு ஆதரவாக, அவரது வழக்கிலிருந்து  சிறப்பு அரசு வழக் குரைஞர் பதவியில் இருந்து ஆச்சார்யா  விலக வேண்டும் என்று  விரும்பியது. தான் ஆச்சார்யாவை ஜெயலலிதா வழக்கில் சிறப்பு வழக்குரைஞர் பதவியிலிருந்து விலகு மாறு வற்புறுத்தியதாகக் கூறப்பட்டதை  நேற்று முதலமைச்சர் சதானந்த கவுடா மறுத்திருந்தார். ஆனால், இப்போது ஆச்சார்யா தெரிவித் திருப்பது முதலமைச் சரின் கூற்றை மறுப்ப தாக இருக்கிறது.
அட்வகேட் ஜென ரல் மற்றும் ஜெயலலிதா வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்ற இரு பதவிகளில் ஆச்சார்யா இருப்பதை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அரசு எந்த தர்மசங்கடத்தை யும் எதிர் நோக்க விரும் பாததால், இரண்டு பதவிகளில் ஒன்றில் இருந்து விலகிக் கொள் ளும்படி ஆச்சார்யா கேட்டுக் கொள்ளப்பட் டார். அவ்வளவுதான் என்று முதலமைச்சர் சதானந்த கவுடா கூறி னார். தான் ஏற்கெனவே அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்திருப்பதால், தான் ஜெயலலிதா வழக் கில் சிறப்பு அரசு வழக் கறிஞராக நீடிப்பதையே விரும்புவதாக ஆச் சார்யா தன்னிடம் கூறிய தாகவும் சதானந்த கவுடா கூறினார்.
என்றாலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளித ழுக்கு அளித்த ஒரு பேட்டியில், முதல் அமைச்சர் சதானந்த கவுடாவும், சட்டத் துறை அமைச்சர் சுரேஷ் குமாரும் ஜெயலலிதா வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகும்படி என்னைக் கேட்டுக் கொண்டனர்.   பா.ஜ.க. வின் மத்திய தலைமை யிடத்திலிருந்தும் அழுத் தம் கொடுக்கப்பட்டது. ஒருவர் இரண்டு பதவி களை வகிக்கக்கூடாது என்று  கூறினர். நான் இரண்டு பதவிகள் வகிப் பது பற்றிய அவர்களது ஆட்சேபணை தெளி வற்றதாக இருந்ததால், அவர்களது வேண்டு கோளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஆச்சார்யா கூறி யுள்ளார்.
ஜெயலலிதா வழக் கில் சிறப்பு அரசு வழக் கறிஞராக நீங்கள் நீடிப் பதில் அவர்களுக்கு என்ன ஆட்சேபணை உள்ளது என்று கேட் கப்பட்டபோது, அது எனக்கு தெரியாது. என்னைப் பொருத்த வரை,அட்வகேட் ஜென ரலாகவும், சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் நான் நீடிப்பதற்கு சட்டப் படியான தடை ஏது மில்லை. என்னை அட்வ கேட் ஜெனரலாக சதா னந்த கவுடா நியமித்த போது, நான் ஜெயல லிதா வழக்கில்சிறப்பு அரசு வழக்கறிஞராகப் பணியாற்றுகிறேன் என்பதை அவர் நன்கு அறிந்தே இருந்தார். இரண்டு பதவிகளையும் வகிப்பது நியாயமானது என்றே நான் கருது கிறேன். சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியி லிருந்து என்னை விலகச் செய்வதற்கு அவர் களுக்கு ஏதோ ஒரு காரணம் தேவைப்பட் டது. இப்போது அவர் கள் அட்வகேட் ஜென ரலை இழந்துவிட்டார் கள் என்று ஆச்சார்யா கூறினார்.
சிறப்பு அரசு வழக் கறிஞர் பதவியிலிருந்து உங்களை வெளியேற்ற பா.ஜ.க. அரசுக்கு எங் கிருந்தாவது அரசியல்  நிர்பந்தம் வந்திருக் குமா?என்று கேட்ட போது, அதைப் பற்றிப்  பேச நான் விரும்ப வில்லை. சிறப்பு அரசு வழக்கறிஞராக நான் தொடர்ந்து நீடிப்பேன். கர்நாடகா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி என்மேல் வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாற்றவேண்டும். உச்ச நீதிமன்ற அறிவு ரைகள் பேரில் அவர் என்னை அப்பதவியில்  நியமித்திருந்தார். அட்வகேட் ஜெனரல் என்னும் பதவியில் எனது பணி அரசுட னானது மட்டுமே. ஆனால் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் எனது பணி நீதிமன் றத்துடனானது என்று ஆச்சார்யா கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...