முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (6)
முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (6)
நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பாரதிய ஜனதா கட்சி
அகண்ட பாரதம் என்பது இக்கட்சி யின் கொள்கை, ஆனால் செயல் பாடுகளோ இருக்கின்ற பாரதத்தை 20 துண்டுகளாக்கக் கூடியது. இதன் தொண்டர்கள் அவ்வப்போது தேக்கடிக்கு வந்து அணைக்கு பணி காரணமாகச் செல்லும் தமிழக பொதுப் பணித்துறை பொறியாளர்களை அணைக்கு செல்ல விடாமல் மறியல் செய்து தடுப்பது குமுளி மக்கள் அல்லது பள்ளி மாணவர்களைத் தூண்டி தேக்கடியில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகங்களைத் தாக் குவது போன்ற செயல்களால் தங்களது மாநிலப் பற்றினைக் காட்டிக் கொள் வார்கள்.
காங்கிரஸ் கட்சி
இது ஒரு அகில இந்தியக்கட்சி. இந்திய இறையாண்மையில் மிகுந்த அக்கறையுள்ள கட்சி. இக்கட்சியைச் சார்ந்த கேரள A.K. அந்தோணி இந்தியா வின் பாதுகாப்பு அமைச்சர் கொச்சியில் இந்தியக் கப்பற்படைத்தளம் உள்ளது. தனது அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தி பாதுகாப்பு அமைச்சர் பேரிடர் பாதுகாப்புப் பயிற்சி (Disaster management) என்று தமிழக அரசிடம் அனுமதி பெற்று கப்பல் படை நீர்மூழ்கி வீரர்களை அனுப்பி பெரியாறு அணை பலவீனமாக உள்ளதெனத் தெரிவிக்க ஏற்பாடு செய்தார். 22.11.2006 அன்று காலை 10 மணியளவில் கப்பல்படை வீரர்கள் 15 பேர் அவர்களுக்கு உதவிக்கு 10 பேர் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அவருடன் அலுவ லர்கள் 10 பேர் இடுக்கி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவருடன் ஒரு பட்டாலியன் கேரள காவல்துறையினர் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அணை யில் கூடி விட்டனர்.
இவர்களின் சதி உரிய நேரத்தில் தமிழக பொதுப்பணித்துறைக்கு தெரிய வந்து பொதுப்பணித்துறை பொறியாளர் கள் 5 பேர் அணைக்கு சென்று இவர்களின் சதியை முறியடிக்கப் போராட இறுதியில் தமிழக முதல்வர் மத்திய அரசின் மேலிட மட்டத்தில் தலையிட்ட தின் பேரில் கப்பற்படை நீர் மூழ்கி வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் மதியம் ஒரு மணியளவில் அணையிலிருந்து வெளியேறினர். சுமார் 3 மணி நேரம் போராடி கேரள அரசின் சதியினை முறியடித்த தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் அய்வரின் (Er. R. சு. பாஸ்கரன், செயற்பொறியாளர் Er. R. அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் Er. N. சுரேஷ், உதவி பொறியாளர் Er. S. சரவணன் உதவிபொறியாளர் மற்றும் திரு. P. R.சுந்தரராஜன் அணைக்கண் காணிப்பாளர்) தீரம் பெரிதும் பாராட்டுக் குரியது. அவர்தம் பணிப்பதிவேடுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியது. இவ்வாறு கேரள அரசியல் கட்சிகள் அனைத்தும் முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் ஒருமித்த கருத்தும் செயல்பாடும் கொண்டவையாக உள்ளன.
10. கேரள அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற பொய் யுரைகள் கேரள முதல்வர் அச்சுதானந் தன்: ஆரம்பத்தில் 999 வருட ஒப்பந்தம் 8591 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை ஒப்பந்தம் என்பது தெரியாமல் கேரள முதல்வர் பெரியாறு அணையின் ஆயுட் காலம் 50 ஆண்டுகள்தான் அதற்கு எப்படி 999 வருட ஒப்பந்தம் போடலாம்? எனக் கேட்டார். பின்னர் தெளிவு பெற்றார்.
அதன்பிறகு தற்சமயம் அணை பல வீனமாக உள்ளதாகவும் அணை உடைந் தால் 20 லட்சம் மக்கள் உயிரிழந்து விடுவார்கள் என்றும் தவறான தகவல் களை மக்களிடையே பரப்பி கேரள மக்களிடையே பீதியைக் கிளப்புகிறார். 2006ஆம் ஆண்டு அணை உடைவது போலவும் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவது போலவும் கிராபிக்ஸ் படக் காட்சிகளை உருவாக்கி அதனை குறுந் தகடுகளில் பதிந்து கேரள மாநில கிராமப் பகுதிகளில் தொலைக்காட்சிகளில் காட்டி மக்களைக் கலவரப்படுத்தினார். இந்த கிராபிக்ஸ் காட்சிகளை கேரள முதல் வரின் அதிகார பூர்வமான வலைத் தளத் தில் பார்த்து ஒரு பொறுப்புள்ள மாநில அரசு இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுமா என தமிழக அரசு அதிர்ச்சியில் உறைந் தது. அத்துடன் நில்லாது புதிய அணை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்து கிறார். இப்பொழுது பதவியில் உள்ள திரு.உம்மன்சாண்டியும், பாசன அமைச்சர் திரு. து.ஜோசப்பும் புதிய அணையைக் கட்டியே தீருவோம் என்று நாள்தோறும் அறிக்கைகள் விட்டுக் கொண்டுள்ளனர்.
கேரள அரசு கூறுவது போல அணை உடையுமானால் வெள்ள நீர் முல்லைப் பெரியாறு பள்ளத்தாக்கு வழியாக வழிந் தோடி இடுக்கி அணையை அடையும். இடுக்கி அணை முல்லைப்பெரியாறு அணையைப் போல் 7 மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் வெளியேற்றுத் திறன் நொடிக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் கனஅடி. இடுக்கி அணையின் நீர் வெளியேற்றுத்திறன் வினாடிக்கு 4 லட்சம் கனஅடி. கேரள முதல்வர் சொல்லும் 35 லட்சம் மக்களும் மேட்டுப்பகுதியில் உள்ளவர்கள். கடல் மட்டத்திலிருந்து பெரியாறு அணை மட்டம் 2889 அடி உயரத்தில் உள்ளது. குமுளி அணையின் பின்புறம் கடல் மட்டத்தி லிருந்து 3100 அடி உயரத்திலும் வண்டிப் பெரியாறு 3350 அடி உயரத்திலும் பாம் பனார் 3750 அடி உயரத்திலும் ஏலப்பாறை 4850 அடி உயரத்திலும் அமைந்துள்ளன. வெள்ளநீர் பள்ளத்திலிருந்து மேட்டுக்குப் பாயும் என நீரியல் விதியினையே மாற்றிக் கூறுகிறார். இந்தப் போலி நாடகத்திற்கும் கேரளாவில் ஒரு கூட்டம் சேர்கிறது என்பது கசப்பான உண்மை. இதற்காகவே 25 ஆயிரம் Gusecs முதல் 6.2 இலட்சம் Gusecs இதுவெல்லாம் இந்த பள்ளத் தாக்கில் உடனே பாய்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நாங்கள் அணை உடை ஆய்வு (Dam Break Analysis) செய்து பார்த்ததில் கேரளாவில் உள்ள எந்த ஊரும் வேறு நில பகுதிகளும் பாதிக்கப்பட வில்லை என்பதை அறிவியல் வாயிலாக நிலைநிறுத்தி உள்ளோம்.
(தொடரும்)
முல்லைப் பெரியாறு அணை பற்றிய அருமையான, தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் (6)
No comments:
Post a Comment