Monday, February 6, 2012

உங்களுக்கு எத்தனை மூக்கு துவாரங்கள் உள்ளன?



உண்மையில் உங்களுக்கு நான்கு மூக்கு துவாரங்கள் உள்ளன. அவற்றில் இரண்டை உங்களால் காணமுடியும்; இரண்டைக் காணமுடியாது.
மீன் எப்படி மூச்சு விடுகிறது என்பதைக் கவனித்ததால் இது கண்டுபிடிக்கப்பட்டது. தனக்கு வேண்டிய உயிர்க் காற்றை மீன் தண்ணீரிலிருந்து பெறுகிறது. பெரும்பாலான மீன்களில் இரண்டு ஜோடி செதில்கள் இருக் கும். தண்ணீரை உள்ளேவிட முன்னோக்கி ஒரு ஜோடியும், உள்ளிருக்கும் நீரை வெளியே விட மற்றொரு ஜோடியும் இருக்கும். இப்போது நம் முன் உள்ள கேள்வியே, மனிதன் மீனிலிருந்து தோற்றம் பெற்றவன் ஆனால், மற்றொரு ஜோடி மூக்கு துவாரம் எங்கே போய்விட்டன?
சோவானி (Choannae)என்று அழைக்கப்படும் உள் மூக்குத் துளைகளாக தலையின் பின்பகுதிக்குள் அவை சென்றுவிட்டன.  ‘Funnels’ என்னும் கிரேக்க சொல்லில் இருந்து உருவானது இது. இவை தொண்டையுடன் மூக்கை இணைப்பதால், மூக்கினால் நம்மால் சுவாசிக்க முடிகிறது. இதைச் செய்வதற்கு அவை பற்களினூடே எவ்வாறாகினும் வேலை செய்யத்தான் வேண்டும். இது நடைமுறை சாத்தியமற்றது என்று கருதப்பட்டாலும், சீனாவிலும், ஸ்வீடனிலும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள  கென்னித்தியா கேம்பலி(Kenichthys campbelli ) என்னும் 395 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மீன் படிமம் இந்த நடைமுறையின் பாதி வழியைக் காட்டுகிறது. இந்த மீனுக்கு அதன் முன் பற்களுக்கிடையே மூக்குத் துளைகள் போன்ற இரு துளைகள் இருந்தன. இந்த மீன் நிலத்தில் வாழும் விலங்கினங்களின் நேரடியான முந்தைய மூதாதை ஆகும். அந்த நிலத்தில் வாழ்ந்த விலங்குகளினால் நிலத்திலும், நீரிலும் மூச்சு விட முடியும். நீரில் அமிழ்ந்திருந்து உண்பதற்கு ஒரு ஜோடி மூக்குத்துளைகள் அனுமதிக்கும்போது, மற்றொரு ஜோடி மூக்குத்துளைகள் தண்ணீருக்கு மேல் முதலையைப் போல நீட்டிக் கொண்டிருக்கும்.
மனிதக் கருவின் ஆரம்ப காலத்தில் அதன் பற்களிடையே இத்தகைய இடைப்பொறிகளைக் காணமுடியும்.  அந்த இடைவெளி ஒன்று சேரத் தவறிவிட்டால், குழந்தையின் உதடு பிளந்து காணப்படுகிறது. எனவே ஒரு பழைமையான மீன் இரண்டு பழைமையான புதிர்களுக்கு விடையளிக்கிறது.
அண்மையில் மூக்குகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பல்வகைப்பட்ட மணங்களை, நுகர நமது ஒரு ஜோடி வெளிப்புற மூக்குத் துளைகளை நாம் பயன்படுத்துகிறோம் என்பதும், ஆனால் ஒவ்வொரு மூக்குத் துளையும் வெவ்வேறு அளவில் மூச்சுக் காற்றை சுவாசிப்பதால் ஒரு மாதிரியான ஸ்டீரியோ மூக்கொலியை ஏற்படுத்துகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...