Thursday, February 9, 2012

எங்கே பிராமணன் இதோ இங்கே! இன்றைக்கும் . . . அவாள் அவாள்தான்!

எங்கே பிராமணன் இதோ இங்கே! இன்றைக்கும் . . . அவாள் அவாள்தான்!


அவாள் கிராப்பு வெட் டிக்கிட்டாள் . . . கோட், சூட் போட்டுக்கிட்டாள் . .  எவ்வளவோ மாறிவிட் டாள்.  இன்னும் போய் பாப்பான் கீப்பான்னு பேசிக்கிட்டு . . . பாப்பான் மாதிரி பேசுகிறவாள் நம்மவாளிடம் இன்னும் இருக்கத்தான் செய்கி றார்கள்.  அவர்களை பெங்களூருவில் இருந்து 285 கி.மீட்டர் தொலை வில் உள்ள மத்தூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்வோம்.
அசல் அக்ரஹாரம். துங்கா நதியில் ஸ்நானம் ஆற்றங்கரையின் வலது பக்கத்தில் கோவில் ஒன்று - யாக மேடையும் உண்டு. வீடுகளின் முன்புறச் சுவர் களில் சமஸ்கிருத மந்தி ரங்கள்!
திறந்த வெளியில் அமைந்த மய்யங்களிலும் வேத பாடசாலைகளிலும் சிறுவர்கள் வேதங்களை ஓதிக் கொண்டிருக்கிறார் கள். அந்தச் சிறுவர்கள் தோள்களில் பூணூல்கள் - இடுப்பில் வேட்டி, உச்சிக் குடுமி சகிதமாகக் காட்சி யளிக்கின்றனர்.
வீட்டுக்கு வீடு சமஸ் கிருதம் பேசுகிறார்கள். சமஸ்கிருதம் பேச தனிப் பயிற்சியும் உண்டு.
பெண்கள் மற்றும் பிற சமுதாய மக்களுக்கு வேதங்கள் ஓதிட அனுமதி கிடையாது.
சமஸ்கிருதம் படிப்பதும், வேதம் படிப்பதும் இரு வேறுபட்ட விஷயங்கள். சமஸ்கிருதம் என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் வேதம் குறிப்பிட்ட சிலருக்கானது.
எப்பொழுதும் மாறாத விஷயங்கள் இருக்கின்றன. நாங்கள் எப்பொழுதும் இதனைப் பின்பற்றுகிறோம் என்கிறார் இவ்வூரில் உள்ள சமஸ்கிருதப் பண்டி தரான சரத்குமார் என் பவர்.
(இந்த விஷயத்தில் இன் னும் எப்படிப் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். வேதங்களைச் சூத்திரன் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காது களில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று எழுதி வைத்துள்ளார்களே!)
விவசாயம் உண்டு. ஆனால் அதனை அந்த அக்ரகாரவாசிகள் செய் வதில்லை; பக்கத்து ஊரில் இருப்பவர்கள் சம்பளத் திற்காக விவசாயம் செய் கிறார்கள். காரணம் விவ சாயம் குறித்த அவாளின் மனுதர்மச் சிந்தனைதான்!
பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருது கின்றனர். ஆயினும் பெரி யோர் அதைப் பாராட்ட வில்லை. ஏனெனில் இரும் புக் கொழுநுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற் றைக் கொண்டு பூமியையும் பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ! (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84)
பிராமணன் எங்கே? என்று கேள்வி கேட்கும் சோ கூட்டமே - இதோ பிராமணன் இங்கே!
ஒரு கொசுறு செய்தி
ஆந்திராவில் 1200 ஏக்கரில் பார்ப்பனர்கள் மட்டும் குடியிருப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது என்பது ஏடுகளில் வந்த செய்தி. (5.1.2008)
- கறுஞ்சட்டை

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...