Thursday, February 9, 2012

நரேந்திரமோடி பதவி விலகுவாரா?

நரேந்திரமோடி பதவி விலகுவாரா?


குஜராத் கலவரத்தைத் தடுக்கத் தவறியது நரேந்திரமோடி அரசு
குஜராத் உயர்நீதிமன்றம் நெற்றியடி தீர்ப்பு!
ஆமதாபாத், பிப்.9- கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மதக் கல வரத்தைத் தடுக்கத் தவறி விட்டது குஜராத் மாநில அரசு என்று உயர்நீதி மன்றம் திட்டவட்ட மாகத் தெரிவித்து விட் டது. இதன் காரணமாக மோடி அரசுக்கு அரசி யல் நெருக்கடி ஏற் பட்டுள்ளது.
குஜராத் கலவரத்தை தடுக்கத் தவறிய நரேந்திர மோடி அரசுக்கு கண் டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், சேதம் அடைந்த 500-க்கும் மேற் பட்ட மதவழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட் டது.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 2002-ஆம் ஆண்டில் குஜ ராத் மாநிலத்தில் மிகப் பெரிய கலவரம் மூண் டது. இந்த கலவரத்தில் சேதம் அடைந்த மத வழிபாட்டு தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தர விடக் கோரி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட் டது. குஜராத் இஸ்லா மிய நிவாரண குழு சார்பில் இதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
தலைமை நீதிபதி (பொறுப்பு) பாஸ்கர் பட்டாச்சார்யா, நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகி யோர் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறினர். நரேந்திர மோடி தலை மையிலான மாநில அரசு, கோத்ரா ரயில் எரிப்புக்குப்பின் நடை பெற்ற கலவரத்தை தடுக் கத் தவறிவிட்டதாக, நீதிபதிகள் தங்கள் தீர்ப் பில் கண்டனம் தெரி வித்துள்ளனர். தீர்ப் பில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
"கலவரத்தை தடுப் பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் மாநில அரசு செயல் பட்டதால் மாநிலம் முழுவதும் பெரிய அள வில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அவற்றை பழுதுபார்த்து தேவை யான இழப்பீடு வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும். கலவரத்தின்போது சேதம் அடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறு வனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு இருக் கிறது.
அதேபோல், வழி பாட்டுத் தலங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண் டும். மாநிலம் முழுவதும் உள்ள 26 முதன்மை செசன்சு நீதிமன்ற நீதி பதிகள் தங்கள் மாவட் டங்களில் இருந்து இதற்கான விண்ணப்பங் களைப் பெற்று இழப் பீடுத் தொகை பற்றி முடிவு எடுக்க வேண்டும். அது குறித்து 6 மாதங் களுக்குள் உயர்நீதிமன் றத்திற்கு அவர்கள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.'' இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "கலவரத் தின்போது அழிக்கப் பட்ட அல்லது சேதம் அடைந்த வழிபாட்டுத் தலங்களை பழுது பார்த்து சீரமைப்பதற் கான வழிமுறைகள் எதுவும் இல்லை என் றும், இந்த மனு அரச மைப்புச் சட்டத்தின் 27-ஆவது பிரிவுக்கு எதி ரானது என்றும் குறிப் பிட்டார். இந்த வாதத்தை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹக்கிம், "வழிபாட்டுத் தலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கும் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்தது'' என்று கூறி வரவேற்று இருக் கிறார். "குஜராத் கல வரத்தைத் தடுக்க நட வடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்த தற்கு மாநில அரசே பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதும் இதுவே முதன் முறை யாக இருக்கலாம்'' என் றும் அவர் தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...